சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? இதை படிங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவினை குறைக்கலாம் என்றும் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே சவரன் தங்க பத்திரம் ஆகும்.

 

இந்த சவரன் தங்க பத்திர திட்டம் கீழ் அக்டோபர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TranchePeriod of SubscriptionDate of Issuance
2018-19 Series IIOctober 15-19, 201823-Oct-18
2018-19 Series IIINovember 05-09, 201813-Nov-18
2018-19 Series IVDecember 24-28, 20181-Jan-19
2018-19 Series VJanuary 14-18, 201922-Jan-19
2018-19 Series VIFebruary 04-08, 201912-Feb-19
(Source: Ministry of Finance)

நேரடி தங்கத்தினை எப்படி கிராம் கணக்கில் வாங்க முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திர திட்டத்திலும் முதலீடுகளைச் செய்ய முடியும். தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்றவாறு இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தின் மதிப்பும் லாபம் அளிக்கும். எனவே இது குறித்து மேலும் விளக்கமாக இங்கு பார்க்கலாம்.

தங்க பத்திரங்களை யார் வெளியிடுகிறார்கள்?

தங்க பத்திரங்களை யார் வெளியிடுகிறார்கள்?

சவரன் தங்க பத்திரத்தினை மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

யாரெல்லாம் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்?

யாரெல்லாம் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்?

சில்லறை முதலீட்டாளர்களால் தங்க பத்திரத்தினை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பங்கு சந்தை எக்ஸ்சேஜ்கள் வாயிலாக முதலீடுகளைச் செய்ய முடியும்.

 குறைந்தபட்ச முதலீடு

குறைந்தபட்ச முதலீடு

சவரன் தங்க பத்திர திட்டத்தில் குறைந்தது 1 கிராம் முதல் முதலீட்டினை செய்ய முடியும்.

அதிகபட்ச முதலீட்டு வரம்பு எவ்வளவு?
 

அதிகபட்ச முதலீட்டு வரம்பு எவ்வளவு?

சவரன் தங்கம் பத்திரத்தில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 4 கிலோ கிராம் வரை முதலீட்டினை செய்ய முடியும். இதுவே அறக்கட்டளை மற்றும் இது போன்ற அமைப்புகள் என்றால் 20 கிலோ கிராம் வரை சவரன் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

 முதிர்வு காலம்

முதிர்வு காலம்

சவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் ஆகும் போது முதிர்வடையும். இடையில் வெளியேற வேண்டும் என்றால் 5, 6, 7 ஆண்டுகளில் வட்டி தொகை செலுத்தப்படும் போது வெளியேறலாம்.

 1 கிராம் சவரன் தங்க பத்திரத்தின் விலை எவ்வளவு?

1 கிராம் சவரன் தங்க பத்திரத்தின் விலை எவ்வளவு?

சந்தையில் விற்கப்படும் சுத்த தங்கத்தினை விட கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைவாக செலுத்தித் தங்க பத்திரத்தினை வாங்கலாம்.

 வட்டி விகிதம் லாபம் எவ்வளவும்?

வட்டி விகிதம் லாபம் எவ்வளவும்?

சவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு அரையாண்டின் போது 2.5 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.

 வருமான வரி நன்மைகள்

வருமான வரி நன்மைகள்

வருமான வரி சட்டம் 1961-ன் கீழ் சவரன் பத்திரம் மூலம் கிடைக்கப்படும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதுவே தனிநபர்களுக்கு மூலதன ஆதாயங்கள் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

கடன் கிடைக்குமா?

கடன் கிடைக்குமா?

தங்கத்தினை வைத்து எப்படி கடன் பெற முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திரத்தினையும் அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.

 தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

சவரன் தங்க பத்திரத்தில் பான் அல்லது டான் அல்லது ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரி சான்றுகளை சமர்ப்பித்து முதலீட்டினை தொடங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt Announces Sovereign Gold Bond Scheme: Important Dates, Eligibility And Other Details

Govt Announces Sovereign Gold Bond Scheme: Important Dates, Eligibility And Other Details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X