சீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக மக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் அதிகமான நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. சற்றும் எதிர்பார்க்காத மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் பெரும் நாடுகளும் கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வீட்டில் முடங்கியுள்ளனர்.

 

இப்படியிருக்கும் சூழ்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா இயல்பு நிலைக்குத் திரும்பி வருவது மட்டும் அல்லாமல் தொழிற்சாலைகள் இயங்கவும், மக்கள் ஷாப்பிங் செல்லவும் துவங்கியுள்ளனர்.

பிரம்மாண்ட உதவித் தொகை! கொரோனா வைரஸுக்கு எதிராக ரூ.150 லட்சம் கோடி உடன் களம் இறங்கும் அமெரிக்கா!

2வது பெரிய பொருளாதார நாடு

2வது பெரிய பொருளாதார நாடு

கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்புகளை எதிர்கொண்ட சீனா, பல்வேறு மாறுபட்ட சிகிச்சைகள், கடுமையான விதிமுறைகளின் மூலம் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களையும் நாட்டையும் காப்பாற்றியுள்ளது. இதனால் உலகிலேயே 2வது பொருளாதார நாடான சீனா தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி தனது உற்பத்தியை இன்ஜின்-ஐ வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகள்

சீனா தற்போது உற்பத்தியைத் துவங்கியுள்ள நிலையில், சீன உற்பத்தி பொருட்கள் இல்லாமல் தவித்த ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, லத்தின் அமெரிக்கச் சந்தைகள் விரைவில் மீண்டு வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் முதலீட்டுச் சந்தையும், பங்குச் சந்தையும் வேகமாக மீண்டு வரும் எனவும் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உகான்
 

உகான்

கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகான் நகரம் கூடத் தற்போது அதீத ஆபத்துக் கட்டத்தில் இருந்து மிதமான ஆபத்துக் கட்டத்திற்கு இறங்கியுள்ளது. சொல்லப்போனால் அடுத்த சில வாரங்களில் உகான நகரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கூறப்படுகிறது.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

சீனாவில் தற்போது பல பகுதிகளில் மக்கள் பணிக்குச் செல்ல துவங்கியுள்ளனர், உற்பத்தி ஆலைகள் சரிவர இயங்க துவங்கியுள்ளது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகச் சீனாவில் சரிந்த கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் மீண்டு வரும் எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது.

இதற்கு முக்கியமான காரணம் மக்கள் பணிக்குத் திரும்பியது மட்டும் அல்லாமல் ஷாப்பிங் செல்லவும், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதும் அதிகமாகியுள்ளது. இது நிச்சயம் ஒரு நல்ல வர்த்தக வாய்ப்பை சீனாவில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானச் சேவை

விமானச் சேவை

போர்ச்சுகல் நாட்டின் விமானச் சேவை எண்ணிக்கை விடவும் குறைவான நிலையில் இருந்த சீனாவின் விமானச் சேவை வர்த்தகம் தற்போது வளர்ச்சிப் பாதைக்குச் சென்றுள்ளது. கடந்த 7 நாட்களில் கிட்டத்தட்ட 2.4 சதவீதம் அதிகமான விமானப் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால் உலகின் டாப் 10 விமானச் சேவை கொண்ட நாடுகள் அனைத்தும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

சப்வே பயணிகள் எண்ணிக்கை

சப்வே பயணிகள் எண்ணிக்கை

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவில் சப்வே பயணிகளின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China returns: Rest of world goes in Coronavirus quarantine

While much of the world’s output is grinding to a halt because of the coronavirus, China is slowly emerging from its shutdowns by restarting production at factories and resuming some flights.
Story first published: Thursday, March 26, 2020, 6:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X