அமெரிக்கா இந்தியாவுக்கு வைக்கும் பலே செக்.. ஜிஎஸ்பி திரும்ப வேண்டுமா? அப்படின்னா அதை செய்யுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு புறம் சீனாவுக்கு இந்தியாவுக்கு இடையில் நிலையில் பதற்றமான நிலை. மறுபுறம் கொரோனாவால் ஸ்தம்பித்துபோயுள்ள மக்கள், பொருளாதார வீழ்ச்சி என சுற்றி சுற்றி அடி வாங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, இது மிக மோசமான காலமே.

 

ஆனால் தற்போது இதனையெல்லாம் மறக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து பறித்துக் கொண்ட ஜிஎஸ்பி சலுகைகை மீண்டும் திருப்பி அளிக்கப்படலாம் என்பது தான்.

இது குறித்து டிரம்ப் அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக பிசினஸ் ஸ்டேர்டர்டு செய்தி மூலம் அறிய முடிகின்றது.

இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

அமெரிக்கா இதற்காக தற்போது இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது அந்த அறிக்கை. இது குறித்து வெளியான செய்தியில், அமெரிக்கா நாங்கள் தொடர்ந்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களின் ஜிஎஸ்பியை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம். அதனை திரும்ப கொடுக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

இந்தியாவுக்கு சாதகமாகுமா?

இந்தியாவுக்கு சாதகமாகுமா?

ஆனால் இந்தியாவிடமிருந்து போதுமான எதிர் சமநிலைப்படுத்தும் திட்டத்தினை பெற முடிந்தால், விரைவில் அதனை செய்யலாம் என்றும், ஆக அதனை மீட்டெடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளோம் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் செனட் நிதி குழு உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். அதாவது இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு, அமெரிக்கா பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் நிலைப்பாடு.

ஆப்பிளுக்கு அதிக வரி
 

ஆப்பிளுக்கு அதிக வரி

இது குறித்து வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த செனட்டர் மரியா கான்ட்வெல்லின் கேள்விக்கு பதிலளித்த ராபர்ட், இப்போது வரையில் நாங்கள் இது குறித்து நாங்கள் பேசவில்லை. ஆனால் தற்போது தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார். செனட்டர் மரியா தனது மாநிலத்திலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிளுக்கு அதிக இறக்குமதி கட்டணங்கள் விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை தீரலாம்

எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை தீரலாம்

இந்தியா தற்போது ஆப்பிளுக்கு 70 சதவீத வரி விகிதத்தினைக் கொண்டுள்ளது கவனிக்கதக்கது. இது குறித்து டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தற்போது இந்தியாவுடம் மிகப்பெரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை நீங்களும் அறிந்துள்ளீர்கள். இது எப்போது வேண்டுமானாலும் FTA வுக்கு செல்லலாம். எப்போது வேண்டுமானாலும் முன்னேறி செல்ல முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 பருப்பு வகைகளுக்கு இந்தியா முக்கிய சந்தை

பருப்பு வகைகளுக்கு இந்தியா முக்கிய சந்தை

இதோ இன்னொரு உயர் அதிகாரி அமெரிக்க, இந்தியாவுடன் பெரிய வர்த்தக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மொன்டானாவைச் சேர்ந்த ஸ்டீவ் டெய்ன்ஸ் என்பவர், பருப்பு வகைகளின் அதிக இறக்குமதி கட்டணம் குறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். பருப்பு வகைகளின் மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் மொன்டோனா விவசாயிகளுக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மிக அதிக கட்டணம்

மிக அதிக கட்டணம்

துரதிஷ்டவசமாக அமெரிக்கா பருப்பு வகைகள் இந்திய சந்தையில் அதிக கட்டணங்களை எதிர்கொள்கின்றன. இது நியாயமற்ற ஒரு முறையாகும் என்றும் டெய்ன்ஸ் கூறியுள்ளார். இந்தியா வைத்திருக்கும் MFN tariffs கட்டணங்கள் பருப்பு வகைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மிக அதிகம். உலக வர்த்தக அமைப்பின் மீது எனக்குள்ள குற்றசாட்டுகளில் இதுவும் ஒன்று என்றும் லைட்ஹைசர் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

விரைவில் நல்ல முடிவு

விரைவில் நல்ல முடிவு

எனினும் இந்தியாவுடனான பேச்சு வார்த்தைகள் நாங்கள் எதிர்பார்த்தை விட, இந்தியா அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் தங்கள் கட்டணங்களை வைத்திருக்க வலியுறுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு நியாயமான ஒப்பந்தத்தினை பெற வலியுறுத்துகிறோம். எனவே இன்னும் நாங்கள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆக நாங்கள் விரைவில் ஒரு நல்ல முடிவினை பெறுவோம் என்றும் லைட்ஹைசர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கே நிபந்தனை

இந்தியாவுக்கே நிபந்தனை

ஜிஎஸ்பி ரத்தால் இந்தியா பெரும் சலுகைகளை இழந்ததோடு, பல இழப்புகளையும் சந்தித்தது எனலாம். இப்படியொரு நிலையில் இந்தியா தனக்கு கிடைத்து வந்த பலவருட சலுகையை இழந்தது என்று தான் கூற வேண்டும். இந்தியாவுக்கு இழந்த சலுகை மீண்டும் கிடைக்க வேண்டுமானால், அமெரிக்காவின் விவசாய பொருட்களை கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக. ஜிஎஸ்பியை ரத்து செய்த நேரத்திலேயே பல செய்திகள் வெளியாகின.

இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்

இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்

இந்தியா ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்து வரும் நிலையில், கூடுதலாக சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள, அமெரிக்க விவசாய பொருட்களை இறக்குமதி செய்தால், வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இந்தியாவைப் மீண்டும் இணைத்துக் கொள்வதாக அமெரிக்கா தெரிவித்ததாக முன்னர் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இது பலே செக் தான்

இது பலே செக் தான்

ஆனால் இன்று வரையில் அமெரிக்கா தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அமெரிக்க எதிர்பார்ப்பது போல், வரியை இந்தியா குறைக்குமா? அமெரிக்கா பொருட்களை இறக்குமதி செய்யுமா? இல்லை பிரதமர் மோடி கூறியது போல உள் நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்குமா? ஆக மொத்தத்தில் இந்தியாவுக்கு இது பலே செக் தான்.. என்ன செய்யப் போகிறோம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US top officials said waiting for a fair deal proposel to restore india’s GSP

A top official from trump administration says waiting for a fair deal proposal to restore india’s GSP.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X