நம்மூரு டிவிஎஸ்.. எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்டப் நிறுவனத்தில் ரூ.30 கோடி முதலீடு.. பரபர அறிவிப்பு என்ன!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மூரு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், சென்னையை தளமாக கொண்ட எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்டப் நிறுவனமான அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் கூடுதலாக 30 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், இந்த ஸ்டார்டப் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்திருந்ததாக அறிவித்துள்ளது.

மீண்டும் முதலீடு

மீண்டும் முதலீடு

இது கடந்த 2018-லேயே 6 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்ததாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் மனு சக்சேனா, அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களையும், உயர் செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள்களை உருவாக்குவதில் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

டிவிஎஸ் மோட்டார் இது குறித்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பசுமையான எதிர்காலத்தினை நிறுவுவதற்கு, நீண்ட தூரம் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். இதே அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயண் சுப்பிரமணியம், டிவிஎஸ் நிறுவனம் உலகளவில் போட்டியிட எங்களுக்கு உதவியாக இருந்துள்ளது. எதிர்கால தீர்வுகளை உருவாக்குவதற்கான எங்கள் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. அவர்களுடனான தொடர்ச்சியான கூட்டாண்மை குறித்த நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் கண்ட நிறுவனம்
 

முன்னேற்றம் கண்ட நிறுவனம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அதிக செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள் எஃப்77ஐ உருவாக்கும் திட்டங்களை அறிவித்தது. இந்த நிலையில் தான் கடந்த நவம்பரில் இது மின்சார பைக்கின் முன் தயாரிப்பு பதிப்பை வெளியிட்டது. அதன் பின்னர் எஃப்77 உற்பத்தியை தயார் செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் என்று சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

எதிர்காலம் எப்படி இருக்கும்?

இனி வரும் காலத்தில் எலெக்ட்ரிக் வாகன சந்தை தான் ஆதிக்கம் செலுத்தும் என்ற நிலையே இருந்து வருகிறது. அண்டை நாடுகளில் இந்த கலாச்சாரம் இருந்து வந்தாலும்., இந்தியாவில் இன்னும் அவ்வளவாக மின்சார வாகன கலாச்சாரம் அமலுக்கு வரவில்லை. எனினும் நிச்சயம் அடுத்த தலைமுறையில் மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட டிவிஎஸ் நிறுவனம், முன்கூட்டியே அட்வான்ஸாக செயல்பட்டு வருவது உண்மையில் நல்ல விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TVS motors invests Rs.30 crore in Chennai based electric vehicle start up

Chennai based TVS motors invests Rs.30 crore again in electric vehicle start up
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X