ஜப்பான் பங்குச்சந்தை முடங்கியது.. 6 டிரில்லியன் டாலர் சந்தை முதலீட்டாளர்கள் கோபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் பங்குச்சந்தை வர்த்தகம் அனைத்தும் பேப்பர் வர்த்தகத்தில் டிஜிட்டல் வர்த்தக முறைக்கு மாறிவிட்டது. இந்த மாற்றத்தில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ, அதே அளவிற்குப் பிரச்சனையும் உண்டு.

இந்த வகையில் உலகிலேயே 3வது மிகப்பெரிய பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் ஜப்பான் பங்குச்சந்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்தம்பித்துப் போனது.

வியாழக்கிழமை காலையில் வழக்கம் போது பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருந்த போது, வர்த்தகம் துவங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாக ஜப்பான் பங்குச்சந்தை வர்த்தகக் கட்டமைப்பில் டேட்டா கருவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதுபோன்ற கோளாறுகளைச் சமாளிக்கப் பேக்அப் சிஸ்டம் இருக்கும், ஆனால் ஜப்பான் பங்குச்சந்தையில் சிஸ்டத்தில், இந்தப் பேக்அப் சிஸ்டமும் நேரம் பார்த்து பழுது ஏற்பட்டு இயக்காமல் போனது. இதற்கு உடனடியாகத் தீர்வு காண முடியாத நேரத்தில் வர்த்தகமும் துவங்கிவிட்டது.

SBI-யில் இப்படி ஒரு சூப்பர் திட்டம் இருக்கா? எப்படி பெறுவது? மற்ற வங்கிகளில் இந்த திட்டம் உண்டா?SBI-யில் இப்படி ஒரு சூப்பர் திட்டம் இருக்கா? எப்படி பெறுவது? மற்ற வங்கிகளில் இந்த திட்டம் உண்டா?

காலை வர்த்தகம்

காலை வர்த்தகம்

8மணிக்கு வழக்கம் போல் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில், ஆர்டர்கள் அனைத்தும் பெறப்பட்டது, ஆனால் பங்கு விலையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படாமலும், சில நேரம் பழைய விலையும், சில நேரம் புதிய விலையைக் காட்டி முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியது.

சமுக வலைத்தளம்

சமுக வலைத்தளம்

அடுத்த சில நிமிடங்களில் டிவிட்டர் போன்ற சமுகவலைதளத்தில் பங்குச்சந்தை கோளாறு குறித்துச் செய்திகள் காட்டுத்தீ போல் பரவியது. 36 நிமிடத்திற்குப் பின் டோக்கியோ பங்குச்சந்தை வர்த்தகம் முடக்கப்பட்டது. இதனால் வியாழக்கிழமை வர்த்தகம் முழுவதும் முடக்கப்பட்டது.

டிஜிட்டல் வர்த்தகத் தளம்

டிஜிட்டல் வர்த்தகத் தளம்

ஜப்பான் 1999ஆம் ஆண்டுத் தனது பங்குச்சந்தை வர்த்தகத்தை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட போது பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு முழு நாள் முடக்கியது, இதன் பின்பு அக்டோபர் 1, 2020ல் ஜப்பான் பங்குச்சந்தை முழு நாள் முடங்கியுள்ளது.

ஜப்பான் நிதியமைச்சர்

ஜப்பான் நிதியமைச்சர்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது, இதேபோல் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் போனது வருந்தத்தக்கது என ஜப்பான் நிதியமைச்சர் டாரோ அசோ தெரிவித்துள்ளார்.

Arrowhead சிஸ்டம்

Arrowhead சிஸ்டம்

1999ஆம் ஆண்டில் டோக்கியோ பங்குச்சந்தை டிஜிட்டலாக மாற்றப்பட்ட பின்பு, 2010ல் எதிர்காலத் தேவைக்கும், இதுபோன்ற மோசமான நிகழ்வுகளைத் தடுப்பதற்கும் Arrowhead என்ற சிஸ்டத்தை நிறுவியது பங்குச்சந்தை நிர்வாகம். இந்தச் சிஸ்டத்தில் சுமார் 350 சர்வர்களும், அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு இயங்குவதால் உலகிலேயே மிகவும் வேகமாகவும், நம்பகத்தன்மை கொண்ட பங்குச்சந்தையாக விளங்கியது.

விளக்கம்

விளக்கம்

தற்போது பரிமாற்றங்களைப் பதிவு செய்யும் 2 டேட்டா ஸ்டோரேஜ் பெட்டிகளில் ஒன்று மெமரி எரர் காட்டியுள்ளது. பொதுவாக ஏரர் காட்டினால் 2வது கருவி தானாக இயங்க வேண்டும். ஆனால் ஏன் இயங்கவில்லை என விளக்கம் கொடுக்க முடியாமல் இன்றைய நாள் வரையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வரலாற்று நிகழ்வு

வரலாற்று நிகழ்வு

ஜப்பான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த ஒரு நாள் வர்த்தகத் தடை வரலாற்று நிகழ்வாகப் பார்க்கின்றனர். மேலும் இந்த நிகழ்வுக்கு ஜப்பான் அரசும் நேரடியாக மக்களுக்கும், முதலீட்டாளர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளது. டோக்கியோ பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனை Fujitsu ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Technical Glitch halts $6 trillion Japan stock market for a day

Technical Glitch halts $6 trillion Japan stock market for a day
Story first published: Monday, October 5, 2020, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X