சீனாவுக்கு இந்தியா கொடுத்த அடுத்த அடி.. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் நீக்கம்.. யாருக்கு பிரச்சனை !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிக பிரபலமான செயலிகளான டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை, பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 59 சீன நிறுவன செயலிகளுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு.

இதில் டிக்டாக்,ஷேர் சாட், ஹலோ, ஷேர் இட், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ சாட் உள்ளிட்ட 59 ஆப்கள், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்தியா சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 59 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது.

வருவாய் போச்சே
 

வருவாய் போச்சே

இந்த செயலிகள் சிலருக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், பலருக்கு வருவாயை கொடுக்கும் ஒரு சாதனமாகத் தான் இருந்து வந்தது. ஆக அரசின் இந்த தடையானது இந்தியர்கள் பலரின் வருவாயை பறித்துக் கொண்டாலும், பாதுகாப்பு என்று வரும் போது தடை செய்வதில் தவறு ஏதும் இல்லையே.

மூன்றில் ஒருவர் பாதிப்பு

மூன்றில் ஒருவர் பாதிப்பு

இது குறித்து வெளியான அறிக்கை ஒன்றில், இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களில் மூன்றில் ஒருவர் இதனால் பாதிக்கப்படுவர் என்றும் கவுண்டர் பாயிண்டின் ஆராய்ச்சி நிறுவனமான தரும் பதக் கூறியுள்ளார். அதிலும் டிக் டாக் பயனர்கள் இதில் மிக அதிகம். அவர்கள் பெரிதும் பாதிக்கப்படலாம்.

எத்தனை பயனர்கள் பயன்பாடு

எத்தனை பயனர்கள் பயன்பாடு

டிக்டாக் மற்றும் யுசி பிரவுசர் உள்ளிட்ட பல ஆப்களை 50 கோடி பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டிக்டாக் பயனர்கள் மாதாந்திர செயலில் உள்ள 10 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டில் டிக்டாக் ஒரு வாரம் தடை செய்யப்பட்ட நிலையில், ஒரு நாளைக்கு 3.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாக டிக்டாக் உரிமையாளரான பைட் டான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

சீனா ஆப்களுக்களுக்கான நேரம் செலவிடல்
 

சீனா ஆப்களுக்களுக்கான நேரம் செலவிடல்

ஒரு அறிக்கையின் படி, இந்திய பயனர்கள் 2019ம் ஆண்டில் 550 கோடி மணி நேரங்கள் செலவிட்டதாக கூறப்பட்டது. இதே மற்றொரு அறிக்கையில், டிக்டாக்கின் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் டிசம்பர் 2019க்குள் 90% அதிகரித்து 81 மில்லியன் ஆக அதிகரித்ததாக கூறப்பட்டது. டிக்டாக்கிற்கு இந்தியாவில் செலவழித்த நேரம் என்பது அடுத்த 11 நாடுகளை விட அதிகமாகும்.

இந்தியாவில் பிரபலமான சீனா ஆப்கள்

இந்தியாவில் பிரபலமான சீனா ஆப்கள்

இவ்வாறு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆப்களில் சில இந்தியாவில் மிக பிரபலமாக உள்ளன. குறிப்பாக டிக்டாக், தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஹலோ, லைக், இதே வீடியோ அரட்டை பயன்பாடான பிகோ லைவ் ஆகியவை மிக பிரபலமான ஆப்களாக உள்ளன.

இந்திய படைப்பாளர்கள் வருவாய் ஆதாரம் பாதிப்பு

இந்திய படைப்பாளர்கள் வருவாய் ஆதாரம் பாதிப்பு

இதில் உள்ள மோசமான விஷயம் என்னவெனில், இந்த ஆப்கள் சீனாவுடையது என்றாலும், அந்த தளங்களில் உள்ள படைப்பாளார்கள் பெரும்பாலும் இந்திய படைப்பாளர்களே. அவர்களில் பலருக்கும் இது வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும் இருந்து வருகிறது. அதோடு ஹலோ உள்ளிட்ட சில ஆப்கள் அலுவலக பயன்பாட்டினையும் கொண்டுள்ளன. இதனால் பல அலுவலகங்களும் இதனால் பெரும் இழப்பினை சந்திக்க கூடும்.

ஆபத்தில் உள்ள வேலைகள்

ஆபத்தில் உள்ள வேலைகள்

அதோடு இந்த ஆப்களின் பின்னணியில் உள்ள சில ஆயிரம் இந்திய வேலைகள் ஆபத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் Paulson Institute's MacroPolo think tank வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்களில் முதல் 10 பயன்பாடுகளில் ஆறு சீனாவுடையது. மீதம் நான்கு அமெரிக்காவுடையது.

