எஸ்பிஐ-ல் முதலீடு செய்ய ஏற்ற எஸ்ஐபி திட்டங்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உங்களுக்கு முதலீடு செய்யும் திட்டமிருந்தால், சில பரஸ்பர முதலீட்டு நிதித் திட்டங்களைப் பாருங்கள். முறையாகத் திட்டமிடப்பட்ட முதலீட்டுத் திட்டங்களே இப்போது முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. ஏனென்றால், அவை முதலீட்டின் மீது வருவாயைத் தருவதுடன், பங்குச் சந்தையிலிருந்து உயர் ஆதாயங்களைப் பெறவும் உதவுகின்றது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், நீண்டகாலத் திட்டங்களில் உயர் வருமானத்தை வழங்கும் பல திட்டங்கள் எஸ்பிஐ யில் உள்ளன. எஸ்பிஐ யில் இருந்து தரப்படும் மதிப்பிற்குரியதாகக் கருதத்தக்க சில முறையாகத் திட்டமிடப்பட்ட திட்டங்களைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ப்ளுசிப் நிதி

எஸ்பிஐ யில் பல முறையாகத் திட்டமிடப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் உள்ளன. ஆனாலும், அவற்றில் சிறந்ததும் மிகப்பெரியதுமான திட்டம், எஸ்பிஐ ப்ளுசிப் நிதித் திட்டமாகும். இந்த நிதித் திட்டமானது கடந்த பல ஆண்டுகளாக, தொடர்ந்து நிலையான ஒரு சிறந்த செயல்பாட்டுத் திட்டமாக இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்.பி.ஐ ப்ளுசிப் நிதி 19.33 சதவிகித வருவாயை ஈட்டியுள்ளது. அதே சமயம், கடந்த 1 வருடத்தில் வருவாய் 1 சதவிகிதமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளின் வருவாய் மேம்படுத்தப்பட்ட 19.76 சதவிகிதமாக உள்ளது.

எஸ்பிஐ ப்ளுசிப் நிதியின் மதிப்பீடு மற்றும் தரவரிசை

கிரிசல் இந்த நிதி திட்டத்திற்கு முதலிடத்தை மதிப்பிட்டுள்ளது. அதே சமயம், இணைய மதிப்பீட்டு ஆய்வுகளும் இந்த நிதி திட்டத்திற்கு 5 நட்சத்திர மதிப்பீட்டை அளித்துக் கிரிசலின் கருத்தோடு ஒத்திசைந்துள்ளது. மதிப்பீடுகளின் அடிப்படையில் இவை இரண்டுமே மிக உயர்ந்த மதிப்பெண்களாகும். நீங்கள் இப்போது முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 38.18 ஐ நிகரச் சொத்து மதிப்பில் நீங்கள் விரும்பியவாறு முதலீடு செய்யலாம். அதே வேளையில், நீங்கள் ரூ.17.17 ஐ பங்கு ஆதாயத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களின் கைகளுக்குக் கிடைக்கும் பரஸ்பர நிதியிலிருந்து பெறப்படும் பங்காதாயமானது முற்றிலும் வரிவிதிப்புகளிலிருந்து விலக்குப் பெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

வலுவான நிதியாதாரச் சொத்துடைமைகள்

எஸ்.பி.ஐ ப்ளுசிப் நிதி என்பது உண்மையில் சிறந்த நம்பகமான மதிப்பையும் பங்குரிமைகளையும் கொண்ட வலுவான நிதியாதாரச் சொத்துடைமையைக் கொண்டுள்ளது. அதனால் தான் எஸ்பிஐ யின் பரஸ்பர நிதிகள் மற்ற அனைத்து நிதித் திட்டங்களை விடச் சிறந்ததாகவும், முறையாகத் திட்டமிடப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டமாகவும் இருக்கின்ற காரணத்தினால் இதில் விரும்பி முதலீடுகள் செய்யப்படுகின்றன. இதன் நிதியாதாரச் சொத்துடைமைகள் சன்ஃபார்மா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்பிசிஎல் மற்றும் ரிலையன்ஸ் தொழில்துறை போன்றவற்றின் பங்குகளைக் உள்ளடக்கியுள்ளது. இவை எல்லாம் வலுவான அடிப்படை ஆதாரங்களைக் கொண்ட செல்வாக்கான நிறுவனங்களாகும். இத்தகைய பண்புகள் எஸ்பிஐ நிறுவனத்தில் உள்ள மற்ற நிதி திட்டங்களை விட எஸ்பிஐ ப்ளுசிப்பை விருப்பத்திற்குரியதாக்குகிறது. நீங்கள் தொடக்கத்தில் ரூ.5000 தொகைக்கு முதலீட்டைத் தொடங்கலாம். அதன் பின்னர், ரூ.500 க்கு சிறிய தொகைகளிலும் முதலீடு செய்யலாம்.

எஸ்பிஐ மேக்னம் பங்கு ஆதாய நிதிகள்.

எஸ்.பி.ஐ மேக்னம் பங்கு ஆதாய நிதிகள் என்பது மற்றுமொரு நிதித் திட்டமாகும். இதில் நீங்கள் முறையாகத் திட்டமிடப்பட்ட ஒரு சிறிய நிதித் திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த அளவாக ரூ. 500 ஐ முதலீடு செய்யலாம். எஸ்.பி.ஐ ப்ளு சிப்பைப் போலவே இந்தத் திட்டமும் சிறப்பாகச் செயல்படுகிறது, ஆனால் அந்தத் திட்டத்தில் இருப்பது போல உயர்ந்த அளவு வருவாய் இதில் இல்லை. இந்த நிதி திட்டத்தில் ஒரு வருட வருவாய் சுமார் 6.75 சதவிகிதத்திற்கு நெருக்கமாக உள்ளது. அதே சமயம் 5 வருட வருவாய் 15.30 உயர் அளவு சதவிகிதமாக உள்ளது. மூன்று வருட வருவாய் முனைமம் கூடச் சுமார் 15 சதவிகித குறியீட்டில் சிறப்பாக அமைந்துள்ளது.

 

 

இந்த நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காரணங்கள்.

இந்த நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவதாக, இந்தத் திட்டம் மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருக்கிறது. இரண்டாவதாக, இதன் நிதியாதாரச் சொத்துடைமைகள் ஹெச்.டி.எப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.சி.எல் தொழில் நுட்பங்கள் போன்ற நிறுவனங்களின் வலுவான பங்குகளைக் கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் முதலீடு செய்வதற்குத் திட்டமிட்டிருந்தால் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாகும். இந்தப் பங்கு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 77.49 நிகரச் சொத்து மதிப்பையும், அதே சமயம் பங்காதாயத் திட்டத்தில் ரூ 28.81 நிகரச் சொத்து மதிப்பையும் கொண்டுள்ளது. எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் சிறிய தொகைகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டிலிருந்து பெறும் வருவாய் பணி ஓய்வு பெற்ற பிறகு ஒரு சேமிப்பை நீங்கள் கட்டுமானிக்க உதவும். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது சற்று அபாயகரமானது என்பதை நாங்கள் இங்குக் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவாக இத்தகைய முதலீடுகள் சில அபாயங்களையும் எப்பொழுதும் உள்ளடக்கியுள்ளன.

 

 

பொறுப்பாண்மை மறுப்பு

இந்தக் கட்டுரை முதலீட்டு முனைமங்கள் அல்லது இதர நிதிக் கருவிகளை வாங்கச் சொல்லியோ, விற்கச் சொல்லியோ செய்யப்படும் பரிந்துரையோ, வேண்டுகோளோ அல்ல கிரேனியம் தகவல் தொழில் நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் கட்டுரை எழுதிய ஆசிரியர் ஆகிய எவரும் இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழும் இழப்புகள் / மற்றும் அல்லது சேதாரங்களுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டால் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. இந்தக் கட்டுரையின் ஆசிரியரோ அல்லது அவரது குடும்பத்தினரோ மேலே குறிப்பிடப்பட்டுள்ள பங்குச் சந்தை நிதித் திட்டங்களில் எந்த ஒரு பங்குகளையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை.

வீட்டுப் பட்ஜெட்

ஜிஎஸ்டி உங்க வீட்டுப் பட்ஜெட்-ஐ எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்..!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

RERA: வீடு வாங்குபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

சக்கரவர்த்தி

டேவிட் ராக்ஃபெல்லர்: அமெரிக்காவை ஆட்டிப்படைத்த சக்கரவர்த்தி..!

ஜெட் ஏர்வேஸ்

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ப்ரீ ஆஃபர் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best SIP Plans From SBI To Invest For The Long Term

Best SIP Plans From SBI To Invest For The Long Term
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns