தமிழகச் சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல்களின் முடிவுகளில், திமுகக் கட்சி தமிழகத்தில் பெருவாரியாக இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டது. இதன் எதிரொலியாகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் திடீரென 10 சதவீதம் அளவிலான உயர்வைச் சந்தித்தது.
ஆனால் இன்று கதை முழுமையாக மாறிப்போனது.
வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் படி அதிமுக 140 இடங்களிலும், திமுக 75 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
எக்சிட் போல் கணிப்புகள்
இந்நிலையில் எக்சிட் போல்களின் கணிப்புகள் சந்தையில் பொய்த்ததால் மும்பை பங்குச்சந்தையில் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 11.45 சதவீதம் சரிந்து 47.70 ரூபாய் குறைந்து 10.49 மணியளவில் 379.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
கலாநிதி மாறன்
தென் இந்தியா தொலைக்காட்சி வர்த்தகத்தில் மிகப்பெரிய சந்தை மற்றும் வர்த்தகத்தைப் பெற்றுள்ள சன் நெட்வொர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், இவர் திமுகக் கட்சித் தலைவர் கருணாநிதியின் பேரன் ஆவார்.
ராஜ் டெலிவிஷன்
அதேபோல் தென் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொகு தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் டெலிவிஷன் இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் 17.75 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.
தாய் நிறுவனம்
வாக்கு எண்ணிக்கையின் முழுமையான மற்றும் நேரலை முடிவுகளைத் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் தாய் நிறுவனமான தமிழ் ஒன்இந்தியா தளத்தைப் பார்க்கவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications