மியூச்சுவல் ஃபண்ட்ஸில் தினமும் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பானது மட்டுமல்ல அதிக வருவாய் தரும் ஒரு முதலீட்டு அமைப்பு என்பதை பார்த்து வருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த தொகை பத்து முதல் இருபது வருட காலத்தில் மிகப் பெரிய தொகையாக நமக்கு திருப்பி அளிக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதற்கு பதிலாக ஒருவர் வாரம் அல்லது தினமும் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்குமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு பாஸ்புக் வழங்கப்படுமா?மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு பாஸ்புக் வழங்கப்படுமா?

 மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக SIP என்று கூறப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் என்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதையும் பார்த்தோம்.

தினசரி முதலீடு

தினசரி முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே அனைவரும் மாதம் ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வாரம் ஒரு முறை அல்லது தினமும் கூட முதலீடு செய்யும் வகை உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக லாபம்

அதிக லாபம்

வியாபாரிகள் தங்கள் தினசரி லாபத்தில் இருந்து தினசரி ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினசரி முதலீடு செய்து வருகின்றனர். இந்த தினசரி முதலீடு காரணமாக முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்குமா என்பதை பார்ப்போம்.

ஒரே வருமானம்

ஒரே வருமானம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது அந்த முதலீடு தினசரி, வாரம், மாதம், மற்றும் காலாண்டு என எப்படி முதலீடு செய்தாலும் ஒரே விதமான வருமானம் தான் கொடுக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சில திட்டங்கள் மட்டுமே

சில திட்டங்கள் மட்டுமே

குறுகிய காலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வேண்டுமானால் தினசரி முதலீட்டில் அதிக வருவாய் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தினசரி முதலீடு என்பது ஒருசில திட்டங்களில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து திட்டங்களிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம் இருக்கும் நிலையில் சில குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மட்டுமே தினசரி முதலீடு உள்ளதால் அதில் உங்களுக்கு பொருந்தக்கூடிய தினசரி முதலீடு திட்டம் எது என்பதை ஆய்வு செய்து தேர்வு செய்து கொள்ளலாம்.

நீண்ட காலம்

நீண்ட காலம்

ஆனால் அதே நேரத்தில் நீங்கள் 10 முதல் 15 வருட காலத்தில் முதலீடு செய்ய விரும்பினால் தினசரி முதலீட்டு தொகை என்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது அறிந்து கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்கு மட்டுமே தினசரி முதலீட்டின் தாக்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரமங்கள்

சிரமங்கள்

மேலும் தினசரி SIP முறையில் முதலீடு செய்வதால் ஏற்படும் சிரமங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வங்கி கணக்கில் தினசரி நம்முடைய வங்கி இருப்பை தினசரி பராமரிக்கவேண்டும். மேலும் சந்தை மதிப்பு தினசரி ஏறி இறங்கும் போது முதலீடும் தினசரி ஏறி இறங்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IF one invest daily in a Mutual Fund get higher income?

We grew up listening to the famous hare and tortoise story that taught us - slow and steady wins the race. This moral takeaway finds relevance in all spheres of life including investments.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X