ஒரு என்ஆர்ஐ கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் : ரியல் எஸ்டேட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் சொத்துக்களாக வீட்டின் மீது முதலீடு செய்வதற்கு இது சிறந்த நேரமாகும் - வரவிருக்கும் ஒரு சட்டம் அவர்களைத் தவறான செய்கைகளிலிருந்து காக்கிறது; ஒரு புதிய வரி விதிப்பு முறை, மேற்கொண்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.

 

அனைவருக்கும் வீடு கிடைக்கப்பெற வேண்டும் என்கிற அரசாங்கத்தின் முனைவு நடைமுறைகளை இனிமையானதாக்குகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களாலும் மற்றும் பலவற்றாலும் கவர்ச்சிகரமான இந்திய ரியல் எஸ்டேட் தற்போது கசிவதை தடுப்பது கடினமாக உள்ளது.

எனவே அயல்நாடுகளில் வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களில் முதலீடு செய்யும் முன், உங்களை நீங்களே இந்த மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, அதற்குத் திருப்திகரமான பதில் கிடைத்த பிறகே மேற்கொண்டு முன்நோக்கி செல்லுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது உங்கள் முதலீடுகள் அபாயமற்றவை என்பதை உறுதிப்படுத்தும்.

உங்கள் கட்டுமான மேம்பாட்டாளர் யார்?

உங்கள் கட்டுமான மேம்பாட்டாளர் யார்?

இந்திய ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016, மே 1 அன்று நடைமுறைக்கு வந்தது முதல், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக மாறியுள்ளது. இந்தியாவில் வீட்டு, மனை வியாபாரம் செய்ய, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஏராளமான சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் தடை செய்யப்படுவார்கள்.

ரியல் எஸ்டேட் என்பது தீவிரமாகவும் நேர்மையாகவும் தொழிலில் ஈடுபடும் ஆட்டக்காரர்கள் மட்டுமே இயக்குவதற்கு அனுமதிக்கப்படும் ஒரு துறையாக மாறிவிடும். இருப்பினும், நம்பிக்கைக்குரிய பெயர்பெற்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும்;.

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

அதற்காகச் சொத்து வாங்குபவர்களிடம் தங்கள் புகழ்பெற்ற நிறுவன அடையாளங்களைக் காரணமாகக் காட்டி முன்தொகையைக் கட்டணமாக விதிக்கும் பெரிய பெயர் பெற்ற நிறுவனங்களுடன் மட்டுமே சொத்து வாங்க வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஒரு மிகப் பெரிய கட்டுமான மேம்பாட்டாளராக இல்லாதவர் கூடச் சிறப்பான செயற்பாட்டாளராக இருக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் கட்டுமான மேம்பாட்டாளரின் இதுவரை கடந்து வந்த பாதையின் பதிவுகளையும் காணத் தவறாதீர்கள்.

உதாரணமாகப் பெங்களூரில் நீங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க விரும்பினால் ஒரு உள்ளூர் கட்டுமான மேம்பாட்டாளர் சிறந்த தேர்வாக இருப்பார்.

உங்கள் வழக்கறிஞர் யார்?
 

உங்கள் வழக்கறிஞர் யார்?

சட்டம் உங்களை எல்லா விதமான குற்றங்களிலிருந்தும் காக்கும் ஆனால் நாம் அறிந்த படி வருமுன் தடுப்பதே குணப்படுத்துவதை விடச் சிறந்ததாகும். அதனால் தான் இந்தியாவில் உங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்புகளுக்கு உங்கள் உற்றார் உறவினர்களை நம்புமாறு வலியுறுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் வாழும் நில உரிமையாளர்கள் அவர்களது பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உங்கள் இந்தியப் பிரதிநிதி சட்டப்படியான பகர அதிகாரத்தைத் (பவர் ஆஃப் அட்டர்னி) தவறான முறையில் பயன்படுத்தி உங்களுடன் இதர தரப்பினரையும் ஏமாற்றலாம் என்கிற உண்மையைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதனால் தான் நம்பிக்கைக்கு உரியவரிடம் மட்டும் பொறுப்பை வழங்குவது சிறந்ததாகும்.

உறவினர்கள்

உறவினர்கள்

ஒருவேளை இந்த வேலைக்கு உறவினர்களை நம்ப முடியாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இதற்காக இதர நபர்களை வேலைக்கு அமர்த்தலாம். அதற்காக நீங்கள் அவர்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தாலும் உங்கள் சொத்துக்களை எந்த ஆபத்தும் சூழ முடியாது.

உங்களுடைய வாடகைக்குக் குடியிருப்பவர் யார்?

உங்களுடைய வாடகைக்குக் குடியிருப்பவர் யார்?

உங்கள் பிரதிநிதி உங்களுக்கு ஒரு நல்ல வாடகைக்குக் குடியிருப்பவரை கண்டறிகிறார். அவர் ஒரு நல்ல கணிசமான தொகையை வாடகையாகத் தர ஒப்புக் கொள்கிறார். நீங்கள் அந்த நபரிடம் தொலைப்பேசியில் பேசுகிறீர்கள். அவர் சரியான நபர் என்று நினைக்கிறீர்கள்.

தனிப்பட்ட முறையில் அந்த வாடகைக்குக் குடிவருபவரை சந்திப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் தாய் நாட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் விரைவில் வருகை தருவது உங்களுக்குச் சாத்தியமில்லை. இருந்தாலும் நீங்கள் உங்கள் வீட்டுக்கு வாடகைக்குக் குடி வருபவரை ஒரு முறை தனிப்பட்ட முறையில் சந்திப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

வியாபார கூட்டணிகளில் சட்ட ரீதியான தாக்கங்களின் தொடர்புடையதால் தொலைப்பேசி உரையாடல்கள் மட்டும் போதுமானதாக இருக்காது.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

மும்பையில் ஒரு முன்னணி நடிகரின் வளாகம் இறைச்சி வியாபாரம் நடத்தப் பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது கவனிப்பாரற்ற சூழல் எப்படிக் கவர்ந்து பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. எனவே உங்கள் சொத்துக்களை விற்பதற்கு முன் ஒரு முழுமையான மேற்பார்வை ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Real Estate: Rules must follow for a NRI Investor

Real Estate: Rules must follow for a NRI Investor
Story first published: Monday, May 29, 2017, 11:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X