உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள்-ன் உற்பத்தி கூட்டணி நிறுவனமான விஸ்திரான் 2019ல் கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் தொழிற்சாலையைப் பெரும் முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்தது.
இந்தத் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், ஊழியர்கள் மத்தியில் சம்பளம் குறித்த பிரச்சனை இருந்த வந்த நிலையில், ஊழியர்களை நிர்வாகத்தின் மீதான வெறுப்பைக் காட்டும் விதமான தொழிற்சாலை அடித்து உடைத்தனர்.
இந்தச் சம்பவத்தின் வாயிலாக விஸ்திரான் நிறுவனத்திற்குச் சுமார் 437 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாலையோர உணவகங்களுக்கு ஜாக்பாட்.. ஸ்விக்கி பிரம்மாண்ட திட்டம்..! #PM #SVANidhi

விஸ்திரான் நிறுவனம்
விஸ்திரான் நிறுவனத்தின் கோலார் மாவட்டத்தின் நார்சபூரா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில், பெருமளவிலான ஊழியர்கள் சம்பள பிரச்சனை காரணமாகக் கோபம் அடைந்து தொழிற்சாலையில் அலுவலகங்கள், அலுவலகங்களில் இருக்கும் பொருட்கள், கட்டிடங்கள், பல கம்பியூட்டர் மற்றும் மெஷின்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தி உள்ளது.

விஸ்திரான் அதிர்ச்சி
சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில் பல ஊழியர்கள் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களைத் தீயிட்டு உள்ளதாக விஸ்திரான் வீமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்தச் சம்பவம் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது என விஸ்திரான் தெரிவித்துள்ளது.

விஸ்திரான் நிறுவனத்தின் புகார்
விஸ்திரான் நிறுவனம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் சனிக்கிழமை தொழிற்சாலையில் நடந்த ஊழியர்கள் வன்முறையில் அலுவலகம், கருவிகள், மொபைல் போன், உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளது. இதனால் சுமார் 412.5 கோடி ரூபாய் மதிப்பிலான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

சேதமான பொருட்கள்
மேலும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டுமானம், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் கால்ப் கார்ட்ஸ், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட் ஆகியவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என விஸ்திரான் தனது புகாரில் விளக்கம் கொடுத்துள்ளது.

7000 போர்
விஸ்திரான் நிறுவனத்தின் புகாரின் படி சுமார் 5,000 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 2000 முகம் தெரியாத குற்றவாளிகள் சேர்ந்து இந்த வன்முறையை நடத்தியுள்ளதாக விஸ்திரான் புகார் அளித்துள்ளது.

149 பேர் கைது
இதுவரை காவல் துறையில் இந்த வன்முறையில் தொடர்புடையதாகச் சுமார் 149 பேரைக் கைது செய்துள்ளது.