ஹலோ இந்தியா.. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.. தாலிபான் திடீர் அழைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும் போராட்டத்திற்குப் பின்பு ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றிய தாலிபான்களுக்கு நாட்டை மேம்படுத்துவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

ஒருபக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் நிதி இருப்புகள் வெளிநாட்டு வங்கிகளில் மாட்டிக்கொண்டு இருக்கும் நிலையில்,மறுபுறம் பணவீக்கம், வர்த்தகப் பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு, நிதிப் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இதனால் வளர்ச்சியில் ஒரு படி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தனது நிலையை உணர்ந்து வெளிநாடுகளின் உதவிகளை நாடி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குப் புதிய தடை..!ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குப் புதிய தடை..!

தாலிபான்கள்

தாலிபான்கள்

தாலிபான் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆப்கானிஸ்தான் அரசு சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசிடம் நிதியியல் சேவைத் துறையில் உதவிகளை நாடியது. இதைத் தொடர்ந்து தற்போது தாலிபான் அரசு ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யக் கோரியும், நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தக் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியா

இந்தியா

தாலிபான்கள் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிடம் அதிகப்படியான உதவிகளைக் கேட்ட முக்கியக் காரணம் இந்தியா ஆப்கானிஸ்தான் நாட்டின் முந்தைய ஆட்சியில் அதிகப்படியான உதவிகளைச் செய்தது.

நியூ காபூல் சிட்டி திட்டம்

நியூ காபூல் சிட்டி திட்டம்

இதைச் சமீபத்தில் இந்தியாவின் டெக்னிக்கல் டீம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துகொண்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்தியத் தொழிலதிபர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் நியூ காபூல் சிட்டி திட்டத்தில் அர்பன் மற்றும் ஹவுசிங் துறையில் கட்டாயம் முதலீடு செய்யும் என ஆப்கானிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

கல்வி

கல்வி

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், அந்நாட்டு மக்களுக்குச் சிவில் மற்றும் அர்பன் டெவலப்மென்ட் பிரிவில் முதுகலை மற்றும் PhD பட்ட படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கக் கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் கட்டுமான திட்டத்தில் போதுமான ஊழியர்களை உருவாக்குவது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் வாயப்பை பெரும் என இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

 இந்தியாவின் உதவி

இந்தியாவின் உதவி

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்பு அந்நாட்டின் முந்தைய ஆட்சிக்கு அதிகளவிலான உதவிகளைப் பல்வேறு பேச்சுவார்த்தை மற்றும் உறுதி அளித்த பின்பு இந்தியா உட்பட உலக நாடுகள் அதிகளவிலான உதவிகளைச் செய்து வந்தது.

தாலிபான் வருகை

தாலிபான் வருகை

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சி, குறிப்பாகப் பெண்களுக்கான சுதந்திரம் ஆகிய அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் தாலிபான் கைப்பற்றிய நாளில் இருந்து இந்தியா உட்பட உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவுவதை நிறுத்தியது இதனால் ஆப்கானிஸ்தான் நிலை தலைகீழாக மாறியது.

3 பில்லியன் டாலர்

3 பில்லியன் டாலர்

ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான் கைப்பற்றுவதற்கு முன்பு இந்தியா அந்நாட்டில் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்கு முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முக்கிய உதவிகள்

இந்தியாவின் முக்கிய உதவிகள்

முந்தைய ஆட்சியின் போது இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டில் 42MW சல்மா அணை, 218-கிமீ ஜரஞ்ச்-தெலாரம் நெடுஞ்சாலை, காபூலில் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் கட்டுமான பணிகளில் அதிகப்படியான உதவிகளைச் செய்தது.

அஷ்ரஃப் கனி - நரேந்திர மோடி

அஷ்ரஃப் கனி - நரேந்திர மோடி

இதை விட முக்கியமாக 2016 ஆம் ஆண்டில், அப்போதைய ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் காபூலில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Stor Palace-ஐ மீட்டெடுக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. இந்தியா, காபூலில் பெரிய மருத்துவமனையைக் கட்டியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு செக் வைத்த தாலிபான்கள்.. ஷெபாஸ் ஷெரீப் அதிர்ச்சி..! பாகிஸ்தானுக்கு செக் வைத்த தாலிபான்கள்.. ஷெபாஸ் ஷெரீப் அதிர்ச்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taliban govt request India for investments, scholarships in Afghan urban infrastructure

Taliban govt request India for investments, and scholarships in Afghan urban infrastructure
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X