அமெரிக்க தொழில்துறையில் தடம் பதித்த இந்திய சிஈஓ-க்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியன் சிஈஓ-க்கள் உலகம் முழுவதும் ஒரு அலையை உருவாக்குகிறார்கள். பல மல்டிநேஷனல் நிறுவனங்கள் தங்கள் நிறுவத் தலைமைக்கு இந்தியரைத் தான் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள்

1. சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை இப்போது ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். கூகுள், 10 ஆகஸ்ட் 2015 இல் அவரைத் தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்தது. பிச்சையின் சமீபத்திய நியமனம் அவரை அமெரிக்கத் தொழில்நுட்பத்துறையின் ஒரு நல்ல இடத்தைப் பிடித்த இந்தியராக ஆக்கியது. பிச்சை சென்னையின் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஐஐடி காரக்பூரில் தனது பொறியாளர் பட்டத்தைப் பெற்று, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் தனது எம்பிஏ வை முடித்தவர்.

பிச்சை தயாரிப்பு மேலாண்மை தலைவராக 2004 ல் கூகுளில் சேர்ந்தார். அவர் கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓஎஸ் உட்படப் பல்வேறு கூகுள் கிளையண்ட் பொருட்களில் புதுமையான முயற்சிகள் புரிந்துள்ளார். அவர் மேலும் ஜிமெயில் மற்றும் கூகுள் வரைபடங்கள் போன்ற பல்வேறு கூகுள் பயன்பாடுகள் மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளார். பிச்சை தான் சாம்சங், மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் ஆகியோருடன் மென்மையான உறவுகளை ஏற்படுத்திய முக்கிய நபர்களுள் ஒருவராக நம்பப்படுகிறார். அவர் ஜிவ் மென்பொருளில் தலைமை இயக்குநராக ஏப்ரல் 2011 முதல் 30 ஜூலை, 2013 வரையில் பொறுப்பு வகித்தார்.

 

2. சத்யா நாடெல்லா

சத்யா நாடெல்லா பிப்ரவரி 4 2014 முதல் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அவர் ஹைதெராபாத், இந்தியாவில் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் முன்னர் மைக்ரோசாப்ட் கிளவுட் நிறுவன குழு துணைத் தலைவராக இருந்தார்.. அவர் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியாளர் பட்டம் பெற்று எம்எஸ் படிக்க அமேரிக்கா சென்றார்.

சத்யா நாடெல்லா 1992 ல் மைக்ரோசாப்ட் இல் சேர்ந்தார். அவர் நிறுவனத்தின் வரலாற்றில் மூன்றாவது தலைமை நிர்வாகியாக உருவாகும் முன் மைக்ரோசாப்ட் இல் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். அவர் ஆன்லைன் சேவைகள் பிரிவு ஆராய்ச்சி வளர்ச்சி ஆகியவற்றில் (ஆர் & டி) பணிபுரிந்து பின்னர்க் கிளவுட் மற்றும் என்டர்பிரைஸ் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர், மைக்ரோசாப்ட் வணிகப் பிரிவின் துணைத் தலைவர், நிர்வாகத் துணைத்தலைவராகப் பணியாற்றிப் பின்னர்ப் பிப்ரவரி 2014 இல் மைக்ரோசாப்ட்டின் புதிய சிஈஓ வாக அறிவிக்கப்பட்டார்.

 

3. அஜய் பங்கா

அஜய் பங்கா என எல்லோராலும் அழைக்கப்படும் அஜய்பால் பங்கா, 12 ஏப்ரல், 2010 இல் மகாராஷ்டிரா, இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் மாஸ்டர்கார்டின் தற்போதைய தலைவர் மற்றும் சிஈஓ. ஒரு இந்திய இராணுவ பின்னணி உள்ள இவர் குடும்பத்தில் அவரது சகோதரர் எம்.எஸ் பங்காவும் இவருக்குச் சமமாகத் தலைமை நிர்வாக அதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டவர்.

அஜய் பங்கா 1981 இல் நெஸ்லேவில் தனது பணியைத் தொடங்கினார். அவர் அங்குக் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர்ப் பெப்சிகோ வில் சேர்ந்தார். . சமூக வளர்ச்சி பிரச்சினைகளில் உள்ள ஆர்வத்தினால் அவர் 2005-2009 காலப்பகுதியில் மைக்ரோஃபினான்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஜனாதிபதி பராக் ஒபாமா வர்த்தகக் கொள்கை உடன்பாட்டுக் குழுவில் ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகப் பங்காவை நியமித்தார். அவர் யூ.எஸ்-இந்திய வணிகக் கவுன்சிலின் (USIBC) தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

 

4. இந்திரா நூயி

இந்திரா நூயி என அன்புடன் அழைக்கப்படும் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி 2006 முதல் பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். சென்னையில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மானேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில், கல்கத்தாவில் (ஐஐஎம்-சி) இருந்து மேலாண்மையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.

அவர் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்பில் (BCG) தனது பணியைத் தொடங்கி மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் போவேரியில் சேர்ந்து நல்ல நிலைகளை அடைந்தார். பெப்சிகோ நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டு 2001 ல் பிரெசிடென்ட் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆனார், அவர் 1998 இல் டிராபிகானா கையகப்படுத்துதல் மற்றும் குவேக்கர் ஓட்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகித்தார். அவர் பார்ச்சூனில் வணிகத்தில் மூன்றாவது மிகவும் சக்திவாய்ந்த பெண் என்ற பட்டியலில் இடம் பெற்று கூடவே வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கவனிக்கத்தக்க 50 பெண்கள் பட்டியலிலும் இடத்தைப் பெற்றுள்ளார்.

 

5. இவான் மெனிசஸ்

இவான் மெனிசஸ் 1 ஜூலை 2013 முதல் டாஜியோ வின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர். அவர் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிராவில் பிறந்தவர். அவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அகமதாபாத்திலும் அமெரிக்கக் கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டிலும் பயின்றவர்.

மெனிசஸ் 1997 இல் டாஜியோவுடன் சேர்ந்து தலைமை ஆபரேட்டிங் அதிகாரி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் சேர்மேன், ஆசியா பசிபிக் சேர்மன் பிரசிடென்ட் மற்றும் சிஈஓ உட்படப் பல்வேறு தலைமை பணியாற்றி உள்ளார். மெனிசஸ் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பேஷன் விற்பனையாளர் பயிற்சியாளர் நிர்வாகத்தில் ஈடுபடாத இயக்குநராகவும் உள்ளார்.

 

 

6. ஷாந்தனு நாராயேன்

ஷாந்தனு நாராயேன் 2005 ஆம் ஆண்டிலிருந்து அடோப் சிஸ்டம்ஸின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி. அவர் அடோப் அறக்கட்டளை குழுவின் தலைவராகவும் உள்ளார். அவர் நன்கு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் இந்தியாவில் உள்ள ஹைதெராபாத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்திவந்தார். இவரது தாயார் இவருக்கு அமெரிக்கன் லிட்ரேச்சர் கற்பித்தார். அவர் பவுலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில், முதுநிலை பட்டம் பெற்றார்.

அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்திற்குச் சென்று இணையத்தில் டிஜிட்டல் புகைப்படப் பகிர்வு அடிப்படையைச் சார்ந்த ஒரு நிறுவனமான பிக்ட்ரா இணை துவக்குனர் ஆனார். நாராயேன் மூத்த துணைத் தலைவராய் 1998 ல் அடோப்பில் சேர்ந்து 2005 இல் அவர் சிஈஓ வாக அறிவிக்கப்பட்டார். உலகளாவிய தயாரிப்பு ஆராய்ச்சி, உலகளவில் பொருட்கள் நிர்வாகத் துணைத் தலைவர், வைஸ் பிரெசிடென்ட் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துப் பின்னர்ச் சிஈஓ வாக அறிவிக்கப்பட்டார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian CEOs Leave Their Mark in US Industry

Indian CEOs Leave Their Mark in US Industry
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns