
வீட்டுக் கடன் வாங்கும் போது, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால், நீங்கள் அதை மறுக்க முழு உரிமை உங்களுக்கு உண்டு.
அதோடு நீங்கள் வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்கப் போவதில்லை என்று எழுத்துப் பூர்வமாக நீங்கள் தெரிவித்து விடலாம்.
எப்போதுமே ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நன்மைகள் உண்டு
வீட்டுக் கடன் வாங்கும் போது நீங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் எடுத்தால் அதற்கு எப்போதுமே பலன் உண்டு. அதாவது நீங்கள் வீட்டுக் கடன் வாங்கிய பின்பு, உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழந்தால், நீங்கள் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் மூலம் உங்கள் குடும்பத்தார், நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்.
வீட்டுக் கடன் வழங்கும் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கு பாதுகாப்பு மற்றும் உத்திரவாதத்தை எதிர்பார்க்கின்றன. வீட்டுக் கடனுக்கான பாதுகாப்பு மற்றும் உத்திரவாதத்தை உங்கள் வீடு வழங்கிவிடுகிறது. நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கு புதிய பாதுகாப்போ அல்லது உத்திரவாதமோ தேவைப்படுவதில்லை.
ஒருவேளை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க விரும்பினால், அது வாங்கும் வீட்டு கடன் தொகையைப் பொருத்து அமையும். எனினும் ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள் நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனை மட்டும் கவர் செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன.
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் சேர்த்து கவர் செய்யும் திட்டத்தை வாங்குவது சிறந்ததாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications