முதலீட்டு இலக்கும், அவசரகால நிதியும் உங்களை சுதந்திரமாக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செயற்கை அறிவுத்திறன் மற்றும் எந்திர ஆலோசகர்களின் யுகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம், இதில் எல்லா வகையான தகவல்களும் ஒரு சொடக்கிடும் தொலைவில் கிடைக்கும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நமது தொழில் வாழ்க்கையை, வாழ்க்கைத் துணைவரை, நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது.

 

நமது முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கு இருப்பதால், நாம் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல.

வாழ்க்கை நம்மை இக்காட்டான சூழ்நிலைக்கு தள்ளும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மிகப்பெரிய அளவில் உதவும்.

நிதி சார்ந்த சுதந்திரம் என்பதன் பொருள் என்ன..?

நிதி சார்ந்த சுதந்திரம் என்பதன் பொருள் என்ன..?

உங்கள் கொள்முதல்களுக்கு பணம் செலுத்தும் திறன் அல்லது உங்கள் ஓய்வு காலத்திற்கு சேமித்தல் என்பதன் பொருள். விரிவாகப் பேசப் போனால், நிதி சார்ந்த சுதந்திரம் என்பது நிதி அதிகாரத்திற்கு சமமானதாகும்.

பணம் சம்பாதிக்கும் திறன், அதை நியாயமாகச் செலவழித்தல், உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை எதிர்க்கொள்ளும் முதலீடுகளைச் செய்தல் என அவை மொழிபெயர்க்கப்படுகிறது.

 

ரகசியம்

ரகசியம்

எனவே நாம் நிதி ரீதியாக சுதந்திரமாக ஆவது எப்படி அதன் ரகசியம் ஒரு வலுவான நிதியியல் திட்டத்தை அவ்விடத்தில் கொண்டிருப்பதாகும். அதைப் பற்றிய சில முக்கிய உட்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் செலவுகளுக்கு ஒரு பட்ஜெட்டை தயாரியுங்கள்
 

உங்கள் செலவுகளுக்கு ஒரு பட்ஜெட்டை தயாரியுங்கள்

வரவுசெலவுத் திட்டத்தில் முதல் படி ஒரு மாதத்தில் வருவாய் ஆதாரங்கள் மற்றும் நிலையான மற்றும் மாறக்கூடிய செலவினங்களின் தொகுக்கக்ப்பட்ட ஒரு பட்டியலை தயாரிப்பதாகும்.

ஒரு தனிநபர், அவருடைய வருமானம், தனது அனைத்து நிலையான செலவுகளை போதுமான அளவு தழுவுகிறதா மற்றும் இடையிடையே அவருடைய மாற்றமடையும் செலவுகளையும் எதிர்க்கொள்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

ஈஎம்ஐ

ஈஎம்ஐ

ஈஎம்ஐ-க்கள் மாதாந்திர ஊதியத்தில் 40% ஐ தாண்டக்கூடாது

ஒரு தனிநபர் கடன் உதவியுடன் ஒரு சொத்தை வாங்கும் போது ஈஎம்ஐ எனப்படும் மாதாந்திரத் தவணை செலுத்தப்படுகிறது. இது ஒரு கட்டாயக் கடமையாகும். எனவே, ஒரு தனிநபரின் வரவு செலவுத் திட்டத்தில் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஈஎம்ஐ தொகை மாதாந்திர ஊதியத்தின் 40% க்குள் இருக்கிறதா என்பதை ஒருவர் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

 

 மூன்று மாத சம்பளத்திற்கு சமமமான ஒரு அவசர நிதி

மூன்று மாத சம்பளத்திற்கு சமமமான ஒரு அவசர நிதி

வாழ்க்கை நிச்சயமற்றதாக இருக்கும் போது, எல்லா விதமான நிகழ்வுகளுக்கும் முன்கூட்டித் தயாராக இருப்பதென்பது சாத்தியமற்றது. வாழ்க்கையில் நாம் வருமான இழப்பை கடக்க வேண்டிய அல்லது திடீரென செலவுகள் அதிகரிப்பதைக் காண வேண்டிய காலகடடங்கள் வரலாம். அத்தகைய வழித் தடைகளை நீந்திக் கடக்க நெருக்கடி நிலை நிதிகள் நமக்கு உதவுகின்றன.

இலக்கை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளுடன் ஒட்டியிருந்து பின்பற்றவும்

இலக்கை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளுடன் ஒட்டியிருந்து பின்பற்றவும்

நாம் நம்முடைய குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை சாதிப்பதற்காக முதலீடு செய்கிறோம். எனவே, முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கும் போது, நமது இலக்குகளைப் பற்றிய ஒரு தெளிவான படத்தைக் கொண்டிருந்து அதன் பிறகு, ஒரு தனிநபருடைய இலக்குகளை எதிர்க்கொள்ளும் திறனுடைய முதலீடுகளை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மதிப்பாய்வு செய்யுங்கள்

மதிப்பாய்வு செய்யுங்கள்

ஒரு வருட காலத்திற்குள் சூழ்நிலைகள் மாறலாம். வருமானங்கள் மற்றும் செலவுகள் மாறும் போது இலக்குகளும் மாறலாம். இந்த மாற்றங்களை பிரதிபலிக்க ஒரு வருடத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் நிதித் திட்டம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investment goals, emergency fund will make you independent

Investment goals, emergency fund will make you independent
Story first published: Friday, October 6, 2017, 10:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X