மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் என்பது சேமிப்புக்கு மிகவும் சரியானது என்றும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

 

ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பை தொடங்குவதற்கு முன்னர் பல ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று ஒரு சிலர் கருதுவார்கள்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு KYC என்ற ஒன்றை மட்டும் செய்துவிட்டால் போதும் நீங்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எத்தனை மியூச்சுவல் ஃபண்ட்களில் வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 வங்கி கணக்கு

வங்கி கணக்கு

ஒரு வங்கி கணக்கு தொடங்குவதற்கு முன்னர் அந்த வங்கி கணக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்வது வழக்கமாகும். அதாவது ஆன்லைன் கணக்கிற்கான விண்ணப்பம், டெபிட் கார்டு விண்ணப்பம், செக் புக்கிற்கான விண்ணப்பம் உள்பட பல்வேறு விண்ணப்பங்களை தாக்கல் செய்வோம். ஆனால் அந்த விண்ணப்பங்களை ஒருமுறை தாக்கல் செய்து விட்டால் அதன் பின்னர் நமது வாழ்நாள் முழுவதும் அந்த வங்கியின் அனைத்து சேவைகளையும் நாம் பெற்று கொள்ளலாம்.

KYC சரிபார்ப்பு

KYC சரிபார்ப்பு

அதேபோல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் ஒரே ஒரு முறை KYC என்ற சரிபார்ப்பை நிறைவு செய்து விட்டால், அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டால் அதன் பிறகு ஒருவர் எந்த மியூச்சுவல் ஃபண்டில் வேண்டுமானாலும், எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன்
 

ஆன்லைன்

KYC என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த ஒன்றை மட்டும் நாம் செய்து விட்டால் மியூச்சுவல் ஃபண்ட் பயணத்தை இனிதே தொடங்கலாம். KYC சரிபார்ப்பு பணி நிறைவடைந்து விட்டால் அதன் பின்னர் நாம் வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

eKYC

eKYC

KYC சரிபார்ப்பை ஆன்லைனிலேயே செய்ய தற்போது வழிவகை வந்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் eKYC செய்தால் ஒரு ஆண்டுக்கு 50,000 மட்டுமே நீங்கள் முதலில் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டை திரும்ப எடுத்தல்

முதலீட்டை திரும்ப எடுத்தல்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் KYC பணி நிறைவு பெற்ற பிறகு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் உதவியுடன் நீங்கள் எந்த மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். அதேபோல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் அதற்குரிய கோரிக்கையை விண்ணப்பித்து உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டது.

3 அல்லது 4 நாட்கள்

3 அல்லது 4 நாட்கள்

நீங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்குரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் மூன்று அல்லது நான்கு வேலை நாட்களுக்குள் உங்கள் பணம் உங்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் மாறும் வசதி

திட்டம் மாறும் வசதி

எஸ்.ஐ.பி மூலமோ அல்லது லம்ப்சம் மூலமோ நீங்கள் முதலீடு செய்திருந்தால் ஒரு திட்டத்தில் இருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறுவதற்கும் தற்போது ஆன்லைனில் வசதி வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் KYC என்ற ஒரே ஒரு சரிபார்ப்பு வகையை மட்டும் செய்துவிட்டு தாராளமாக முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the process ways to get started with Mutual Fund investments?

The basic requirement for starting your Mutual Fund journey is to complete your KYC by submitting the necessary documents for verification. Once KYC is complete, you can invest in any mutual fund for any amount at any time.
Story first published: Tuesday, October 25, 2022, 7:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X