ஹால்மார்க் என்றால் என்ன? தங்கத்தின் தரத்தை அளவு செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய உலகில் பணத்திற்கு இருக்கும் மதிப்பை விட தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு அதிகம். பணம் என்பது ஒரு சாதாரண பேப்பர் தான் என எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். ஆனால் தங்கம் எப்போதும் தங்கம் தான், அதன் மதிப்பு எப்போதும் விழவே விழாது என்ற நம்பிக்கையின் காரணமாக தான் தங்கத்தை அணிகலனாக மட்டுமின்றி ஒரு முதலீடாகவும் அனைவரும் வாங்கி வருகின்றனர்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தங்க நகை பயன்படுத்தும் வழக்கம் வந்துவிட்ட நிலையில் தற்போது மேல் நாட்டவர்களும் தங்கத்தின் மீது மோகம் கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் தங்கத்தை எப்போது வாங்கப் போனாலும் ஹால்மார்க் இடம் பெற்றிருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஹால்மார்க் என்றால் என்னவென்று தெரியாமலேயே பொதுமக்கள் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா? என்று கேட்டு தங்கம் வாங்கி செல்கின்றனர்.

அதானி குழும பங்குகள் 5% வரையில் சரிவு.. கவலையில் முதலீட்டாளர்கள்..! அதானி குழும பங்குகள் 5% வரையில் சரிவு.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

ஹால்மார்க் என்றால் என்ன?

ஹால்மார்க் என்றால் என்ன?

ஹால்மார்க் என்றால் என்ன? அந்த பெயர் அதற்கு எப்படி வந்தது? தங்கத்தின் தரத்தை அது எப்படி நிர்ணயம் செய்கிறது? என்பதைப் பார்ப்போம்.

ஹால்மார்க் பெயர் எப்படி வந்தது?

ஹால்மார்க் பெயர் எப்படி வந்தது?

தங்கத்தில் கலப்படம் செய்யாமல் விற்க வேண்டும் என்பதற்காக சுமார் 800 வருடங்களுக்கு முன் பிரிட்டனில் தான் முதல் முதலாக ஹால்மார்க் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய நகை வியாபாரிகள் சில உலோகங்களை தங்கத்துடன் எந்த அளவு சேர்கிறார்கள்? என்பதை எல்லோருக்கும் தெரியும்படி ஒரு ஹாலில் வைத்து நகை செய்தனர். ஹாலில் வைத்து தங்க நகைகளை செய்து அதன்பின் வியாபாரம் செய்வதால் தான் ஹால்மார்க் என்ற பெயர் இதற்கு வந்தது.

இந்தியாவில் ஹால்மார்க்

இந்தியாவில் ஹால்மார்க்

இந்தியாவை பொருத்தவரை ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் என்ற சோதனையை செய்கிறது.

ஹால்மார்க் பிரிவுகள்

ஹால்மார்க் பிரிவுகள்

ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது. அவை பின்வருமாறு:

1. BIS தர நிர்ணய் கழகத்தின் சின்னம்.

2. தங்கத்தின் தன்மை அல்லது மாற்று. உதாரணமாக 22 காரட் தங்கத்தில் 911 முத்திரையும், 21 தங்கத்தில் 875 என்ற முத்திரையும் இடப்பட்டிருக்கும்.

3. ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம்.

4. நகைகள் செய்யப்பட்ட வருடம் ரகசியமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

5. BIS அங்கீகாரம் வணிகரின் சின்னம்.

ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் மேற்கண்ட ஐந்து முத்திரைகளும் கண்டிப்பாக இருக்கும்.

ஹால்மார்க் கட்டாயம்

ஹால்மார்க் கட்டாயம்

சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ என்ற தங்க நகை ஏற்றுமதி செய்யும் 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்திய அரசு BIS தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. BIS ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Hallmark? How is hallmarking being implemented?

What is Hallmark? How is hallmarking being implemented? | ஹால்மார்க் என்றால் என்ன? தங்கத்தின் தரத்தை அளவு செய்வது எப்படி?
Story first published: Thursday, May 26, 2022, 14:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X