தல தோனி சொல்லிக்கொடுத்தது இதுதான்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகியிருந்தாலும் கிரிக்கெட்டில் இன்னும் பல சாதனைகளை இவர் செய்வார் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

இவரைப் பின்பற்றி உங்களது நிதி இலக்குகளை எவ்வாறு அடைவது என்று தெரியுமா?

5 பாடங்கள்

குடும்பத்திற்காக அல்லது உங்கள் நிதி நிலைமை பொருத்து முதலீடுகள் எப்போதும் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும். எப்போதும் எந்த ஒரு சூழலிலும் நிதானமாகவும், நம்பிக்கையாகவும் தோனி இருப்பார்.

தோனியிடம் இருந்து முதலீடுகள் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.

முதலீடு செய்யும் போது நிதானம் அவசியம்

ஒருவர் எப்போதும் வெற்றியே பெற்றுக்கொண்டு இருக்க முடியாது என்பதை நன்கு தெரிந்தவர் தான் தோனி, ஆனால் வெற்றி பெறும் விகிதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யக்கூடியவர்.

முதலீட்டில் நீங்கள் தேர்வு செய்திருக்கும் ஐந்து பங்குகளும் எப்போதும் நல்ல லாபத்தை அளிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதிகப்படியான பங்குகள் லாபம் அளிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும். கவலை பெற வேண்டாம், ஃபார்மில் இல்லை என்றால் கோஹ்லியால் கூட நன்கு விளையாடமுடியாது.

எனவே முதலீட்டாளர்களுக்குப் பொறுமை அவசியம். தொடர்ந்து ஃபண்டுகளைக் கண்காணித்து நன்கு செயல்படாத வீரர்களைக் கிரிக்கெட்டில் எப்படித் தோனி மாற்றுவாரோ அதே போன்றே ஃபண்டுகளை மாற்றி முதலீடு செய்வது அவசியம்.

 

 

பண்டுகளைத் தேர்வு செய்யும் போது நடைமுறை பார்த்தல் அவசியம்

கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்யும் போது தோனி எப்படி நடுநிலையான முடிவை எடுப்பாரோ அது வெற்றிக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். முதலீட்டாளராக உங்களுக்கு எந்தப் பண்டுகள் பிடித்துள்ளதோ அதை மட்டும் தேர்வு செய்யாமல், ஒரு நிறுவன ஃபண்டுகளைத் தேர்வு செய்யாமல் அனைவரும் விரும்பி முதலீடு செய்யக்கூடிய நல்ல லாபம் அளிக்கக் கூடிய ஃபண்டுகளில் நடு நிலையாக முதலீடு செய்ய வேண்டும். இப்படிச் சந்தை நடைமுறையை அறிந்து முதலீடு செய்வது நல்ல லாபத்தை அளிக்கும்.

 

 

உங்கள் முதலீடுகளின் மீது நம்பிக்கை வேண்டும்

போட்டியின் போது தோனி தான் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு வீரரின் மீதும் பெறும் நம்பிக்கையுடன் இருப்பார். எனவே நீங்கள் தேர்வு செய்யும் ஃபண்டுகள் மீது உங்களுக்கு நம்பிக்கை தேவை.

 

 

உங்கள் மேல் நம்பிக்கை வேண்டும்

தோனிக்கு எப்படித் தனது அணியின் மீது நம்பிக்கை உண்டோ அதே போன்று தான் தேர்வு செய்த பங்குகளின் மீதும் நம்பிக்கை உடையவர்.

இன்று சரியாகச் செயல்படவில்லை என்பதற்காக நம்பிக்கையுடன் நன்றாகச் செயல்படும் என்று காத்திருத்தல் வேண்டும். எப்போது ஃபண்டுகளை ஆராய்ந்து கொண்டு இல்லாமல் வல்லுநர்களிடம் இருந்து ஆலோசனை பெறலாம். போர்ட்போலியோ ஒன்றை உருவாக்கி ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு முதலீட்டின் பங்கு லாபத்தை அளிக்கவில்லை என்றாலும் பிற ஃபண்டுகள் லாபத்தை அளிக்கலாம்.

 

முன்கூடியே முதலீட்டைத் துவங்க வேண்டும்

35 வயதில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். உங்களின் வேலையில் சலிப்பு ஏற்படும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆம், அப்படி ஒரு சூழல் ஏற்படலாம். மக்கள் எப்போதும் வேலையை மட்டுமே செய்வர், ஓய்வு காலத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. எனவே எவ்வளவு முன்பாக நாம் முதலீட்டைத் துவங்குகின்றோம் அவ்வளவு ஓய்வு காலத்திற்கு நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

MS Dhoni resigns as Team India captain: 5 investment lessons to learn from the legendary cricketer

MS Dhoni resigns as Team India captain: 5 investment lessons to learn from the legendary cricketer
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns