இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு காத்திருக்கும் தடைகள்.. கவனிக்க வேண்டியது என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பல நாடுகள் மந்த நிலையை எட்டியுள்ளன. இன்னும் சில நாடுகள் மந்த நிலையை எட்டலாம் என்ற நிலைக்குள் உள்ளன. ஆனாலும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது சற்றே நேர்மறையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

 

பல்வேறு தரப்பு நிபுணர்களும் இதனையே சுட்டிக் காட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சற்றே தாக்கம் இருந்தாலும், அது பெரியளவில் இருக்காது என்றும் தீர்க்கமாக நம்பப்படுகிறது.

தேவை குறையலாம்

தேவை குறையலாம்

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணிப்பில், அடுத்த ஆண்டில் 5.9% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது. இது 2022ம் ஆண்டில் 6.9% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அது தேவையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு கட்ட வளர்ச்சி

இரண்டு கட்ட வளர்ச்சி

அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி இரண்டு பகுதிகளாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முதல் பாதியில் மந்த நிலைக்கு இருக்கும் என கோல்டுமேன் சாச்சஸின் இந்திய பொருளாதார நிபுணர்கள் சாந்தனு சென்குப்தா தெரிவித்துள்ளார். அதே இரண்டாம் பாதியில் வளர்ச்சி மீண்டு வரும். உலகளாவிய வளர்ச்சியும் மீண்டு வருவதால் ஏற்றுமதி அதிகரிக்க ஆரம்பிக்கும். இதனால் வளர்ச்சி மீண்டும் மேம்படத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

 பணவீக்கம்
 

பணவீக்கம்

பணவீக்கம் என்பது இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் நிலையில், அது குறித்தும் கோல்டுமேன் எச்சரித்துள்ளது. 2023, ஆண்டில் நுகர்வோர் விலை குறியீடானது 6.1% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இது 2022ல் 6.8% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது அரசின் நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய விலை சரிவு என பலவும் விலைவாசியினை கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளது.

உலகளாவிய மந்த நிலை

உலகளாவிய மந்த நிலை

உலகளாவிய மந்த நிலை பற்றிய கவலைக்கு மத்தியில் இந்த வளர்ச்சி குறைப்பானது வந்துள்ளது. இது மூடீஸ் நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சியினை நடப்பு ஆண்டில் 7% ஆக குறைந்த நிலையில், கோல்டுமேனின் கணிப்பும் வந்துள்ளது. இது முன்னதாக 8.8%ல் இருந்து 7.7% ஆகவும் குறைக்கப்பட்டிருந்தது. இது கடந்த வாரத்தில் 7% ஆக குறைந்தது.

ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு

ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது.

இந்திய அரசு தொடர்ந்து மூலதன முதலீடானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வளர்ச்சி விகிதம் என்பது மிதமாக தொடர்ந்து இருக்கலாம் என்றும் , இது இரண்டாம் பாதியில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அமையலாம்.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

கோல்டுமேன் சாச்சஸ் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் பிப்ரவரி மாதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது ஏற்றுமதியானது சற்று சரிவில் உள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் இது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What's putting brakes on India's economic growth?

Goldman Sachs predicts India's economic growth rate to grow at 5.9% next year. Not only inflation, interest rate hikes, demand declines etc. are also positive factors to watch out for
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X