இந்தியா மிகப்பெரிய சந்தை

இந்தியா மிகப்பெரிய சந்தை

உலகின் இரண்டாவது மக்கள் தொகையினை கொண்ட நாடான இந்தியாவே, சீனா ஆப்களுக்கு மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது. இது அமெரிக்காவின் இணக்கமில்லாத பயனர்களை பிடிக்க முயற்சிக்கிறது. குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பயனர்களை பிடிக்க முயற்சிக்கிறது.

எத்தனை பேர் பதிவிறக்கம்?

எத்தனை பேர் பதிவிறக்கம்?

இந்த நிலையில் ஆராய்ச்சி நிறுவனமான Sensor Tower மதிப்பீட்டின் படி, தடை செய்யப்பட்ட 59 ஆப்கள் ஆப்பிள் இன்க் இந்தியா ஆப் ஸ்டோர் மற்றும் ஆல்ஃபபெட்டின் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சுமார் 490 கோடி ஆப்கள் ஜனவரி 2014ல் லிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 75 கோடி பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

சீனா முக்கிய பங்கு

சீனா முக்கிய பங்கு

ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து அதிகம் பதிவுசெய்யப்பட்ட 25 ஆப்களில் 8 சீனாவுடையது. சீனாவின் டிக்டாக் செயலியானது சீனாவினை விட மற்ற நாடுகளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது இந்தியாவில் தான். இதற்கு முக்கிய காரணம் அதிக மக்கள் தொகை. இந்த ஆப் 2018 ஜனவரி முதல் 65 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனராம்.

பலமான விற்பனை

பலமான விற்பனை

இந்த டிக்டாக் ஆப்பின் படி, இந்தியாவில் நடனம், அதனை படம் பிடிக்கும் எக்கியூப் மென்ட்ஸ், சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒர் அறிக்கையில், டிக்டாக் செயலி;ல் பதிவிட, லைட்டிங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், கேமராக்கள், கேமாராவை பொருத்து வைக்கும் ஸ்டேண்டுகள் இப்படி பலவற்றின் விற்பனை பலமாக இருந்ததாக கூறப்பட்டது.

வருமானம் பாதிக்கும்

வருமானம் பாதிக்கும்

ஏனெனில் இந்த டிக் டாக் செயலி மூலம் எவ்வளவு பயனர்களை உங்களால் கவர முடிகிறதோ? அந்தளவுக்கு உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இப்படி மத்திய அரசு தடை செய்த பல ஆப்களில் வருமானம் பெற்று வந்த சிலருக்கு பிரச்சனை என்றாலும், பாதுகாப்பினை ஒப்பிடும்போது இது பெரிய விஷயமல்ல என்று தான் கூற வேண்டும்.

மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்

மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்

இன்று உலகம் முழுக்க 155 நாடுகளில் 150 கோடிக்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் ஆப்பை, இந்தியாவில் மட்டும் பதிவிறக்கம் செய்தவர்கள் சுமார் 50 கோடி பேர். டிக்டாக் பயனாளர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தான்.

பிரபலமாகி வரும் இந்திய ஆப்

பிரபலமாகி வரும் இந்திய ஆப்

இந்தியா சீனா எல்லையில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், சீனப் பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரை பரவலாக எழுந்த போது கூட, பலரால் டிக்டாக்கை விட மனம் இல்லை என்று தான் கூறவேண்டும். எனினும் தற்போது டிக்டாக்கிற்கு மாற்றாக இந்தியாவின் மித்ரோன் எனும் இந்திய நிறுவன ஆப் ஒன்று பிரபலமாகி வருகின்றது.

சில பிரச்சனைகளும் உண்டு

சில பிரச்சனைகளும் உண்டு

கடந்த சில மாதம் முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, ஆரம்பகாலத்தில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மித்ரோன் செயலி, பாகிஸ்தானின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதால், ஆரம்பத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, தனிநபர் பாதுகாப்பு கொள்கை சரியில்லை எனச்சொல்லி கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரோன் செயலி நீக்கப்பட்டது.

எப்படி டவுன்லோடு செய்வது?

எப்படி டவுன்லோடு செய்வது?

எனினும் தற்போது தொழில்நுட்ப கோளாறுகளையும், தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சங்களையும் சரிசெய்து கொண்டு தற்போது மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பிடித்துள்ள மித்ரோன் ஆப் பலரால் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. புரியுது இத எப்படி பதிவிறக்கம் செய்யறதுன்னு தானே. வழக்கம் போல் பிளே ஸ்டோர் மூலம் மித்ரோன் என்று டைப் செய்தாலே கிடைக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What will be impact of ban 59 Chinese apps

Indian government announced the ban of 59 Chinese apps in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X