மனப்புரம் ஃபினான்ஸ் வெளியிட்ட 10.4% லாபம் அளிக்கும் NCD பத்திர திட்டம்: முதலீடு செய்யலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

NCD என்ற அழைக்கப்படும் கடன் பத்திர திட்டம் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டும் பணிகளில் மனப்புரம் ஃபினான்ஸ் இறங்கியுள்ளது. பங்கு சந்தை சரிவில் இருக்கும் நிலையில் மனப்புரம் ஃபினான்ஸ் நிறுவனம் NCD கடன் பத்திர திட்டம் மூலம் நிதி திரட்டுகிறது.

 

இந்தப் பத்திர திட்டமும் பிக்சட் டெபாசிட் போன்று ரிஸ்க் ஏதுமில்லாமல் முதலீட்டாளர்களுக்குக் கூறிய படி லாபத்தினை அளிக்கும்.

 மனப்புரம் ஃபினான்ஸ்

மனப்புரம் ஃபினான்ஸ்

நகை அடன் அளிப்பதற்குப் புகழ் பெற்ற நிறுவனமான மனப்புரம் ஃபினான்ஸ் முதற்கட்டமாக 200 கோடி ரூபாயும் பின்னர் அதிகபட்சமாக 800 கோடி ரூபாய் வரையிலும் NCD மூலம் நிதி திரட்டும்.

மனப்புரம் ஃபினான்ஸ் நிறுவனம் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு 9.5 முதல் 10.4 சதவீதம் வரையிலான வட்டி விகித லாபத்தினை அளிக்க உள்ளது. இது போன்ற திட்டங்களில் IL&FS நிறுவனம் முதலீடுகளைப் பெற்றுச் சிக்கலில் உள்ள நிலையில் மனப்புரம் நிறுவனம் இதன் மூலம் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் லாபத்தினைப் பகிர்ந்து வழங்க முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளது.

 பத்திரம் வெளியிடும் காலம்

பத்திரம் வெளியிடும் காலம்

மனப்புரம் நிறுவனம் NCD கீழ் அக்டோபர் 24-ம் தேதி முதல் 2018 நவம்பர் 22-ம் தேதி வரை பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

 முதலீட்டு வரம்பு
 

முதலீட்டு வரம்பு

பத்திரத்தின் முக மதிப்பு 1,000 ரூபாய், குறைந்தபட்ச விண்ணப்ப தொகை 10,000 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

Series I II III IV V VI VII VIII IX X
Interest payment frequency Cumulative Monthly Monthly Annual Annual Annual Cumulative Cumulative Cumulative Cumulative
Tenure 400 days 36 months 60 months 24 mths 36 mths 60 mths 24 months 36 mnths 60 mnths 2557 days
Coupon % NA 9.6% 10.0% 9.85% 10% 10.4% NA NA NA NA

வாங்கலாமா? வேண்டாமா?

வாங்கலாமா? வேண்டாமா?

மனப்புரம் ஃபினாஸ் நிறுவனத்திற்குத் தங்க நடை வழங்குவது தான் பின்புலம். ஒருவே லை தங்கம் விலை மிகப் பெரிய அளவில் சரியும் போது பாதிப்பு ஏற்படும். உதாரணத்திற்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்திற்கு 70,000 ரூபாய் கடன் அளிக்கிறார்கள். இதுவே தங்கத்தின் விலை 60 சதவீதம் சரிந்தால் மான்ப்புரம் ஃபினான்ஸ் நிறுவனத்தினால் முதலீட்டாளர்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்க முடியாத சூழல் ஏற்படும். ஆனால் தங்கத்தின் விலை ஒரே அடியாக 50% அல்லது 60% எல்லாம் சரிய வாய்ப்பில்லை. ஆனால் அதிகத் தொகையினை முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mannapuram Finance 10.4% NCD Issue Opens: Should You Invest?

Mannapuram Finance 10.4% NCD Issue Opens: Should You Invest?
Story first published: Friday, October 26, 2018, 13:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X