சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை ஒவ்வொரு நாளும் பூதாகரமாக மாறி வருகிறது. சென்னை, மும்பை , பெங்களூரு என பெரும்பாலான நகரங்கள் இதனால் ஸ்தம்பித்து போயுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் திடீரென வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திவிட்டன. எனவே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஏராளமான உணவகங்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. கையிருப்பில் இருக்கக்கூடிய சிலிண்டர்களை வைத்துக்கொண்டு உணவகங்கள் இயங்கி வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் தங்களுடைய உணவகத்தில் விற்பனை செய்து வரக்கூடிய உணவுகளின் பட்டியலிலும் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வந்து விட்டன. இந்த சூழலில் சிலிண்டர்கள் கிடைக்காததால் சென்னையில் மட்டும் 215 சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள் மூடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

அதே வேளையில் பெரிய அளவிலான உணவகங்கள் தொடர்ந்து கடையை நடத்த வேண்டும் என்பதற்காக விறகு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறி இருப்பதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவல் குறிப்பிடுகிறது. சிலிண்டர் இருப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகளின் அடிப்படையில் உணவகங்களை திறப்பது குறித்தும் உணவு வகைகளை மாற்றி அமைப்பது குறித்தும் ஹோட்டல் நிறுவனங்கள் முடிவெடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே டீக்கடைகளில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி ஆகியவற்றின் விலை கூடியிருக்கிறது. 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீயின் விலையை 15 ரூபாய் என்றும், 15 ரூபாய்க்கு விற்பனையாள காபியின் விலை 20 ரூபாய் என்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரபல ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தங்கள் அலுவலக கேண்டீன்களில் குறிப்பிட்ட சில வகை உணவுகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் கேண்டினில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக குறைந்த வகை உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறு சிறு உணவகங்கள் தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைத்திருக்கக்கூடிய சிலிண்டர்களை கொண்டு கடையை நடத்துகிறார்களாம்.
சென்னை நகரத்தில் நேற்றே சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமான உணவகங்கள் எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது. அந்த எண்ணிக்கை இன்று 30% ஆக உயர்ந்துள்ளதாம். உணவகங்களை அத்தியாவசிய சேவை என்ற பிரிவின் கீழ் வரையறை செய்து தொடர்ச்சியாக எல்பிஜி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான வெங்கடசுப்பு கேட்டு கொண்டுள்ளார்.
வசந்த பவன், அடையார் ஆனந்த பவன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய 80 சதவீத உணவு தயாரிப்பினை மின்சார அடுப்புகளுக்கு மாற்றி விட்டன. விடுதிகள் , மெஸ்கள், கேண்டீன்களில் எல்லாம் டீ , காபி நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல சப்பாத்தி ,தோசை போன்றவை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications