கொரோனா அமெரிக்காவ அடிச்சா, இந்தியாவுக்கு வலிக்கும்! எப்படி? ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே தற்போது அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம் இருக்கிறார்கள். சுமார் 2.77 லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Trump says they need hydroxychloroquine or India will face retaliation
 

அமெரிக்கர்களை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்ற, அமெரிக்க அரசு சுமாராக 2.2 ட்ரில்லியன் டாலர் (சுமாராக 150 லட்சம் கோடி ரூபாய்) உதவித் தொகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படி உலகின் மிகப் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த அமெரிக்க பொருளாதாரமே இயங்க முடியாமல், உதவித் தொகையை நம்பி இருப்பது ஒரு பக்கம் வருத்தம் என்றாலும், மறு பக்கம் இந்தியாவை அது பெரிய அளவில் பாதிக்கும்.

இப்பவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்! ஆனால் ஏப் 15க்கு பிந்தைய ரயில்களுக்குத் தான் கிடைக்கும்!

விரிவாகப் பார்ப்போம்

விரிவாகப் பார்ப்போம்

அப்படி அமெரிக்க பொருளாதாரம், கொடிய கொரோனா வைரஸ் தாக்குதால் பாதிக்கப்பட்டுவதால், இந்தியப் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும்? இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கு மத்தியில் இருக்கும் பெரிய தொடர்பு என்ன..? இந்திய பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

பெரிய பாதிப்பு

பெரிய பாதிப்பு

அமெரிக்கா கொரோனா வைரஸால் எவ்வளவு அதிகம் பாதிக்கபப்டுகிறதோ, அந்த அளவுக்கு அமெரிக்காவுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்வது குறையலாம். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்துமே? பொதுவாக உலக பொருளாதாரம் சரி இல்லாத போது பல நாடுகள் பெரிய அளவில் இறக்குமதியை (இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்) குறையத் தானே செய்யும், எப்படி அமெரிக்காவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி மட்டும் அதிகம் பாதிக்கப்படும்? என்று கேட்கிறீர்களா.

பெரிய ஏற்றுமதியாளர்
 

பெரிய ஏற்றுமதியாளர்

கடந்த பல ஆண்டுகளாக, இந்தியா தன் பொருட்கள் மற்றும் சேவைகளை, அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா. கடந்த 2019 - 20 (ஏப் - ஜன) நிதி ஆண்டில் அமெரிக்காவுக்கு 44.72 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது இந்தியா. அதற்கு முந்தைய 2018 - 19-ல் 52.4 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது.

சதவிகிதத்தில்

சதவிகிதத்தில்

அதாவது இந்தியா 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறது என்றால், அதில் 16.9 ரூபாயை அமெரிக்காவுக்கு மட்டுமே செய்து இருக்கிறது. iது 2019 - 20 நிதி ஆண்டு கணக்கு. கடந்த 2018 - 19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 15.87 சதவிகிதத்தை அமெரிக்காவுக்குத் தான் செய்து இருக்கிறது இந்தியா. எனவே தான் அமெரிக்காவை கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்படைந்தால், இந்தியாவின் ஏற்றுமதியும் பெரிய அளவில் அடி வாங்கும் எனச் சொல்கிறோம். இந்த ஏற்றுமதி பாதிப்பால், இந்தியா என்ன மாதிரியான பக்க விளைவுகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

என்ன வியாபாரங்கள் அடிவாங்கும்

என்ன வியாபாரங்கள் அடிவாங்கும்

விலை உயர்ந்த நகைகள், உலோகங்கள், கற்கள் போன்றவைகள் மட்டும் இந்தியாவில் இருந்து சுமார் 7 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி ஆகின்றன. இதற்கு அடுத்து, டெக்ஸ்டைல் துறை சார்ந்தவைகள் மட்டும் சுமார் 5.6 பில்லியன் டாலர், ஆட்டோமொபைல் துறை சார்ந்து 2.1 பில்லியன் டாலர் ஏற்றுமதி ஆகின்றன. இது போக கடல் சார் உணவுகள் சுமார் 1.8 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி ஆகி இருக்கின்றன. இது எல்லாம் 2019 - 20 கணக்கு தான். இப்போது இந்த வியாபாரம் எல்லாம் அடி வாங்கும்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

மேலே சொன்னவைகளில் டெக்ஸ்டைல் மற்றும் கடல் சார் உணவு ஏற்றுமதி குறைய நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டும் தமிழகத்தையே நேரடியாக பாதிக்க கூடியவைகள். அமெரிக்கா கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் வரை, அதிகம் இறக்குமதி செய்யமாட்டார்கள். எனவே இந்த துறைகளை நம்பி வாழும் தினக் கூலி வேலை செய்பவர்கள், காண்டிராக்டர்கள், சப் காண்டிராக்டர்கள் என பல தரப்பட்ட, கணிசமான மக்களின் பிழைப்பே கேள்விக்கு உள்ளாகலாம்.

உள் நாட்டு சிக்கல்

உள் நாட்டு சிக்கல்

கொரோனா வருவதற்கு முன்பே, இந்திய பொருளாதாரத்தில் டிமாண்ட் இல்லை, எனவே நுகர்வு அதிகரிக்கவில்லை. எனவே உற்பத்தி பெருக்க வேலைக்கு ஆட்களை எடுக்க முடியவில்லை, வேலைக்கு எடுக்காததால் மக்கள் கையில் பணம் இல்லை, எனவே நுகர்வு அதிகரிகக்வில்லை என ஒரு நெருக்கடியான பொருளாதார சுழற்சியில் சிக்கி இருந்தோம். இப்போது இந்த சுழற்சியை சர்வதேச அளவில் பரப்பி இருக்கிறது கொரோனா.

ஏற்றுமதி சரிவு

ஏற்றுமதி சரிவு

உள்நாட்டில் டிமாண்ட் சரிந்தது போல, இப்போது கொரோனாவால், வெளிநாடுகளிலும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான டிமாண்ட் சரியலாம். எனவே சர்வதேச அளவில் பொருட்களை வாங்க ஆள் இருக்காது. பொதுவாக பொருட்களை வாங்க ஆள் இருந்தால் தானே, பொருளை உற்பத்தி செய்வார்கள். டிமாண்ட் இல்லாமல் எப்படி உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிக்கவில்லை அல்லது உற்பத்தியை அதிகரிக்கத் தேவை இல்லை என்றால், வேலை வாய்ப்புகள் சரியும், இதனால் மக்கள் கையில் பணப் புழக்கமே பெரிய அளவில் குறைந்து, ஒட்டு மொத்த நுகர்வு மேலும் சரியலாம்.

பொருளாதார பிரச்சனைகள்

பொருளாதார பிரச்சனைகள்

இந்திய பொருளாதாரத்தில் ஏற்றுமதி சரிந்தால் அந்நிய செலாவணி கையிருப்பு சரியும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பாதிப்புகள் ஏற்படும், இந்திய பொருளாதாரத்தின் வெளிநாட்டு பண வரவு (Foreign Remittance) என எல்லாமே பாதிப்புக்கு உள்ளாகும். கடைசியில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள்

அமெரிக்காவில் மட்டும் தான் பாதிப்பு மற்ற நாடுகளுக்கு நாம் வழக்கம் போல ஏற்றுமதி செய்யலாமே என்றால், அதுவும் அடி வாங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளான சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளும் கூட தற்போது கொரோனாவால் பலத்த அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. எனவே, ஏற்றுமதி வியாபாரிகள், ஏற்றுமதிக்காக பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் எல்லாம் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா ஒழியட்டும். வியாபாரம் செழிக்கட்டும். பொருளாதாரம் வளரட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How coronavirus hit american economy give pain to indian economy

If american economy hit by coronavirus more and more, it will give pain to indian economy also. How the coronavirus hit american economy will give pain to indian economy.
Story first published: Saturday, April 4, 2020, 19:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X