என்.ஆர்.ஐக்கள் உள்நாட்டு வர்த்தக மற்றும் டிமேட் கணக்குகளை பராமரிக்கலாமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்.ஆர்.ஐக்கள் உள்நாட்டு வர்த்தக மற்றும் டிமேட் கணக்குகளை பராமரிக்கலாமா?
சென்னை: நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் எனில் உங்களுடைய உள்நாட்டு வர்த்தக மற்றும் டீமேட் கணக்குகள் வழியாக வர்த்தகம் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

 

இத்தகைய கணக்குகளை நீங்கள் மூட வேண்டும் அல்லது அதன் நிலையை மாற்ற வேண்டும். நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் எனில், உள்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் போன்று இன்ட்ரா டே டிரேடிங்கில் ஈடுபட முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரான பிறகு உள்நாட்டில் இருந்தபோது வைத்திருந்த கணக்கை பயன்படுத்துவது சட்டப்படி குற்றாமாகும்.

வேறு நடைமுறைகள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கண்டிப்பாக, ஒரு போர்ட்போலியோ முதலீடு திட்டத்தின் (பிஐஎன்எஸ்) மூலம் தங்களுடைய அனைத்து வகையான வாங்குதல்/ விற்பனை பரிமாற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடலாம். இது மத்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய பிஐஎன்எஸ்' கணக்கை தங்களுக்கு வசதியான வங்கி கிளைகளில் தொடங்க வேண்டும். அந்த வங்கி கிளை, பிஐஎன்எஸ் கணக்கின் மூலம் செய்யப்பட்ட அனைத்து முதலீடுகளையும் பதிவு செய்து பராமரித்து வரும். என்வே, ஒரு வெளிநாடுவாழ் இந்தியர் டீமேட் கணக்கு, வர்த்தக கணக்கு, மற்றும் பிஐஎன்எஸ் கணக்கை தொடங்கி பங்குகளை வாங்கி விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

இன்ட்ரா டே டிரேடிங் அனுமதி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இன்ட்ரா டே வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி இல்லை. அதாவது, நீங்கள் இந்தியாவில் வசிப்பவர் போன்று போன்று ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்க முடியாது. நீங்கள் பங்குகளை வாங்கிய நாளிலிருந்து நான்காவது நாள் மட்டுமே அவற்றை விற்க முடியும்.

நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?

இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எப்இஎம்ஏ) படி, ஒரு இந்திய குடிமகன், அல்லது இந்தியாவை பூர்விகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில், வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடு வாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார். ஒரு தனி நபர் முந்தைய நிதி ஆண்டில், இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருத முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can NRIs maintain a domestic trading and demat account? | என்.ஆர்.ஐக்கள் உள்நாட்டு வர்த்தக மற்றும் டிமேட் கணக்குகளை பராமரிக்கலாமா?

If you have lost your resident status, which means if you have now become a non resident Indian, and have had a domestic trading and demat account, you are not entitled to trade and take delivery of shares from that account. This means that you may have to close the account or change the status. Remember, that as an NRI you cannot trade in shares on an intra day basis, like domestic residents. Continuing to use the account as resident individual, after becoming an NRI is not legal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?