அதிக லாபம் பெற அசத்தலான 5 முதலீட்டு டிப்ஸ்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பணம் நமது வாழ்க்கையில் முக்கியப் பங்கை வகிக்கிறது. அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு நமக்குப் பணம் தேவை. இத்தகைய முக்கியமான பணத்தை சேமிப்பதை விடவும் அதனை பல மடங்கு பெருக்குவதற்கு ஒரு சரியான முதலீட்டை தேர்வு செய்ய வேண்டியது அவசியமானது.

முதலீடு குறித்து பல ஐடியாக்கள் கொடுப்பதும், பெறுவதும் எளிது, அதில் எந்த அளவிற்கு உண்மையாக லாபம் கிடைக்கிறது என்பது எப்போதுமே கேள்விக்குறிதான்.

இந்நிலையில் தற்போது சந்தை சூழ்நிலையில் லாபத்தை அளிக்கும் வகையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும், முதலீட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகன ஐந்து பொன்னான யோசனைகள்.

முதலீட்டுக் கலப்பை மதிப்பாய்வுச் செய்யுங்கள்

உங்கள் பணம் எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். மக்கள் பெரும்பாலும் முதலீட்டுத் தேர்வுகளைச் செய்துவிட்டு பின்னர் பல ஆண்டுகளுக்கு எதுவும் செய்யாமல் இருந்துவிடுகின்றனர். இது நல்லதல்ல.

உங்கள் முதலீட்டுக் கலவையை வருடத்திற்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்தால் போதுமானது. இந்த ஒதுக்கீட்டுக் கலவை முதலீட்டாளரின் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.

 

அபாயம் இல்லையென்றால் வருவாயும் இல்லை

அபாயம் இல்லாமல் வருமானம் என்பது சாத்தியமில்லை. பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், பத்திரங்கள், கடனீட்டுப் பத்திரங்கள் போன்ற இதர தேர்வுகளை நீங்கள் சரிபார்க்கலாம்.

உங்கள் அனைத்து முட்டைகளும் ஒரே கூடையில் போடக்கூடாது. நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு எதுவும் செய்யாமல் எல்லாப் பணத்தையும் எளிமையாக வங்கிக் கணக்கில் போடுகிறீர்கள் என்றால், உங்கள் பணத்தை வைத்து நீங்கள் எந்த வருமானத்தையும் ஈட்டமாட்டீர்கள். உங்கள் பணம் காலப்போக்கில் மதிப்பை இழக்கிறது.

 

பங்குச் சந்தையைப் பற்றி ஆய்வுச் செய்யுங்கள்

பங்குச் சந்தைக்கு நீங்கள் புதியவராக இருந்தால், பங்குச் சந்தையைப் பற்றி பயிலுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சந்தையை உருவாக்கும் பத்திரங்களைப் பற்றி தெரிந்துக் கெள்ளுங்கள்.

பல்வேறு வகை முதலீட்டுக் கணக்குகள், முதலீடு செய்யச் சரியான நேரம், பங்கைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் ஆகிவற்றைப் பற்றி முழுமையாக பயிலுங்கள். பங்குச் சந்தையைப் பற்றி புரிந்துக் கொள்ளுதல், அபாயங்களை மதிப்பிடவும், மற்றும் சரியானத் தேர்வுகளைச் செய்யவும் இது உங்களுக்கு உதவுகிறது.

 

முதலீடுகளை பன்மயமாக்குதல்

உங்கள் எல்லாப் பணத்தையும் ஒரே முதலீட்டில் போடாதீர்கள். உங்கள் பணத்தை வெவ்வேறு விதமான காப்பாவணங்கள், பத்திரங்கள், தங்கம் மற்றும் இதர பல திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

முதலீடுகளைப் பன்மயமாக்கும் வேலையை செய்வதற்கு முன்பு நீங்கள் பங்குச் சந்தையில் அனுபவத்தைப் பெற வேண்டும்.

 

வரிகள்

வரிவிதிப்புகள் முக்கியமானவை. வரிகளைப் பற்றிய அக்கறை உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் செலுத்த வேண்டிய வரித் தொகையைக் குறித்து மேலும் வரிக்குப் பிறகான உங்கள் வருவாயை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஆனால் முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் மேலாக வரிச் சலுகைகளை வைக்க விரும்பலாம். ஆனால், அங்கு அத்தகைய சூழ்நிலைகள் அரிதானவை.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Five Investment Tips For High Return

Five Investment Tips For High Return - Tamil Goodreturns | அதிக லாபம் பெற அசத்தலான 5 முதலீட்டு டிப்ஸ்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, August 27, 2017, 14:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns