உங்களுடைய கனவு திருமணத்தை நனவாக்க எளிதான முதலீட்டு வழிமுறைகள்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

திருமணம் என்பது ஒரு மாயச் சதுரம். இதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர விரும்புகின்றார்கள். வெளியே இருப்பவர்கள் எப்பொழுது இதற்குள் நுழைவோம் என ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். அதிலும் இந்தியர்களுக்குத் திருமணம் என்பது வாழ்நாளின் முக்கியமான நிகழ்வாகும்.

இங்கே திருமணம் என்பது, பெண் பார்ப்பதில் தொடங்கி, நிச்சயதார்த்தத்தில் ஆரம்பித்து, திருமணத்தில் முடிவடையும் மிகப் பெரிய பயணமாக இருக்கின்றது. எனவே இந்தியாவில் திருமணம் அதிகமான பொருட்செலவுடன் ஏராளமான திட்டமிடலுடன் நிறைவேறுகின்றது. திருமணத்துடன் மட்டும் முடிவதில்லை இந்தப் பயணம். அதற்குப் பிறகும் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. எனவே திருமணத்திற்குத் தயார் ஆகும் பொழுது, இவை அனைத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்ல, இதற்குத் தேவைப்படும் பணத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டும்.

கனவு

இவை அனைத்தும், எல்லாத் திருமணத்திற்கும் பொருந்தும். ஒருவேளை நீங்கள் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் காட்டப்படும் திருமணத்தைப் போன்று உங்களுடைய திருமணத்தை நடத்தக் கனவு கண்டீர்கள் எனில், அதற்குத் தேவைப்படும், காலம், திட்டம், மற்றும் பணத்தைப் பற்றிக் கூறத் தேவையில்லை. எனினும் நாம் சிறிது முயற்சி செய்தால் நம்முடைய கனவை நனவாக்க இயலும். அதுவும் தற்பொழுது நிகழும் சூழ்நிலையில் இது ஒன்றும் கடினமானது அல்ல. திருமணத்திற்குத் தேவைப்படும் முதலீட்டுத் திட்டங்களில் இருந்து, எளிதில் திருப்பிச் செலுத்தும் வசதியுடன் கிடைக்கும் பெரிய கடன் வரை, ஒரு கனவு திருமண நிதியுதவிக்கான விருப்பங்கள் முடிவற்றவை. பாரம்பரியமாகப் பலர் திருமணத்திற்கான கடன்கள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிப் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்தக் கட்டுரை.

திருமணச் சந்தை

இந்தியாவில் திருமணச் சந்தை சுமார் ரூ. 1 கோடிக்கும் அதிக மதிப்புடையது என அசோசெம் அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் 25% முதல் 30% வரை வளர்ந்து வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி எஸ் டி வரி விதிப்பு சிறிய தடைகளை இந்தத் திருமணச் சந்தை சந்தைச் சந்தித்த போதிலும், இந்தச் சந்தை மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது.

புழங்கும் பணம்

பெரும்பாலும் இந்திய திருமணச் சந்தை முறைப்படுத்தப் படாமல் இருந்தாலும், இதில் புழங்கும் பணம் மிகவும் பெரியது. மேலும் இதில் கற்பனைத்திறனும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்த ஆடம்பர திருமணங்களுக்கான கருத்து மற்றும் திட்டங்கள் பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி வாயிலாகக் கிடைக்கின்றது. உங்களுடைய திருமணத்தை மிகவும் தனித்துவமாக மாற்ற விரும்பினால் அதற்குத் தேவைப்படும் செலவும் மிக அதிகம். எனவே நாம் திருமணத்திற்குத் திட்டமிடுவதோடு சேர்ந்து, அதற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட அதிமாகத் திட்டமிட வேண்டும். இன்று சந்தையில் திருமண நிதித் தேவைகளை ஈடுகட்ட பல்வேறு எளிய முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திருமணக் கடன்கள் உள்ளன. திருமணத்தை முன்கூடியே அதாவது ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது பல மாதங்களுக்கு முன்போ திட்டமிட்டாலும் சரியான நிதித்திட்டமிடல் இல்லையெனின் அனைத்தும் பாழாகிவிடும். உங்களுடைய திருமணத்தை எளிதாக்க நிதித் திட்டமிடல் மிகவும் அவசியமாகும்.

