பொலிவிழக்கும் சோமேட்டோ பங்குகள்.. ஐபிஓ-வுக்கு முன் இப்படியா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக இளம் தலைமுறை முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய விவாத பொருளாக இருக்கும் சோமோட்டோ ஐபிஓ நாளை ஜூலை 14ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், இதில் முதலீடு செய்யப் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

Rupee updates: சற்றே ஆறுதல் தந்த ரூபாய் மதிப்பு.. இப்படியே தொடருமா..! Rupee updates: சற்றே ஆறுதல் தந்த ரூபாய் மதிப்பு.. இப்படியே தொடருமா..!

இந்த வேளையில் கிரே மார்கெட் சந்தையில் சோமேட்டோ பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம்

டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம்

இந்தியாவில் முதல் முறையாக ஒரு ஸ்டார்ட்அப் டெக் நிறுவனம் (சோமேட்டோ) பட்டியலிடப்படுவதால் இதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. இதேவேளையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரும் காரணத்தால் இளம் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தனியார் முதலீட்டு நிறுவனம்

தனியார் முதலீட்டு நிறுவனம்

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து பல பில்லியன் டாலர் முதலீட்டைத் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் வாயிலாகப் பெற்று இருந்தாலும், பொது முதலீட்டுச் சந்தையில் முதலீடு திரட்டுவது என்பது சாதாரணக் காரியம் இல்லை.

இந்தியப் பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எப்போதும் நிறுவனத்தின் நிதி நிலையை அடிப்படையாக வைத்து மட்டுமே முதலீடு செய்யும் காரணத்தால், ஸ்டார்ட்அப் நிறுனவனங்ள் அதிகளவிலான கடனில் செயல்படும் காரணத்தால் தற்போது கிரே மார்கெட் சந்தையில் சோமேட்டோ பங்குகள் பொழிவிழந்துள்ளது.

சோமேட்டோ நிறுவன பங்குகள்

சோமேட்டோ நிறுவன பங்குகள்

ஜூலை 14ஆம் தேதி அதாவது நாளை ஐபிஓ வெளியிட உள்ள சோமேட்டோ நிறுவனம் ஒரு பங்கை 72 முதல் 76 ரூபாய் வரையிலான விலையில் சுமார் 9375 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு உள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் ஐபிஓ ஜூலை 16ஆம் தேதி முடிய உள்ளது.

கிரே மார்கெட் சந்தை

கிரே மார்கெட் சந்தை

இந்த நிலையில் பட்டியலிடப்படாத பங்குகளை வர்த்தகம் செய்யப்படும் கிரே மார்கெட் சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சோமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீதம் ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்படும் எனக் கணிக்கப்பட்டது.

ப்ரிமியம் விலையில் பாதிப்பு

ப்ரிமியம் விலையில் பாதிப்பு

இதன் மூலம் ஒரு பங்கு விலை கூடுதலாக 20 ரூபாய் அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் ப்ரிமியம் அளவு 10 ரூபாய் முதல் 10.5 ரூபாய் வரையில் மட்டுமே இருக்கும் இதன் மூலம் 13 சதவீத ப்ரிமியம் விலையில் தான் பட்டியலிடப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

ரீடைல் முதலீட்டாளர்களுக்கு 10% மட்டுமே

ரீடைல் முதலீட்டாளர்களுக்கு 10% மட்டுமே

9375 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டும் பிரம்மாண்ட ஐபிஓ என்பதால் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் பங்குகள் அலாட்மென்ட் செய்யப்படும் என நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால் டிமாண்ட் அளவு குறைந்துள்ளது, இதேபோல் நிறுவனங்களின் நிதி நிலை பெரும் முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியக் கேள்வியாக உள்ளது.

பங்கு அலாட்மென்ட்

பங்கு அலாட்மென்ட்

இந்திய பங்குச்சந்தை தற்போது இருக்கும் நிலையில் ஐபிஓ அதிகளவில் முதலீடு செய்யப்படும் காரணத்தால் வெறும் 93.75 பங்குகள் மட்டுமே ரீடைல் முதலீட்டாளர்கள் அளிக்கப்படும் காரணத்தால் பங்குள் அட்டால்மென்ட் கிடைப்பது மிகவும் கடினம். இதனால் போட்டி அதிகளவில் குறைந்துள்ளது. இதேபோல் சோமேட்டோ நிறுவனத்தின் நிதி நிலை பெரும் முதலீட்டாளர்களை மத்தியில் முக்கியக் கேள்வியாக உள்ளது.

தொடர்ந்து சரிவு

தொடர்ந்து சரிவு

இதனால் கிரே மார்கெட் சந்தையில் கடந்த இரண்டு நாட்களாகச் சோமேட்டோ பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த ஐபிஓ பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தைப் பட்டியலிடுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கும். ஆனால் தற்போது வெறும் 10 சதவீதம் ப்ரீமியம் விலை மட்டுமே கிடைக்கும் காரணத்தால் பொழிவிழந்து நிற்கிறது சோமேட்டோ பங்குகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato loses its shine in grey market, A day before IPO

Zomato loses its shine in grey market, A day before IPO. grey market premium has dropped from Rs 18-20 on the day of IPO announcement to Rs 10-10.5 now with just 13 percent premium
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X