ரிஷி சுனக்-கின் விசா அறிவிப்பால் யாருக்கு பலன்.. எந்தெந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்தெடுக்கப்பட்ட நிலையில், இந்தியர்கள் மத்தியில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருந்தது. இது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராகியிருப்பது, இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் ஒரு விஷயமாகவும் பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு தருணத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான உறவு வலுப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.

இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு ரிஷி சுனக் தேவை.. பெருகும் ஆதரவுகள்..! இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு ரிஷி சுனக் தேவை.. பெருகும் ஆதரவுகள்..!

 இந்தியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு

இந்தியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு

இதற்கிடையில் தான் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கும், இந்திய பிரதமரான நரேந்திர மோடியும் முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாகவும் பார்க்கப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு சில மணி நேரங்களில் ரிஷி சுனக் தலைமையிலான இங்கிலாந்து அரசு, இந்தியர்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.

 2 ஆண்டுகள் அனுமதி

2 ஆண்டுகள் அனுமதி

அது ஒவ்வொரு ஆண்டும் இளம் இந்திய வல்லுனர்களுக்கு, இங்கிலாந்தில் பணியாற்ற 3000 பேருக்கு அனுமதி கொடுத்துள்ளது. இது இங்கிலாந்து - இந்தியா யங்க் புரபஷ்னல் ( UK - india young professionals) என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இங்கிலாந்தில் 18 - 30 வயதான பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு, இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி வேலை செய்ய அனுமதி கொடுத்தது.

 ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேருக்கு வாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேருக்கு வாய்ப்பு

இது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் ஒரு அதிகாரப்பூர்வ ட்வீட்டினையும் செய்துள்ளது. ஆக ஒவ்வொரு ஆண்டும் 18 - 30 வயதுடைய இளைஞர்கள் இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் பணிபுரிய ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் எனலாம்.

யாருக்கு பயன்?

யாருக்கு பயன்?

இங்கிலாந்தின் இந்த அறிவிப்பினால் டெக் ஊழியர்கள், சயின்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவு பட்டதாரிகள், இளம் ஊழியர்கள் என பலரும் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இதில் 18 வயது முதல் என்பதால் படிப்பினை முடித்து வெளியே வரும் இளம் பட்டதாரிகளும் இதனால் பெரும் பலன் அடைவர்.

தேவை எங்கு?

தேவை எங்கு?

எனினும் இங்கிலாந்தினை பொறுத்தவரையில் தற்போது ஹாஸ்பிட்டாலிட்டி துறை, கட்டுமானத்துறை, உற்பத்தி துறைகளில் அதிக தேவை இருப்பதாகவும், ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிப்பு யாருக்கு?

பாதிப்பு யாருக்கு?

இந்த வாரத் தொடக்கத்தில் தொழிலாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, விசா விதிகளை தளர்த்துமாறு கோரிக்கைகள் எழுந்தன. மேலும் தொழிலாளர் பற்றாக்குறை என்பது சம்பளத்தினை உயர்த்த வழிவகுக்கலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சியினை கட்டுப்படுத்தலாம் என்றும் கருத்துகள் எழுந்தன. இது நீண்டகால மற்றும் குறுகிய பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கருத்துகள் எழுந்தன.

 மாணவர்கள் அதிகம்

மாணவர்கள் அதிகம்

மற்ற நாடுகளை காட்டிலும் இங்கிலாந்து, இந்தியாவுடன் அதிக தொடர்புகளை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சர்வதேச மாணவர்களில் கால் பகுதி மாணவர்கள் இந்தியர்கள் தான். நாட்டில் இந்திய முதலீடுகள் 95,000 பேருக்கு வேலை வாய்ப்பினை கொடுத்து ஆதரித்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

 விசா அனுமதி

விசா அனுமதி

ஜூன் 2022வுடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ தரவுகள், இந்திய மாணவர்கள் 1,18,000 பேர் இங்கிலாந்து விசாவினை பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டினை விட 89% அதிகமாகும்.

 இது பயன் அளிக்குமா?

இது பயன் அளிக்குமா?

எது எப்படியோ இங்கிலாந்தின் அறிவிப்பால் ஆண்டுக்கு 3,000 பேர் பயன் பெறுவார்கள் என்பது நல்ல விஷயம் தான். எனினும் 18 - 30 வயதினர் மற்றும் 2 ஆண்டுகள் தான் என்பது சற்றே யோசிக்க வைக்கலாம். அமெரிக்காவின் ஹெச் 1பி விசாவுக்கே 3 ஆண்டுகள் அனுமதி அளிக்கப்படும் நிலையில், 3 ஆண்டுகள் அதிகரித்துக் கொள்ளவும் முடியும். ஆக மொத்தம் ஊழியர்களுக்கு 6 ஆண்டுகள் வரையில் அவகாசம் கிடைக்கலாம். ஆனால் இங்கிலாந்து விசா எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்பது அவர்களுக்கு கிடைக்கும் வேலையினை பொறுத்தே இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who benefits from UK's 3000 work visa for young Indian professionals?

Who will benefit from Rishi Sunak Visa announcement? Which sectors have more job opportunities?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X