செலவு

சராசரியாக ஒவ்வொரு இந்திய ஜோடியும் தங்களுடைய திருமணத்திற்கு ரூ 10,00,000 முதல் 20,00,000 வரை செலவழிக்கின்றார்கள். அதிகப் பட்ஜெட்டில் அதாவது ரூ பத்து கோடி வரை செலவழித்து நடைபெறும் திருமணங்களும் இங்கே உள்ளன. திருமணத்திற்கான மொத்த செலவில் உணவு மற்றும் மது வகைகளுக்குச் சுமார் 60-70% செலவாகின்றது. அதே நேரத்தில் ஆடை மற்றும் ஆபரணங்களுக்கு 10% வரை ஆகின்றது. தேனிலவிற்குத் திருமணப் பட்ஜெட்டில் வழக்கமாக 15-20% ஆகின்றது. அடிப்படை திருமண அலங்காரங்களுக்கு 5 சதவீதம் வரை செலவாகின்றது. இந்தக் கணக்கு தோராயரமான கணக்கு மட்டுமே. இது ஒவ்வொரு திருமணம் மற்றும் தேவைகளைப் பொருத்து மாறுபடுகின்றது.

திருமணத்திற்கான முதலீடு

திருமணம் என்பது பெரும்பாலும் ஒருவரின் வாழ்நாள் இலக்காகும். எனவே இதற்குத் தேவைப்படும் செலவுகளுக்காக நாம் திட்டமிட்டு வெகுகாலத்திற்கு முன்னதாக முதலீடுகளை மேற்கொள்வது மிகவும் புத்திசாலித்தனம். திருமணத்திற்காகத் திட்டமிட்டுச் சேமிக்கத் தொடங்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. அதிக வருவாய் தரக்கூடிய எஸ்ஐபி திட்டங்கள், பரஸ்பர நிதிகள், மற்றும் தங்க முதலீடு போன்றவை இவற்றில் மிகவும் முக்கியமானவை. இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு திருமணச் செலவை ஈடுகட்டக் கூடிய சிறந்த முதலீடு எஸ்ஐபி, மற்றும் பரஸ்பர நிதி ஆகும் . இவற்றில் முதலீடு செய்த பிறகு எஞ்சி இருக்கும் பகுதியை தங்கப் பத்திரங்கள் அல்லது பிற தங்க அடிப்படையிலான முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.

எஸ்பிஐ பரஸ்பர நிதி, பி என் பி பாரிபாஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் திருமணத் திட்டமிடலுக்கு ஏற்ற விசேஷ பரஸ்பர நிதிகளை வடிவமைத்து வழங்குகின்றன. இது தவிர, பல பிரபலமான எஸ்ஐபி திட்டங்களும் 28% அதிகமான வருமானத்தைத் தருகின்றன. மக்கள் இந்த எஸ்ஐபி களில் மிகக் குறைந்த அளவாக ரூ 500 அல்லது 1000 ஐ கூட முதலீடாகச் செய்யலாம். இந்தச் சிறிய சேமிப்பு மெதுவாக வளர்ந்து உங்களுடைய திருமணத்தின் பொழுது மிகப் பெரிய தொகையாக வளர்ந்து இருக்கும்.

