இந்தியாவில் கச்சா எண்ணெய் வாங்குவது எப்படி?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இதைப்பற்றி விவரம் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் பெரிதாகப் படாது. ஆனால் நம் நாட்டில் கச்சா எண்ணெய்யை வர்த்தகச் சந்தைகளில் வாங்க முடியும் என்று தெரியாதவர்களுக்கு இந்த விவரம் உதவும்.

 

இந்தியாவில் கச்சா எண்ணை பியூச்சர்ஸ் மார்க்கெட் எனப்படும் வர்த்தகச் சந்தைகளில் விற்கப்படுகின்றது. எனவே நீங்கள் ஒருவேளை கச்சா எண்ணை வாங்க நினைத்தால் நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஒரு தரகரின் மூலமாக டீமேட் எனப்படும் வர்த்தகக் கணக்கைத் துவக்கவேண்டும்.

கச்சா எண்ணை எம்சிஎக்ஸ் (MCX) எனப்படும் இந்திய வர்த்தகப்பொருள் பரிமாற்ற நிறுவனத்தின் மூலம் விற்கப்படுவதுடன் நீங்கள் மேற்கூறிய கணக்கை துவங்கியவுடன் அதன் மூலமாக நீங்கள் எண்ணெய்யை வாங்க முடியும்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் வாங்குவது எப்படி?

எப்படி வாங்குவது?

நீங்கள் உங்கள் தரகரிடம் இதற்கான ஆர்டரைக் கொடுக்கலாம் அல்லது உங்களிடம் இணையக் கணக்கு லாகின் வசதி இருந்தால் அதன் மூலம் நீங்கள் நேரடியாகவே வாங்கலாம்.

எடுத்துக்காட்டாக ஷேர்கான் நிறுவன முதலீட்டு வாடிக்கையாளர் ஒருவரைப் பற்றிப் பார்ப்போம். கமாடிட்டி பை அண்ட் செல் என்ற பிரிவின் கீழ் என்ற தொடர்பை க்ளிக் செய்யவும். அதில் வரும் பட்டியலில், CRUDE என்று டைப் செய்தால் பல்வேறு கச்சா எண்ணை ஒப்பந்த விலைகள் வருவதைக் காணலாம்.

ஒருவேளை நீங்கள் ஜனவரி 16, 2015 தேதி அன்று நீங்கள் கச்சா எண்ணை வாங்கினால் விலையானது ரூபாய் 3495 என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் வாங்குவது எப்படி?

இது ஜனவரி 16 ஆம் தேதிக்குள் கச்சா எண்ணை வர்த்தகத்தை முடிக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதைப் போலவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான விலை ஒப்பந்தங்களும் உள்ளன. இதிலும் தத்தம் மாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் வர்த்தகத்தை முடிக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது.

கச்சா எண்ணெய் பகுப்புகளாக விற்கப்படுவதுடன் நீங்கள் 100-இன் மடங்குகளில் அதனை வாங்கமுடியும். அதாவது 100, 200, 300, 400 என்ற எண்ணிக்கைகளில் வாங்க இயலும். நீங்கள் அதில் கிடைக்கும் உபரி அல்லது லாபத்தைச் சரிபார்த்துக் கொள்வதுடன் ஒரே தவணையில் அதற்கான தொகையைச் செலுத்த வேண்டியதில்லை என்பது இதில் உள்ள சிறப்பு அம்சம்.

 

எனவே 100 எண்ணிக்கை கச்சா எண்ணெய்யை 3500 ரூபாய்க்கு நீங்கள் வங்கினால், நீங்கள் 35000 செலுத்தாமல் 3500 மட்டுமே செலுத்தினாலும் போதுமானது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. மேலும் விவரங்களுக்கு விதிமுறைகளைப் படித்துப் பார்க்கவும்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் வாங்குவது எப்படி?

கச்சா எண்ணை விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

இந்தியாவில் கச்சா எண்ணை விலையை இரண்டு காரணிகள் பொதுவாக நிர்ணயிக்கின்றன. ஒன்று சர்வதேச கச்சா எண்ணை விலைகள் மற்றொன்று ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் நாணய மதிப்பு. சர்வதேச விலைகள் உயரும் போது கச்சா எண்ணை விலை இந்தியாவிலும் உயரும். அதே சமயம் ரூபாயின் நாணய மதிப்புக் குறைந்தாலும் கச்சா எண்ணை சந்தையில் விலைகள் உயர வாய்ப்புண்டு.

கடந்த சில மாதங்களில், எண்ணெய் சந்தை விலைகள் 5200 ரூபாயிலிருந்து தற்போதுள்ள 3500 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to Buy Crude Oil in India?

Well, this may not surprise those who already know, how to buy crude oil from the futures market. But, for those who do not know, you can buy crude oil in India.
Story first published: Monday, August 31, 2015, 17:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X