வங்கிகளில் பணம் அனுப்ப உதவும் ஆர்டிஜிஎஸ்- என்இஎப்டி

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வங்கிகளில் பணம் அனுப்ப உதவும் ஆர்டிஜிஎஸ்- என்இஎப்டி
ஒரே வங்கியின் இரு வேறு கிளைகளில் இருந்து பணம் அனுப்பவது எளிதான விஷயம், ஆனால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்பச் சென்றால், ஆர்டிஜிஎஸ் (RTGS) நம்பர் எழுதுங்க, என்இஎப்டி நம்பர் (NEFT) என்ன என்று கேட்டு குடைவார்கள்.

அது தெரியாவிட்டால் பணம் அனுப்பவே முடியாத நிலை ஏற்படும். அது என்ன ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி நம்பர்?

ஆர்டிஜிஎஸ் என்பது Real Time Gross Settlement. என்இஎப்டி என்றால் National Electronic Funds Transfer.

ஆர்டிஜிஎஸ் என்பது நீங்கள் பணத்தை அடுத்தவரின் கணக்குக்கு அனுப்பியவுடனே அது அவரது கணக்குக்கு உடனடியாகப் போய்விடும். என்இஎப்டியில் பணப் பரிமாற்றம் நடக்க 1 மணி நேரத்துக்கு மேலாகும்.

குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தைத் தான் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்ப முடியும். ஆனால், என்இஎப்டி மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆனால், என்இஎப்டி மூலம் அனுப்பினால் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும் தான் பணம் அனுப்ப முடியும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு 9 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். சனிக்கிழமைகளில் 5 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். நீங்கள் 9 மணிக்கு பணத்தை போட்டால் அது 10 மணிக்குத் தான் அடுத்தவர் கணக்குக்குப் போகும். 10 மணிக்குப் போட்டால் 11 மணிக்குத் தான் போகும். அதாவது 1 மணிக்கு ஒருமுறை தான் பண டிரான்ஸ்பர் நடக்கும்.

ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பினால் உடனடியாக பணம் போய்ச் சேர்ந்துவிடும்.

கட்டணம் எவ்வளவு?:

என்இஎப்டி மூலம் ரூ. 1 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 5 பிளஸ் சேவை வரி.
ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 15 பிளஸ் சேவை வரி.
ரூ. 2 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 25 பிளஸ் சேவை வரி

ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்ப ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ரூ. 30 கட்டணம்
ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 55 ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Difference between RTGS and NEFT | வங்கிகளில் பணம் அனுப்ப உதவும் ஆர்டிஜிஎஸ்-என்இஎப்டி

The acronym 'RTGS' stands for Real Time Gross Settlement. As the name indicates settlement is done on continuous (real-time) without netting. 'Gross Settlement' means the settlement of funds transfer instructions occurs individually (on an instruction by instruction basis). National Electronic Funds Transfer (NEFT) is transfer of funds online by a financial institution, mainly for the banks in India. Individuals, firms or corporates maintaining accounts with a bank branch can receive funds through the NEFT system.
Story first published: Thursday, May 31, 2012, 10:59 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns