கார் இன்ஷூரன்ஸை பாதிக்கும் 5 காரணிகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார் இன்சூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமானது மற்றும் தேவையானதும் கூட. மேலும் இன்ஷூரன்ஸ் மதிப்பை பாதிக்கும் காரணிகளையும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் நாம் முதலீடு செய்த பணத்திற்கு அதிகபட்ச கவரேஜை பெற முடியும். கார் இன்ஷூரன்ஸ் மதிப்பை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. அதில் சிலவற்றை நம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பல காரணிகள் நம் கையை மிறி செயல்படக் கூடியது. அத்தகைய காரணிகளை பற்றி தெரிந்துக்கொள்ள, தொடர்ந்து படிக்கவும்

கார் இன்ஷூரன்ஸ் மதிப்பை பாதிக்கும் முக்கியமான காரணிகளை பற்றி இப்போது பார்க்கலாம்

வயது மற்றும் பாலினம்

வயது மற்றும் பாலினம்

வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து கார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வேறுபாடு காட்டுகின்றன. 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு காரணம் ஆய்வுகளின் படி பெண்களை விட இள வயது ஆண்கள் தான் அதிக விபத்துக்குள்ளாகின்றனர். அனுபவம் மிக்க ஓட்டுனர்கள் குறைவாக கட்டினால் போதும். திருமண தகுதி நிலையை பொருத்தும் மாற்றம் இருக்கும்.

வண்டி ஓட்டிய வரலாறு

வண்டி ஓட்டிய வரலாறு

வண்டி ஓட்டிய வரலாற்றை பொருத்தும் கார் இன்ஷூரன்ஸ் மதிப்பு மாறுபடும். நீங்கள் அதிக விபத்துகளை ஏற்படுத்தி இருக்கிறீர்களா, சாலை விதிகளை மீறி உள்ளீர்களா? அல்லது குடி போதையில் வண்டி ஓட்டியதற்கு சான்றுகள் உள்ளதா? அப்படியானால் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அதிக ப்ரீமியம் கட்டச் செய்து விடும். இன்ஷூரன்ஸ் கொடுப்பதில் இடர்பாடு இருப்பதாலேயே அதிக ப்ரீமியம் வசூலிக்கப்படும்.

கார்

கார்

காரை உபயோகித்த காலம், தயாரித்த வருடம், மற்றும் பாதுகாப்பு தரம் ஆகியவைகளும் இன்ஷூரன்ஸ் பணம் தீர்மானிக்கப்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கிய பாதுகாப்பு அம்சங்களான ஏர்-பேக், ஆண்டி-பிரேக்கிங் சிஸ்டம், ட்ராக்ஷன் கண்ட்ரோல், சீட் பெல்ட் போன்றவைகள் உங்கள் காரில் இருந்தால் ப்ரீமியம் அளவு குறையும். பெரிய காரில் சின்ன காரை விட பாதுக்காப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.

அதே போல் பழைய காரை விட புதிய கார் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. புகழ் பெற்ற கார்களில் முதல் பத்து வகைகளில் உங்கள் கார் இருந்தால் அது திருடு போக அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் அதற்கு ப்ரீமியம் அதிகமாக வசூலிக்கப்படும். இதனை குறைக்க காரில் அலாரம் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்களை பொறுத்த வேண்டும்.

 

காரின் பயன்பாடு

காரின் பயன்பாடு

காரை அதிகமாக பயன்படுத்துவதை பொருத்தும் இன்ஷூரன்ஸ் பணம் மாறுபடும். வண்டியை பொது வாகனமாக பயன்படுத்தினால் அது ப்ரீமியம் அளவை குறைக்கும். அனால் அதற்கு உண்டான ஆவணத்தையும், வண்டியையும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறப்பு தள்ளுபடிகள்

சிறப்பு தள்ளுபடிகள்

இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்மையான வாடிக்கையாளரா? பணியில் இருந்து ஓய்வு பெற்றவரா? அதே நிறுவனத்திடம் இருந்து பல இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளீர்களா? அப்படியானால் உங்களுக்கு உண்டான சிறப்பு சலுகை அல்லது தள்ளுபடிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டு வாங்குங்கள். ஒரு வருடத்திருக்கு இன்ஷூரன்ஸ் பணத்தை திரும்பி கோரவில்லை என்றால், கோரப்படாத பணத்திற்கு போனஸ் வழங்கப்படும். மேலும் அந்த இன்ஷூரன்ஸ் பணத்தை வேறு காருக்கு மாற்றவும் செய்யலாம். அதனால் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் தள்ளுபடி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதில் பல ஆதாயங்கள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 factors that affect car insurance rates

Buying a car and buying car insurance go hand in hand. Car insurance is extremely necessary and vital and you must be aware of all the factors that affect car insurance rates so as to get maximum coverage for the amount that you invest.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X