என்ன தான் முதலீட்டு திட்டம் இருந்தாலும் அஞ்சலகத்தில் உள்ள திட்டங்கள் இன்றும் மிக பிரபலமான திட்டங்களாக உள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் எனும்போது, இன்னும் ஒரு படி மேலே போல் சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பாக இருக்க வேண்டும். உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்பாக இருக்கும்.
அதற்கான வட்டி விகிதமும் அதிகம், இது மிக பாதுகாப்பான ஒரு திட்டம் எனலாம். அப்படி ஒரு வாய்ப்பினை வழங்கும் ஒரு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமாகும்.
பெண் குழந்தை பெயரில் தொடக்கம்
ஒரு பெண் குழந்தை பிறந்த உடன் தொடங்கிக் கொள்ளலாம். இதனை 10 வயதில் அடையும் வரை அவர்களின் பெயரில் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில் தொடங்கிக் கொள்ளலாம். இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழும் அவசியம் தேவை.
எவ்வளவு வட்டி?
ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கினை மட்டுமே தொடங்கிக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே தொடங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு 250 ரூபாயில் இருந்து, 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
வரிச்சலுகை
இதில் நீங்கள் மாத மாதமோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் இடையில் நிறுத்தப்பட்ட கணக்குகளை கூட தொடங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் வரையில் தொடர்ந்து கொள்ளலாம். இதில் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.
முதிர்வு மற்றும் முடிவு
இந்த திட்டமானது பெண் குழந்தையின் வயது 21 வயதை எட்டும் போது முதிர்வடையும். 18 வயதிற்கு மேல் பெண்ணிற்கு திருமணம் நடக்கும்போது தானாகவே முதிர்வடையும்.
ஒரு வேலை திட்டத்தின் காலத்தில் பாதுகாவலர் இறந்து விட்டாலோ அல்லது தீவிர நோயால் பாதிக்கப்பட்டாலோ? அந்த சமயத்தில் இடையில் முடித்துக் கொள்ளலாம்.
எப்படி தொடங்குவது?
இந்த திட்டத்தினை உங்களது அருகில் உள்ள அஞ்சலகத்தில் சென்று தொடங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் அஞ்சலகத்தின் இணைய பக்கத்தில் உள்ள பார்மினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனை அருகில் இருக்கும் அஞ்சலகத்தில் கொடுக்கலாம்.
ஏன் சிறந்தது?
இந்தியா முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலக கிளைகளை கொண்டிருக்கும் நிலையில், இதில் எளிதில் சேவைகளை பெற முடியும். அதோடு இந்த திட்டங்களின் மூலம் கணிசமான முதிர்வு தொகையினையும் பெற முடியும். இதன் மூலம் உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்று திருமணத்திற்கு தேவையான நிதியினை பெற முடியும். இது ஒரு காலகட்டத்தில் நாம் இல்லையென்றாலும் கூட, அவர்களின் எதிர்காலம் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications