சென்னை: மின்னணு வடிவில் பங்குகளை இருப்பு வைத்துக்கொள்ளும் கணக்கே டீமேட் கணக்கு. இந்தியாவில் பங்குச்சந்தை மூலம் பங்குகளை வாங்கவோ விற்கவோ வேண்டுமென்றால் அதற்கு டீமேட் கணக்கு கட்டாயமானது. மேலும், இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்கில் (ஐ.பி.ஓ) பங்குகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், டீமேட் கணக்கு வழியாக மட்டுமே உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
செபியின் வழிகாட்டுதல்களின் படி, டீமெட்டீரியலைஸ்ட் வடிவத்தைத் தவிர வேறு எந்த ஒரு வடிவத்திலும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது.
ஒரு டீமேட் கணக்கை திறப்பதற்கு முன்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள், இதோ!
டெபாசிட்டரி (களஞ்சியம்)
இந்தியாவில் இரண்டு டெபாசிட்டரிகள் உள்ளனர் - நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்விசஸ் லிமிடெட் (சி.டி.எஸ்.எல்). இவர்கள் மூலம் தான் டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள் தங்களது பங்குகளை வைத்திருக்க முடியும். பங்குகள், கடன் பத்திரங்கள், அரசாங்க பங்குகள், ம்யூச்சுவல் ஃபண்ட் அலகுகள் போன்ற பங்குகளை டெபாசிட்டரிகள் கொண்டிருப்பார்கள்.
டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள்
முதலீட்டாளர்களுக்கும் டெபாசிட்டரிகளுக்கும் பொது நபராக இருப்பவர்கள் தான் டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட்கள். டெபாசிட்டரியிடம் இருந்து எந்தவொரு சேவைகளைப் பெறவும் முதலீட்டாளருக்கு டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட் தேவை.
டீமெட்டீரியலைஸ்
பௌதீக (Physical) வடிவிலான உங்களது பங்குகளை மின்னணு வடிவத்தில் மாற்றும் செயல்முறையைத் தான் டீமெட்டீரியலைசேஷன் எனக் கூறுகிறார்கள்.
அடிப்படை சேவைகள் டீமேட் கணக்கு
இந்தக் கணக்கை எந்த ஒரு தனி நபரும் புதிதாகத் திறந்து கொள்ளலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் டீமேட் கணக்கை அடிப்படை சேவைகள் டீமேட் கணக்காக மாற்றிக்கொள்ளலாம்.
உங்கள் டீமேட் கணக்கில் உள்ள பங்குகள், ம்யூச்சுவல் ஃபண்ட்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மட்டுமே உங்கள் தற்போதைய கணக்கை இந்தக் கணக்காக மாற்றிக் கொள்லாம்.
தங்களிடம் உள்ள டீமேட் கணக்கின் மொத்த மதிப்பு ரூ.0 - ரூ.50,000/- ஆக இருந்தால், உங்கள் கணக்கின் மீது எந்தவொரு கட்டணமும் வசூல் செய்யப்பட மாட்டாது. உங்களது டீமேட் கணக்கின் மொத்த மதிப்பு ரூ.50,001 - ரூ.2,00,000/- ஆக இருந்தால், உங்கள் கணக்கின் மீது ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும்.
ஈடுபட்டுள்ள கட்டணங்கள்
ஒவ்வொரு நிறுவனத்தைப் பொருத்தும், உங்கள் கணக்கின் வகையைப் பொருத்தும், பரிவர்த்தனைகளின் மதிப்பைப் பொருத்தும் கட்டணங்கள் வேறுபடும்.
கணக்குத் திறப்புக் கட்டணம், வருடாந்திர பராமரிப்புக் கட்டணம், பரிவர்த்தனை அல்லது தரகு கட்டணம் போன்றவை எல்லாம் டீமேட் கணக்கோடு தொடர்புடைய கட்டணங்களாகும்.
டீமேட் கணக்கு திறப்பதால் ஏற்படும் பயன்கள்
பங்குகளைப் பௌதீக வடிவில் பராமரிக்கும் சிக்கல்கள் இருக்காது. ஒற்றைப் படை லாட் பிரச்சனைகள் இருக்காது. அதே போல், ஒரு பங்கை கூட வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு மாற்றத்திற்கான முத்திரை வரியும் பொருந்தாது. அதே போல் மின்னணு வடிவத்தில் உள்ள பங்குகளுக்குப் பரிமாற்ற பத்திரமும் தேவைப்படாது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications