பெப்சிகோ இந்தியாவுக்கு விருது.. எதுக்காகன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : அமெரிக்கா கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல வருடங்களாக இந்த Corporate Excellence (ACE) விருதினை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான் பெப்சிகோ இந்தியா இந்த விருதினை வழங்க உள்ளதாகவும், அமெரிக்காவின் இந்த விருதுகள் பட்டியல் பெயரில் பெப்சிகோ இந்தியாவின் பெயரும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரி எதற்காக இந்த விருது என்றும் கேட்கிறீர்களா? சுமார் 17 பில்லியன் லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை சேமிப்பதற்காக இந்த நிறுவனம் எடுத்துக் கொண்ட முயற்சியினையும், இதன் மூலம் சுமார் 60,000 பேர் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

 பெப்சிகோ இந்தியாவுக்கு விருது.. எதுக்காகன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

கடந்த 1999ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஏசிஇ, அமெரிக்கா நிறுவனங்களையும், அவர்கள் செய்யும் வர்த்தகத்தையும் ஊக்குவிப்பதற்காகவும், சமூகத்தில் பொறுப்பானவர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பெப்சிகோ இந்தியா தவிர காங்கோ ஜனநாயக குடியரசில் சேம்பர்ஸ் கூட்டமைப்பு, சிங்கப்பூரில் உள்ள புரோக்டர் மற்றும் கேம்பிள் ஆசியா பசிபிக், உகாண்டாவில் உள்ள அஜிலிஸ் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விருதை பெற்றவை என்றும் கூறப்படுகிறது.

இந்த வகையில் பெப்சிகோ இந்தியா பன்னாட்டு நிறுவனம் விவசாயத்தினை நிலை நிறுத்துவதற்காக அதன் செயல்பாட்டின் மூலம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் விவசாயத்தினையும் ஊக்குவிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது அமெரிக்காவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விருது, தனது சமூக நீர் திட்டங்கள் மூலம் 17 பில்லியன் லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை சேமிப்பதற்கு எடுத்துள்ள முயற்சியை இந்த விருது அங்கீகரித்துள்ளதாகவும், இந்த முயற்சி 60,000 பேரை பாதுகாக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரவிருக்கும் அக்டோபர் 31, 2019 அன்று இந்த விருது வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா மட்டும் இல்லங்க, ஏற்கனவே இந்த நிறுவனம் கோல்டன் பீகாக் அவார்டு, பிசினஸ் வோர்ல்டு விருது 2016, அசோசெம் விருது 2018, குறிப்பாக தண்ணீர் சேமிப்புக்காக பல விருதுகளையும், சி.என்.பிசி, இந்தியா க்ரீன் பில்டிங் கவுன்சில், இந்திய கவுன்சில் ஆஃப் புட் அன்ட் அக்ரிகல்சர் விருதுகளையும் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pepsico India wins award for more water save

Pepsico India wins award for more water save, and it's given coming October 31, 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X