பெருத்த அடி வாங்கியுள்ள சுற்றுலா துறை.. ரூ.15 டிரில்லியன் இழப்பு ஏற்படலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கத்தினால் ஆட்டம் கண்டுள்ள பொருளாதாரம், முடங்கி போன தொழில்சாலைகள், நிறுவனங்கள் என பலவும் பலத்த அடி வாங்கியுள்ளன. அதன் எதிரொலியாக இதுதான் இப்படி எனில் தனி நபர் வருவாயும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

 

இப்படி இது ஒரு புறம் பொருளாதார பெருத்த அடி வாங்கியுள்ள மக்கள், பொதுப் போக்குவரத்து தடையினால் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெருத்த அடி வாங்கியுள்ள சுற்றுலா துறை.. ரூ.15 டிரில்லியன் இழப்பு ஏற்படலாம்..!

அதிலும் இன்றைய காலகட்டத்தில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்களின் கொரோனாவுக்கு முன்பு போல வெளியில் செல்வார்களா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் போக்குவரத்தினை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா துறையானது, கொரோனாவால் பெருத்த அடி வாங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று இந்தியாவின் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில், நடப்பு ஆண்டில் இழப்பானது 15 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 5 டிரில்லியன் டாலர் இழப்பினை விட கணிசமாக அதிகமாகும்.

கொரோனா வைரஸ் ஆனது நாடு முழுவதும் மிகவேகமாக பரவியுள்ள நிலையில், இந்தியாவில் சுற்றுலா தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்த ஐந்து மாதங்கள் வரையில் மீட்க முடியாது என்றும் இத்துறை சார்ந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு மொத்த தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் சுற்றுலா துறையின் நேரடி மற்றும் மறைமுக தாக்கம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய இந்த வைரஸ் பரவலால் குறைந்தபட்சம் முக்கால்வாசி சுற்றுலா பாதிக்கப்படும் என்றும் இந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த துறையுடன் சம்பந்தபட்ட விமான நிறுவனங்கள், பயண முகவர்கள், ஹோட்டல்கள், டூர் ஆப்பரேட்டர்கள் முதல் சுற்றுலா இடங்களில் உள்ள உணவகங்கள், போக்குவரத்து மற்றும் வழிகாட்டிகள் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இன்னும் பல மாதங்கள் கூட அப்படியே இருக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த துறையில் முறை சார்ந்த மற்றும் முறைசாரா துறையில் முழு ஆண்டிற்கான வேலை இழப்புகள் 4 கோடி வரை உயரக்கூடும் என்றும் இந்த அமைப்பு கணித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tourism dept estimates approximately Rs.15 trillion losses amid coronavirus

Coronavirus impact.. Tourism dept estimates approximately Rs.15 trillion losses amid coronavirus
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X