 

தங்க முதலீடு

இந்திய திருமணத்தில் உள்ள மற்றொரு முக்கியமான செலவு தங்கம் ஆகும். தங்க நகைகள் இந்தியத் திருமணங்களின் ஒரு முக்கியப் பகுதியாகவே உள்ளது. எனவே நாம் நம்முடைய முதலீட்டைத் தங்க நகைகளாக மேற்கொள்ளலாம் அல்லது தங்க நாணயங்கள் அல்லது பார்களில் முதலீடு செய்து நமக்குத் தேவைப்படும் பொழுது நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். கல்யாண நகைக் கடை, ஜாய்லூக்கஸ், டிரிபோயான்டாஸ் பீம்ஜி ஜவேரி போன்ற பல பிரபலமான நகை கடைகள் நுகர்வோருக்கும் ஏற்ற பல்வேறு மாதாந்திர நகைச் சேமிப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் மாதத்திற்கு 1000 ரூபாய் என்கிற சிறிய அளவு முதலீடு செய்வதன் மூலம் தங்கம், பிளாட்டினம் மற்றும் வைர நகைகளை மிக எளிதாக வாங்க இயலும். இந்தத் திட்டங்களில் இணைவதன் மூலம் நகைகளுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. இந்தத் திட்டங்கள் இந்திய மக்களுக்குத் தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை எளிமையாக்குகின்றன. எனினும் இந்தத் திட்டங்களில் ஒரு முக்கியக் குறைபாடு உள்ளது. இத்தகைய திட்டங்கள் திருமணத்திற்கு அதிகக் கால அவகாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே உகந்தவை. மிகக் குறைந்த அளவே கால அவகாசம் உடையவர்களுக்கு உதவத் திருமணக் கடன் திட்டங்கள் இருக்கின்றன.

திருமணக் கடன்கள்

திருமணக் கடன்கள் என்பது திருமணத்தைப் பற்றிப் பெரிய பெரிய கனவுகளைக் சுமத்துக் கொண்டு அதைத் திட்டமிட அதிகக் கால அவகாசம் இல்லாதவர்களுக்கானது. திருமணக் கடன் பற்றிய பல்வேறு குழப்பங்கள் மக்களிடையே நிலவுகின்றது. உங்களுக்குப் புரியும் படி விளக்க வேண்டும் எனில் இதுவும் தனிநபர் கடனைப் போன்றதே. இந்தத் திருமணக் கடன்களைக் காலப்போக்கில் எளிதான தவணைகளில் செலுத்தலாம். இத்தகைய கடன்களுக்கு மிகக் குறைந்த அளவான 10.99% வட்டி விதிக்கப்படுகின்றது. உங்கள் திருமணத்திற்குத் தேவைப்படும் ஒரு பெரிய நிதியை கடனாகத் தர பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தயாராக உள்ளன. அத்தகைய விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட திருமணக் கடன் திட்டங்களில் சில: ஐசிஐசிஐ வங்கியின் இலக்குத் திருமணங்களுக்கான தனிப்பட்ட கடன்கள் மற்றும் டாடா மூலதனத்தின் திருமணக் கடன்கள் ஆகியவை.

திருமணக் கடனுக்கான தகுதிகள் என்ன?

திருமணக் கடன் வழங்கும் பொழுது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒரு திருமணக் கடனுக்கான அடிப்படைத் தகுதி என்பது உங்களுடைய மாத சம்பளம் ரூ 20000க்கும் அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் உங்களுடைய குறைந்தபட்ச சிபில் மதிப்பெண் 750 ஆக இருக்க வேண்டும். பல நிதி நிறுவனங்கள் இந்த விதிகளை மிகவும் கடுமையாகப் பின்பற்றும் போது, திருமணங்களுக்கான கடன் என்பது பெரும்பாலும் வங்கிகள் மற்றும் அதனுடைய வாடிக்கையாளர்களைப் பொருத்து மாறு படுகின்றது.

இந்த எளியத் திட்டங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் நம்முடிய கனவு திருமணங்களை நனவாக்க உதவுகின்றன. எனவே, இப்போதே திருமணத்திற்கான உங்களுடைய முதலீட்டைத் திட்டமிடவும். திட்டமிட்டபடி உங்களுடைய திருமணத்தை முதலீடுகளின் மூலம் நனவாக்குங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From investment options to wedding loans, easy steps to plan your dream wedding

From investment options to wedding loans, easy steps to plan your dream wedding
Story first published: Tuesday, January 2, 2018, 17:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns