மிதமிஞ்சிய பணத்தை முதலீடு செய்ய 'எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்' ஏன் சிறந்தது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மிதமிஞ்சிய பணத்தை முதலீடு செய்ய 'எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்'
  சென்னை: உங்களிடம் தேவைக்கு மேல் பணம் இருந்தால் அதுவும் அதிக அளவில் இருந்தால், எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டில் குறைவான காலத்திற்கு முதலீடு செய்து நிறைவான பலனைப் பெறலாம்.

   

  (Gold Futures drop again on weak global sentiments)

  உதாரணத்திற்கு உங்கள் புது வீட்டுக்கான தொகையை செலுத்த வேண்டும்; அதற்கு உங்களிடம் ரொக்கப் பணமும் உள்ளது; ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பே இத்தொகையை செலுத்த முடியும் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில் நீங்கள் எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டில் உங்கள் பணத்தை போட்டு வைக்கலாம். இத்திட்டம் முதலீடு மற்றும் சேமிப்பு ஆகிய இரு அம்சங்களையும் கொண்ட நல்லதோர் திட்டமாகும். இதில் முதலீட்டாளருக்கு அதிக லாபம், எளிதில் பணமாக்கக் கூடிய வாய்ப்பு, மற்றும் சீக்கிரமே பணத்தை எடுப்பதற்கு அபராதம் ஏதும் இல்லாமை ஆகிய பல நன்மைகள் கிடைக்கின்றன.

  எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டின் சில அம்சங்களைப் பார்க்கலாம்:

  இது சேமிப்பு மற்றும் ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு உண்டான அத்தனை நற்பயன்களையும் அளிக்கின்றது.

  இத்திட்டம் சேமிப்புக் கணக்கின் அம்சமாகிய எளிதில் பணமாக்கக்கூடிய வசதியையும், ஃபிக்சட் டெபாசிட் கணக்கின் அம்சமாகிய அதிக வட்டி விகிதத்தையும் வழங்கக் கூடியதாக உள்ளது.

  ஃஅன்பிக்சட் டெபாசிட்டுகள், 7 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள்ளான காலம் வரையிலான குறைந்த கால முதலீடுகள் செய்வதற்கு ஏற்றவையாக உள்ளன.

  ஏழு நாட்களுக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் ஏதுமின்றி பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

  குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் எடுத்தால் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள வழக்கமான ஃபிக்சட் டெபாசிட்டுகளுடன் ஒப்பிடுகையில் அன்ஃபிக்சட் டெபாசிட்டின் இந்த அம்சம் மிகவும் பயனளிப்பதாக உள்ளது.

  அன்ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை, தவணை முதிர்வுக்கு முன்பே எடுக்க வேண்டியிருந்தால், அத்தொகை எத்தனை நாட்கள் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டிருந்தது என்று கணக்கிட்டு அதற்குண்டான வட்டித் தொகை வழங்கப்படுகிறது.

  முதலீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி மட்டும் எடுக்கப்பட்டால், மிதமுள்ள வைப்புத் தொகைக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது.

  அன்ஃபிக்சட் டெபாசிட்டின் வட்டி விகிதங்கள் வரி நோக்கத்தைப் பொறுத்தவரை பிக்சட் டெபாசிட்டினுடையதைப் போலவே கருதப்படுகின்றன.

  வட்டி விகிதங்கள்

  வைப்புத் தொகை ரூ. 1 கோடிக்கு மேல் 7 நாட்களுக்கு மேலிருந்து 1 வருடத்திற்குள்ளான காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தால், சுமார் 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது. வைப்புத் தொகை ரூ. 1 கோடிக்கும், ரூ. 15 லட்சத்திற்கும் இடைப்பட்ட தொகையாக இருந்து, 7 நாட்களுக்கு மேலிருந்து 1 வருடத்திற்குள்ளான காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6.50 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது.

  குறைந்த காலத்திற்குள் முதலீட்டை, எளிதாக பணமாக்க விரும்புவோருக்கு இத்திட்டம் மிகப் பொருத்தமான ஒன்றாக விளங்குகிறது. தனி நபர்கள், குழுமங்கள், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டமைப்புகள் ஆகியோர் இத்திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Why SBI Unfixed Deposit is a good option if you have excess money? | மிதமிஞ்சிய பணத்தை முதலீடு செய்ய 'எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்'

  If you have some spare cash, that too in large amounts, you could get good yields from the SBI Unfixed Deposit, where you can park the money for short term. Say as an example you need to make payment for a house and have liquid cash that needs to be paid only after a while, until then you can park the money in the SBI Unfixed Deposit. The Deposit is an investment cum savings plan, where the depositor gets higher return, good liquidity and no penal charges for early withdrawal.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more