டெல்லி: நாட்டில் நகர்புற வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 8.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 1.3% வளர்ச்சி கண்டுள்ளது.
இதுவே ஜூன் காலாண்டில் 8.9% ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவின் படி, கடந்த 2019வுடன் முடிவடைந்த காலாண்டிற்கான வேலைவாய்ப்பு குறிகாட்டிகளை வெளியிட்டது. இது கடந்த 2017 - 2018ம் ஆண்டில் தொடக்கப்பட்ட புதிய கால தொழிலாளர் படை கணக்கெடுப்பின் அடிப்படையிலான (PLFS) தரவுகள், நகர்புறங்களுக்கு மட்டுமே மதிப்பீடுகளை வழங்குகிறது.
கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில், நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.4% சரிவு கண்டுள்ளது. இந்த விகிதத்தில் 15 - 29 வயதுடையவர்காள் 20.6% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர்களுக்கு 8.3% ஆகவும் இருந்துள்ளது. இதே தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) 36.8% ஆகவும் இருந்துள்ளது. இதில் 56.6% ஆண்களும், பெண்கள் 16%மும் பங்களித்துள்ளனர். இதே கடந்த ஜூலை - செப்டம்பர் 2018ம் காலாண்டில் இந்த LFPR 36.1% ஆகவும் இருந்துள்ளது.
செப்டம்பர் 2018ல் வேலையின்மை விகிதம் 9.7% இருந்துள்ளது. நடப்பு ஆண்டின் ஜூன் காலாண்டில் இந்த வேலையின்மை விகிதம் 8.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. நகர்புறங்களில் 2019 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 49.6% பேர் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது வழக்கமான கூலி தொழிலாளர்கள்.
இதில் 38.3% பேர் சுயதொழில் செய்பவர்கள், 12.1% பேர் சாதாரண தொழிலாளர்கள். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் 2019 காலாண்டுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் செய்பவர்களின் பங்கு 1.6% அதிகரித்துள்ளது. இதுவே வழக்கமான ஊதியம் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் பங்கு முறையே 0.8% மற்றும் 1.6% குறைந்துள்ளது.
இதே கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் மற்றும் வழக்கமான கூலித் தொழிலாளர்கள் 0.3% மற்றும் 1% ஆக அதிகரித்துள்ளது. எனினும் சாதாரணமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.7% குறைந்துள்ளது.
இதில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நகர்புற தொழிலாளர்களில் 62% பேர் மூன்றாம் நிலைத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதே 32.8% பேர் இரண்டாம் நிலைத் துறையிலும், 5.2% விவசாயத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜூன் 2019ம் காலாண்டுடன் ஒப்பிடும்போது விவசாயத்துறையில் வேலை விகிதம் 6.1% அதிகமாகவும், இரண்டாம் நிலை துறையில் பணிபுரிபவர்களின் பங்கு 1.2% குறைவாகவும் இருந்துள்ளது.