ஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : இங்கிலாந்து நாட்டு எண்ணெய் டேங்கரை ஈரான் கடத்திய நிலையில், தற்போது அந்த எண்ணெய் கப்பலை விடுவிக்க கோரி இங்கிலாந்து அரசு ஈரானுக்கு அழுதத்தை கொடுத்து வருகிறது.

 

ஆமாங்க.. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இங்கிலாந்தின் எண்ணெய் கப்பலை ஈரான் கடத்தி இருப்பதாகவும், ஈரானே கடத்தியதாக கூறியிருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அரசு ஈரானை அந்த கப்பலை விடுவிக்க கோரி வற்புறுத்தி வருகிறது.

இதற்கு காரணம் இங்கிலாந்து நாட்டின் இந்த கப்பல் சர்வதேச கடல் விதிகளை மீறிவிட்டதாகச் கூறி இருக்கிறது ஈரான்.

ஈரானின் எல்லை பகுதிக்கு செல்லாதீர்கள்?

ஈரானின் எல்லை பகுதிக்கு செல்லாதீர்கள்?

இந்த நிலையில் இங்கிலாந்தின் "Stena Impero" என்ற இந்த கப்பலை விடுவிக்குமாறு இங்கிலாந்து அரசு தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்திப் வெளியுறவு துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட் தனது டிவிட்டரில், பிரிட்டனில் எண்ணெய் கப்பல்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அதோடு பிரிட்டனின் எண்ணெய் கப்பல்கள் பாதுக்காக்கப்படும் என்றும் கூறியுள்ளாராம்.

ஈரானின் சொத்துக்களை  முடக்க திட்டம்

ஈரானின் சொத்துக்களை முடக்க திட்டம்

இதுவரை அமெரிக்கா ஈரான் மட்டுமே பிரச்சனை என்று இருந்து வந்த நிலையில், தற்போது இங்கிலாந்து கப்பலை பிடித்து வைத்துள்ளதோடு, இங்கிலாந்தும் ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டு கப்பலை திரும்ப அனுப்பாமல் இருக்கும் ஈரானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாம். மேலும் ஈரானின் சொத்துகளை முடக்குவது, பல இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பரீசிலிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹார்மூஸ் பகுதியில் தொடர் பதற்றம்
 

ஹார்மூஸ் பகுதியில் தொடர் பதற்றம்

ஒரு புறம் கடந்த சில வாராங்களாகவே தொடர்ந்து இப்பகுதியில் பதற்றம் நீடித்து வருவதையடுத்து, இதற்கு காரணம் ஈரான் மட்டுமே என்று அமெரிக்கா மட்டுமே கூறிவந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அரசும் ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து பல நாடுகளிலும் எதொரொலித்துள்ளது. ஒரு புறம் இந்த குறிப்பிட்ட நாடுகளிடையே பதற்றம் நிலவி வருவதுடன், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காணலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. கடந்த வெள்ளிகிழமையன்றே Brent crude ஆயிலின் விலை 2.4 சதவிகிதம் ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கப்பல் மீன் பிடி கப்பலில் மோதியது?

இங்கிலாந்து கப்பல் மீன் பிடி கப்பலில் மோதியது?

இது குறித்து ஈரான் தரப்பில் கூறப்படுவதாவது, இங்கிலாந்து நாட்டின் இந்த "Stena Impero" கப்பல், ஈரானின் மீன் பிடி கப்பல் மீது மோதியதாகவும், இதனால் தான் ஈரான் தங்கள் பாதுகாப்பு கருதி 23பேர் அடங்கிய இங்கிலாந்து கப்பலை பிடித்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளதாம். அதோடு இந்த கப்பலின் உரிமையாளரான Stena Bulk குழு உற்ப்பினர்கள், கப்பலில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், மேலும் அவர்களை பார்க்க செல்வதாகவும், பந்தர் பஹோனார் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நிலை என்பது குறித்த எந்த தகவலும் கொடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

தவறான திசையில் இருந்து ஜலசந்திக்குள் நுழைந்த கப்பல்

தவறான திசையில் இருந்து ஜலசந்திக்குள் நுழைந்த கப்பல்

ஒரு புறம் நாங்கள் தவறாகவே செல்ல வில்லை என்றும் இங்கிலாந்து, மறுபுறம் ஈரானின் காவர்கள் எச்சரித்தும், கப்பல் தவறாக திசையில் இருந்து ஜலசந்தியில் நுழைந்து என்றும் கூறியுள்ளது. அதோடு இங்கிலாநு கடல் விதிமுறைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இது மற்ற கப்பல்கள் மீது மோதி இருக்கக் கூடும் என்றும் கூறியுள்ளது ஈரான் அரசு.

டிரம்பும் சேர்ந்து கொண்டார்

டிரம்பும் சேர்ந்து கொண்டார்

அமெரிக்காவும் ஈரானும் பேச்சு வார்த்தையில் ஈடுபடலாம், இதன் மூலம் இங்கு நிலவி வரும் பதற்றங்கள் குறையலாம் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால் டிரம்ப் இங்கிலாந்துடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியதுடன், சமீபத்திய முன்னேற்றங்கள் தெஹ்ரானைப் பற்றிய அவரது கடுமையான அணுகுமுறைகள் நியாயப்படுத்த பரிந்துரைத்தன. இந்த நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீன்டும் போர்கொடி தூக்கியுள்ளதயே காட்டுகிறது.

ஈரானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஈரானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இதோடு தற்போது பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளும் இங்கிலாந்து ஆதரவை தெரிவித்துள்ளனவாம். அதோடு இந்த நாடுகள் உடனடியாக இங்கிலாந்து கப்பலை விடுவிக்குமாறும் ஈரானுக்கு எதிராக கோரிக்கை விடுத்துள்ளனவாம். எப்படியோ ஈரானுக்கு எதிராக மேலும் மேலும் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே செல்வது கவனிக்கதக்கது. இந்த நிலையில் மேலும் பதற்றம் அதிகமடைந்து நிலவி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

London steps up pressure on Iran to release seized oil tanker

London steps up pressure on Iran to release seized oil tanker
Story first published: Sunday, July 21, 2019, 12:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X