மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகப்பிரிவில் சில்வர் லேக் நிறுவனத்தின் இணை முதலீட்டாளர்கள், 1,875 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் முன்னதாக 1.75% பங்குகளை, 7,500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்தது. இந்த நிலையில் தற்போது சில்வர் லேக் நிறுவனத்தின் இணை முதலீட்டாளார்கள், மீண்டும் 1,875 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.
ஆக மொத்ததில் இதுவரை 9,375 கோடி ரூபாய் முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனத்தின் 2.13% பங்குகளை, சில்வர் லேக் நிறுவனம் மற்றும் அதன் இணை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது அண்மையில் அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், 3,675 கோடி ரூபாயினை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த முதலீடு குறித்து ஆர்ஐஎல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கூறுகையில், சில்வர் லேக் மற்றும் அதன் இணை முதலீட்டாளர்கள், அனைத்து இந்தியர்களின் நலனுக்காக இந்திய சில்லறை விற்பனையை மாற்றுவதற்கான எங்கள் பயணத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் நாங்கள் பெற்றுள்ளோம். சில்வர் லேக்கின் கூடுதல் முதலீடு என்பது இந்திய சில்லறை விற்பனையின் மிகப்பெரிய தூண்டுகோலாக இருக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் பேங்குக்கு நேரம் சரியில்ல! புகழ்பெற்ற Sintex கம்பெனி கடனை மோசடி என அறிவித்த வங்கி!
சில்வர் லேக்கின் இணை தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக பங்குதாரருமான எகோன் டர்பன் இது குறித்து கூறுகையில், எங்களின் இந்த முதலீடு குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக இந்தியா நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் கால்பதித்து வருகிறது. ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வந்தாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் சமீபத்தில் தான் ஜியோமார்ட் என்ற பெயரில் களமிறங்கியது ரிலையன்ஸ். சில்லறை வர்த்தகத்தில் நாடு முழுவதும் 12,0000 மேற்பட்ட சில்லறை கடைகள் ரிலையன்ஸூக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.