எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் என்றால் என்ன?
சென்னை: எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (இசிஎஸ்) என்றால் வங்கி நடவடிக்கைகளின் போது எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகமான அளவில் இருக்கும் கட்டணங்களை மிக எளிதாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் அதிகமான கட்டணங்களை மிக எளிதாக வசூலிக்கவும் வங்கிகள் பயன்படுத்தும் புதிய நவீன தொழில்நுட்ப வசதியாகும்.

குறிப்பாக அதிகமான தொகையில் இருக்கும் டிவிடெண்ட், வட்டிகள், சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை போன்றவற்றை மிக எளிதாக தனது வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கவும், அதே நேரத்தில் அதிக தொகையில் இருக்கும் டெலிபோன் கட்டணங்கள், மின் கட்டணங்கள், தண்ணீர் கட்டணங்கள், செஸ் அல்லது வரி வசூல், லோன் கட்டண வசூல், பரஸ்பர நிதியில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் இன்சூரன்ஸ் பிரிமீயம் தொகை போன்றவற்றை தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்வதற்கு இந்த எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் என்ற வசதியை வங்கிகள் பயன்படுத்துகின்றன.

இதில் இசிஎஸ் கிரெடிட் மற்றும் இசிஎஸ் டெபிட் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன.

இசிஎஸ் கிரெடிட்

தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் மற்றும் தங்கள் முதலீட்டாளர்களுக்கு பணத்தைச் செலுத்தவும் இசிஎஸ் கிரெடிட் என்ற வசதியை வங்கிகள் பயன்படுத்துகின்றன.

மேலும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டிவிடெண்ட் தொகை, வட்டித் தொகை, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பெரிய தொகைகளை உரிய நேரத்தில் வழங்க இந்த எசிஎஸ் கிரெடிட் வசதியை பயன்படுத்துகின்றன.

இசிஎஸ் டெபிட்

இசிஎஸ் டெபிட் என்பது வாடிக்கையாளர்களிடமிருந்து மிகப் பெரிய அளவில் கட்டணங்களை வசூலிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு புதிய முறையாகும். குறிப்பாக யூட்டிலிட்டி சர்வீசஸ், கடனாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்பவர்கள் போன்றோர் செலுத்தும் பெரிய அளவிலான தொகைகளை இசிஎஸ் டெபிட் மூலம் வங்கிகள் வசூல் செய்கின்றன.

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து இசிஎஸ் டெபிட் மூலம் தொலைபேசி, மின்சாரம், மற்றும் தண்ணீர் கட்டணங்கள், செஸ் அல்லது வரி, கடன் தவணை மற்றும் பரஸ்பர நிதிக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் இன்சூரன்ஸ் பிரீமீயத் தொகை ஆகியவற்றை வங்கிகள் வசூல் செய்கின்றன.

இசிஎஸ் மூலம் இந்தியாவில் உள்ள என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ வங்கிக் கணக்குகளுக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும். எனினும் இவற்றை ஃபாரின் எக்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட் 2000 (எஃப்இஎம்எ) மற்றும் வயர் ட்ரான்ஸ்பர் கைட்லைன்ஸ் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படியே செய்ய முடியும்.

இசிஎஸ் வசதியைப் பயன்படுத்தும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்த அவர்களுக்கு உரிய நேரத்தில் நினைவூட்டல் செய்ய வேண்டும்.

இசிஎஸ் வசதியைப் பயன்படுத்த கட்டணங்கள்

இசிஎஸ் வசதியைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களை நிர்ணயம் செய்ய வங்கிகளின் முடிவுக்கு ரிசர்வ் வங்கி விட்டுவிட்டது. எனவே வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த இசிஎஸ் வசதி மூலம் சேவை செய்தால் அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடிமிருந்து பெற உரிமை உண்டு. ஆனால் எவ்வளவு கட்டணத்தைப் பெறப் போகிறோம் என்பதை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Electronic Clearing Service? | எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் என்றால் என்ன?

The Electronic Clearing Service (ECS) is an electronic mode of payment for transactions that can be used for making bulk payments or receipts. This facility is used by by institutions for making bulk payment of amounts towards distribution of dividend, interest, salary, pension, etc., or for bulk collection of amounts towards telephone / electricity /water dues, cess / tax collections, loan installment repayments, periodic investments in mutual funds, insurance premium etc. Essentially, ECS facilitates bulk transfer of monies from one bank account to many bank accounts or vice versa.
Story first published: Tuesday, May 7, 2013, 17:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X