முதலீட்டாளர்கள் செபியிடம் ஆன்லைன் மூலம் எவ்வாறு புகார் கொடுக்கலாம்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டாளர்கள் செபியிடம் ஆன்லைனில் புகார் தெரிவிப்பது எப்படி?
சென்னை: பல முதலீட்டாளர்கள் தரகர்களோடு மிகவும் சிரமப்பட்டிருக்கலாம்; அல்லது லாபத் தொகை கிடைக்காமல் தவித்திருக்கலாம்; அல்லது அவர்களுக்கான பங்கு ஒதுக்கீட்டில் ஏதேனும் குளறுபடிகள் நடந்திருக்கலாம்.

 

தற்போது இது போன்ற பிரச்சனைகளுக்கு, செக்யூரிட்டீஸ் எக்ஸேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள ஸ்கோர்ஸ் (எஸ்இபிஐ கம்ப்ளெய்ன்ட்ஸ் ரிட்ரெஸ்ஸல் சிஸ்டம்) என்ற புகார்கள் சீராக்க முறை மூலம் தீர்வு காணலாம்.

எவ்வகை புகார்களை பதிவு செய்யலாம்?

எஸ்இபிஐ சட்டம், செக்யூரிட்டீஸ் கான்டிராக்ட் ரெகுலேஷன் சட்டம், டெபாஸிட்டரீஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். இவற்றுக்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள், கம்பெனீஸ் ஆக்ட் சட்டத்தின் 55ஏ பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒதுக்கீடு, மீட்பு அல்லது வட்டித் தவணை, அல்லது பங்கு பரிமாற்றம், அல்லது பங்குத் தரகர்களுக்கு எதிராக, அல்லது டெபாஸிட்டரியில் பங்கேற்பவருக்கு எதிராக, என்று இவைகளுள் ஏதாவது ஒன்றைப் பற்றி உங்கள் புகார்கள் இருக்கலாம்.

எவ்வாறு ஆன்லைனில் புகார் செய்யலாம்?

-> ஸ்கோர்ஸ் போர்ட்டலில் புகாரை ஆன்லைனில் பதிவு செய்க

-> "இன்வெஸ்டர் கார்னர்" என்ற பகுதியில்

-> "கம்ப்ளெயின்ட் ரெஜிஸ்ட்ரேஷன்" என்பதை க்ளிக் செய்யவும்

புகார் பதிவு படிவத்தில் சுய தகவல்கள் மற்றும் புகார் பற்றிய தகவல்களை நிரப்ப வேண்டி இருக்கும். இப்படிவத்தில் முதலீட்டாளர் பெயர், தொடர்புக்கான முகவரி, மாநிலம், இ-மெயில் முகவரி போன்ற சில கட்டங்கள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டியனவாய் உள்ளன. இது தவிர, புகாரின் வகை; யார்/எதன் மீது புகார் செய்யப்படுகிறதோ, அவர்/அதன் பெயர்; புகாரின் தன்மை; புகாரைப் பற்றிய சுருக்கமான தகவல்கள் ஆகியவற்றையும் நிரப்ப வேண்டும்.

அளிக்கப்படும் புகாருக்கு ஆதரவான தகவல்களைக் கொண்ட ஒரு பிடிஎஃப் டாகுமெண்ட்டையும், புகாருடன் இணைத்து அனுப்பலாம். வெற்றிகரமாக புகாரை சமர்ப்பித்த பின் சிஸ்டம் தானாக உருவாக்கும், ஒரு தனித்துவமான ரெஜிஸ்ட்ரேஷன் எண் திரையில் வரும். பிற்காலத் தொடர்புக்கு, இதனைக் குறித்து வைத்து கொள்ளுதல் நலம்.

புகார் பெற்றுக் கொண்டமைக்கு புகார் பதிவு எண்ணோடு, ஒரு ஒப்புகை இ-மெயில், புகார் பதிவு படிவத்தில் உள்ள அப்புகார் அளித்தவரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் புகாரின் நிலை பற்றி எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

"இன்வெஸ்டர் கார்னர்" என்ற பகுதியில் "வியூ கம்ப்ளெயின்ட் ஸ்டேட்டஸ்" என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 1: புகார் பதிவு எண்ணைக் கொடுக்கவும்

ஸ்டெப் 2: உங்கள் பாஸ்வேர்டை என்டர் செய்யவும்

அ. வெப் புகாராக இருப்பின், உங்கள் இ-மெயில் முகவரி தான் உங்கள் பாஸ்வேர்ட்

ஆ. நேர்முகமாக புகார் அளித்திருப்பின், செபி உங்களுக்கு அனுப்பியுள்ள ஒப்புகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாஸ்வேர்டை உபயோகிக்கவும்

உங்கள் பதிவு எண், பாஸ்வேர்ட் மற்றும் செக்யூரிட்டி கோட் ஆகியவற்றை சரி பார்த்து, உறுதி செய்து கொண்ட பின், உங்கள் புகாரின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் உங்கள் திரையில் வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How can investors file an online complaint with SEBI? | முதலீட்டாளர்கள் செபியிடம் ஆன்லைனில் புகார் தெரிவிப்பது எப்படி?

Many investors may have had a tough time dealing with brokers or may not have received dividends or there could have been a discrepancy in allotment of shares. Now, you can settle issues through the Securities Exchange Board of India, which has launched a Complaints Redress System known as SCORES (Sebi complaints Redressel system).
Story first published: Wednesday, April 17, 2013, 12:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X