இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 7 சதவீதமாக குறைப்பு.. S&P வெளியிட்ட புதிய கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவம்பர் 28 அன்று எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது.

ஆனால் உள்நாட்டில் நிலவும் அதிகப்படியான தேவையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா தற்போது இருக்கும் காரணத்தால் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் குறைவான அளவிலேயே பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் (2023-24) 6.5 சதவீதமும் வளர்ச்சியடையும் என எஸ்&பி செப்டம்பர் மாதம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% ஆக குறையலாம்.. எஸ்&பி எச்சரிக்கை! இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% ஆக குறையலாம்.. எஸ்&பி எச்சரிக்கை!

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் 2021 இல் 8.5% வளர்ச்சியடைந்தது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் S&P அமைப்பின் காலாண்டு பொருளாதாரம் வளர்ச்சி அப்டேட்டில், சில நாடுகளில் கொரோனா தொற்றில் இருந்து உள்நாட்டு தேவை மேலும் மீட்சி அடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இப்படி மீட்சி அடையும் போது இந்தியாவின் வளர்ச்சியை இது பெரியளவில் ஆதரிக்கும் என்று கூறியது.

பணவீக்கம்

பணவீக்கம்

இதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் சராசரியாக 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், மார்ச் 2023க்குள் RBI இன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதம் 6.25 சதவீதமாக ஆக உயரும் என்றும் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் அமைப்பு கணித்துள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, RBI ஏற்கனவே 1.9 சதவிகிதப் புள்ளிகள் அதிகரித்து 3 ஆண்டுகளில் அதிகபட்சமாகத் தனது ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் போர்

பிப்ரவரி மாத இறுதியில் துவங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் மூலம் சர்வதேச விநியோகச் சங்கிலி சீர்குலைந்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலான நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை பணவீக்கம் நடப்பு ஆண்டில் பெரும்பகுதி காலம் உயர்வாக இருந்த பின்னர் அக்டோபரில் சரிந்துள்ளது.

எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ்

எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ்

கடந்த மாதம் சில்லறை பணவீக்கம் (CPI) 3 மாதங்களில் குறைந்தபட்சமாக 6.7 சதவீதமாகவும், மொத்த விற்பனை பணவீக்கம் (WPI) கடந்த 19 மாதங்களில் குறைந்தபட்சமாக 8.39 சதவீதமாக இருந்தது என எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்னிய செலாவணி

அன்னிய செலாவணி

அன்னிய செலாவணி பொறுத்தவரை, ஆசியாவில் வளர்ந்து வரும் பெரும்பாலான சந்தைகளில் நாணய மதிப்பைச் சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சியடைந்து உள்ளதாக எஸ்&பி தெரிவித்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்த ரூபாய் மதிப்பு 79.50 ஆக இருந்த நிலையில், தற்போது 81.77 ரூபாயாக உள்ளது.

காரணங்கள்

காரணங்கள்

உலகப் பொருளாதாரத்தின் மந்தநிலை, ரஷ்யா-உக்ரைன் போர், வட்டி விகிதங்கள் மற்றும் உள்நாட்டுப் பணவீக்கம் ஆகியவற்றின் மந்தநிலையை மேற்கோள் காட்டி நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது என எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

 உலக வங்கி, IMF, RBI

உலக வங்கி, IMF, RBI

உலக வங்கி இந்தியாவிற்கான அதன் வளர்ச்சி மதிப்பீட்டை 6.5% ஆகவும், IMF 7.4% இல் இருந்து 6.8% ஆகவும் குறைத்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியும் முந்தைய 7.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

S&P cuts India's GDP growth forecast to 7 percent for FY 2023; RBI may increase Repo rate

S&P cuts India's GDP growth forecast to 7 percent for FY 2023; RBI may increase Repo rate
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X