இனி வீட்டில் இருந்து கொண்டே அஞ்சல் கணக்கினை தொடங்கலாம்.. எப்படி இணைவது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலத்திலும் இல்லத்தரசிகளின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது அஞ்சலகங்கள் தான். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் நகர்புறங்களிலும் அஞ்சல சேமிப்பு திட்டங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது.

அன்றைய காலகட்டத்தில் நமது பாட்டிமார்கள் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணத்தினை, கணவருக்கு தெரியாமல் சமையலறையில் சேமித்து வைப்பார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. சேமிப்பு கணக்கினை தொடங்கி, அதில் சேமிக்கும்போது, அசலுடன் சேர்த்து வட்டியும் கிடைக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சேமிப்பு திட்டத்தினை உள்ளீரில் உள்ள அஞ்சல வங்கிலேயே தொடங்கிக் கொள்ளலாம் என்றால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அதிலும் தற்போது அஞ்சல சேமிப்பு வங்கியில் உள்ள, சேமிப்பு கணக்கில் வங்கிகளில் உள்ளதை போன்றே சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆன்லைனில் அஞ்சல சேமிப்பு கணக்கு

ஆன்லைனில் அஞ்சல சேமிப்பு கணக்கு

குறிப்பாக வங்கிக் கணக்கினை போலவே, ஆன்லைனிலேயேயும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த அஞ்சல சேமிப்பு கணக்கினை IPPB மொபைல் அப்ளிகேஷன் மூலம் தொடங்கிக் கொள்ள முடியும். இதனை பயன்படுத்தி சில அடிப்படை வங்கி சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். முன்பெல்லாம் எந்தவொரு சேவை என்றாலும், அஞ்சலகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

ஆன்லைனிலேயே பல சேவைகள்

ஆன்லைனிலேயே பல சேவைகள்

ஆனால் தற்போது வங்கிகளை போலவே, அஞ்சல வங்கிகளிலும் ஆன்லைன் சேவைகள் உள்ளன. உதாரணத்திற்கு சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த, இருப்புதொகை பார்க்க, பணப்பரிமாற்றம் செய்ய, தொடர் வைப்பு நிதி, வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி என்ற பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனிலேயே பெற முடியும்.

வயது தகுதி

வயது தகுதி

இதற்காக நீங்கள் முதலில் செய்ய வேண்டியதெல்லாம் IPPB ஆப்பினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் டிஜிட்டல் சேமிப்பு கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். எனினும் இந்த சேமிப்பு கணக்கினை தொடங்க வாடிக்கையாளார்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு இந்தியராக இருக்க வேண்டும்.

விவரங்களை பதிவிட வேண்டும்

விவரங்களை பதிவிட வேண்டும்

முதலில் இந்த சேமிப்பு கணக்கினை தொடங்க, IPPB ஆப்பினை உங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒபன் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண் தேவைப்படும். இதனை பதிவு செய்த பிறகு, நீங்கள் பதிவு செய்ய மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். இதன் பிறகு உடனடியாக நீங்கள் ஒரு கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்குள் இதனை செய்ய வேண்டும்

ஒரு வருடத்திற்குள் இதனை செய்ய வேண்டும்

அதன் பிறகு உங்களது முக்கிய விவரங்கள், அதாவது அம்மா பெயர், கல்வித் தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். வேண்டிய விவரங்களை கொடுத்த பிறகு சப்மிட் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது சேமிப்பு கணக்கினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும் இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலிட் ஆக இருக்கும். இதனை துவங்கிய ஒரு வருடத்திற்குள், நீங்கள் நேரடியாக சென்று பையோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to open post office digital savings account using mobile app

post office digital savings account updates.. How to open post office digital savings account using mobile app
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X