அமெரிக்க நிறுவனம் அதிரடி.. ஏர்டெல்லின் டேட்டா வர்த்தகத்தில் ரூ.1,774 கோடி முதலீடு செய்ய திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவைச் சேர்ந்த கார்லைல் குழுமம், பார்தி ஏர்டெல்லில் தரவு டேட்டா நிறுவனமான Nxtra Dataவில் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து வெளியான செய்தியில், அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கார்லைல் குழுமம், இந்தியாவின் பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான டேட்டா சென் டர் வணிகத்தின் (Nxtra Data) 25 சதவீத பங்குளை வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக கார்லைல் குழுமம் 235 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் 1,774.25 கோடி ரூபாய்) முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

ஆக இந்த ஒப்பந்ததிற்கு பிறகு கார்லைல் குழுமத்திடம் 25 சதவீத பங்குகளும், பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் 75 சதவீத பங்குகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் முதலீட்டினை வைத்து, நாடு முழுவதும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்த பயன்படுத்தும் என்றும் Nxtra தெரிவித்துள்ளது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

விரைவான டிஜிட்டல் மயமாக்கல் என்பது, இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பினைக் கொடுத்துள்ளது. ஆக இந்த பிரிவில் நாங்கள் முக்கிய பங்கு வகிக்க எங்கள் முதலீடுகளை விரைவுபடுத்த உள்ளோம் என்றும் பார்தி ஏர்டெல்லின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

மிக்க மகிழ்ச்சி
 

மிக்க மகிழ்ச்சி

ஆக இந்த உற்சாகமான பயணத்தில் கார்லைல் நிறுவனத்தின் பங்கு இருப்பதால் மகிழ்ச்சியைடைகிறோம். குறிப்பாக இந்த துறையில் அவர்களின் அனுபவத்தினை இந்த துறையில் கொடுத்திருப்பது, அதோடு அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றும் கோபால் தெரிவித்துள்ளார். பார்தி ஏர்டெல்லியின் Nxtra டெல்லியை அடிப்படையாக கொண்டது.

விரிவுபடுத்தி வருகிறது

விரிவுபடுத்தி வருகிறது

இது இந்தியாவில் மிகப்பெரிய 10 தரவு மையங்களைக் கொண்டுள்ளது. மேலும் நாட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்புகளைக் பிடிக்க பல பெரிய தரவு மையங்களையும் உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு தான் Nxtra புனேவில் ஒரு தரவு மையத்தினை உருவாக்கியது. மேலும் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் கட்டி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US based Carlyle will invest Rs.1,774 crore in bharti airtels data centre business

US based Carlyle group will invest $235 million in bharti airtel’s data centre business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X