இந்தியாவில் முதலீடு செய்ய ஏற்ற ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டம்!

முதல் எச்சரிக்கை: ஸ்மால் கேப் முதலீடுகள் பொதுவாக ரிஸ்க் அதிகமானவை. நீங்கள் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது சந்தை சரிந்தால் உங்கள் முதலீடு அதிக நட்டத்தினை அளிக்கும்.

இதுவே சந்தை முன்னேற்றம் அடையும் போது லாபமும் அதிகமாகக் கிடைக்கும். எனவே தற்போது வங்கக் கூடிய சில ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளை இங்குப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டு

ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டு

சென்ற 1 ஆண்டாக ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டு நல்ல லாபத்தினை அளித்து வருகின்றது. ஒரு வருடத்தில் இந்த 34 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. தங்கம், பங்குச் சந்தை, கடன் நிதி நிதி திட்டங்களை விட இந்தத் திட்டம் அதிக லாபத்தினை அளித்துள்ளது.

கடந்த மூன்று வருடம் இந்தத் திட்டம் எவ்வளவு லாபம் அளித்துள்ளது என்று பார்த்தாலும் 21.58 சதவீத லாபத்தினை அளித்துள்ளது.

 

ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாமா?

ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாமா?

ஸ்மாப் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை விட அதிக ரிஸ்க் வாய்ந்தது. எனவே எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்வதே சிறந்த தேர்வு ஆகும்.

ஒட்டுமொத்தமாக வாங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் முதலும், எஸ்ஐபி வழியாக வாங்குவது என்றால் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் என முதலீடு செய்யலாம் என்று ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டு நவின் ப்ளோரின் இண்டர்னேஷனல், விந்தயா டெலிலிங்க்ஸ், ஜிஐசி ஹவுஸிங் மற்றும் தீபக் நைட்ரேட் ஆகிய நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளது.

 

டிஎஸ்பி பிளாக்ராக் மைக்ரோகேப் ஃபண்டு

டிஎஸ்பி பிளாக்ராக் மைக்ரோகேப் ஃபண்டு

முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக மதிப்புடைய ஸ்மால் கேப் ஃபண்டு என்றால் அது இந்தத் திட்டமே ஆகும். 5,800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை இந்தத் திட்டம் வைத்துள்ளது. ஸ்மால் கே பங்குகளுக்கு இது மிகப் பெரிய சொத்து அளவாகும். அதுமட்டும் இல்லாமல் நல்ல லாபத்தினை அளித்து வருகின்றது.

கேபிஆர் மில்ஸ், ஃபினோலெக்ஸ் கேபில்ஸ், எஸ்ஆர்எப், சாரதா கார்பகம் மற்றும் பிற நிறுவனங்களில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றது. 2007-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது 19.31 சதவீத லாபத்தினை அளிக்கின்றது.

 

டிஎஸ்பி பிளாக்ராக் ஃபண்டில் ஏன் எஸ்ஐபி வழியாக முதலீடு செய்ய வேண்டும்?

டிஎஸ்பி பிளாக்ராக் ஃபண்டில் ஏன் எஸ்ஐபி வழியாக முதலீடு செய்ய வேண்டும்?

சந்தை உச்சத்தில் இருக்கும் அதிக லாபம் அளிக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் எப்போதும் ரிஸ்க் என்பதால் எஸ்ஐபி மூலம் இத்திட்டங்களில் முதலீடு செய்வதே சிறந்தது எனக் கூறுகின்றனர்.

எஸ்பிஐ ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டு

எஸ்பிஐ ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டு

எஸ்பிஐ ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டு திறந்த நிலை சமபங்கு திட்டமாகும். எனவே இந்தத் திட்டத்தில் அதிக ரிஸ்க் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீடு செய்வார்கள்.

சென்ற ஒரு வருடத்தில் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு 39 சதவீதம் வரையிலும், 3 ஆண்டுகளில் 27 சதவீதம் வரையிலும் லாபத்தினை அளித்துள்ளது.

 

எஸ்பிஐ ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டு - எஸ்ஐபி

எஸ்பிஐ ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டு - எஸ்ஐபி

எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வதற்கு ஏற்ற ஒரு திட்டமாகும் இது. வெஸ்ட்லைப் டெவலப்பர்ஸ், ஓடியண்ட் ரீபிரேக்ட்டரிஸ் மற்றும் ரிலெக்ஸோ ஃபூட் வியர் போன்ற நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. இதுவும் ஸ்மால் கேப் திட்டத்தில் நல்ல லாபத்தினை அளித்து வரும் ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும்.

 பிரான்க்லின் இந்தியா ஸ்மாலர் கம்பெனி ஃபண்டு

பிரான்க்லின் இந்தியா ஸ்மாலர் கம்பெனி ஃபண்டு

கடந்த சில ஆண்டுகளாக நல்ல லாபத்தினை அளித்து வரும் ஸ்மால் ஃபண்டு திட்டத்தில் இதுவும் ஒன்று. சென்ற ஒரு ஆண்டில் மட்டும் 21.3 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. 3 வருடத்தில் 20 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. ஃபினோலெக்ஸ் கேபில்ஸ், ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

கடைசி எச்சரிக்கை

கடைசி எச்சரிக்கை

கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+