அதிக லாபம் தரும் பங்குகள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையில் அமெரிக்க குவாண்டிடேடிவ் ஈசிங் பிரச்சனையால் கடந்த சில நட்களாக வர்த்தக நிலை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எனவே இங்கு நீண்ட கால நோக்கத்தில் உங்களுடைய பணத்திற்கான உண்மையான மதிப்பை வழங்கும் பங்குகளுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளோம். இந்த பங்குகள் இந்தியாவில் உள்ள பங்குத் தரகர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் நன்மதிப்பை பெற்று அவர்களால் பரிந்துரைக்கப்பட்டவை ஆகும்.

 

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி

தரகு மற்றும் முதலீட்டு நிறுவனமான ஆனந்த் ரதி, ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் பங்குகளை வாங்குமாறு பரிந்துரைத்துள்ளது. ஐஎன்ஜி வைஸ்யா வங்கி தற்பொழுது பங்கு உட்செலுத்துதல் நடைமுறையில் ஈடுபட்டுள்ளதால் அதன் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனந்த் ரதி நிறுவனம், "இந்த வங்கி என்பிஎ (NPA) வகுப்புகளில் சிறந்தது மற்றும் அது தரமான சொத்து மதிப்புகளை கொண்டிருக்கிறது", எனத் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் பெட்ரோனெட்

குஜராத் மாநிலம் பெட்ரோனெட்

எம்கே, குஜராத் மாநில பெட்ரோனெட்டின் பங்குகளை வாங்குமாறு பரிந்துரைத்துள்ளது. "நாங்கள் இந்த பங்கிற்கான இலக்கு விலையாக ரூ 78 ஐ நிர்ணயித்துள்ளோம். இந்த பங்கின் விலை ரூ 70 ல் இருந்து 58 ஆக சரிந்துள்ள போதும், இந்த நிறுவனத்தின் குறைந்த பட்ச விலை என்பது தற்பொழுது உள்ள நிலையிலேயே தொடர்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் மதிப்பீடு, அந்த நிறுவனத்தின் பங்குளை தற்பொழுது உள்ள நிலையில் இருந்து கீழே விழுந்து விடாமல் பாதுகாத்து வருகிறது. தற்பொழுது நிழவும் சந்தை விலையான ரூ 56 என்பது FY15E ஆண்டிற்கான இபிஎஸ்ஸைப் போன்று 7.4 மடங்காகும். மேலும் இந்த விலை P/BVஐ போன்று 0.9 மடங்காகும்", என இந்த நிறுவனம் கூறியுள்ளது.

டெவலப்மெண்ட் கிரெடிட் வங்கி
 

டெவலப்மெண்ட் கிரெடிட் வங்கி

கார்வி தரகு நிறுவனம் டெவலப்மெண்ட் கிரெடிட் வங்கியின் அதிகரித்து வரும் சொத்து மதிப்புகளை காரணமாக காட்டி இந்த வங்கியின் பங்குகளை வாங்குமாறு பரிந்துரைத்துள்ளது. "சொத்து தர அளவு DCBயின் ஒரு முக்கிய ஊக்கியாக இருக்கிறது. மேலும் இந்த வங்கியின் சொத்து தர அளவு கடந்த FY11-13 ஆண்டுகளில் சராசரியாக 1.3 சதவீத அளவிற்கு சரிந்துள்ளது. இந்த வங்கிக்கு போதுமான அளவிற்கு முதலீடு உள்ளதால் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு மூலதனத்தை திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதனுடைய இலக்கு விலையாக ரூ 70 ஐ நிர்ணயித்துள்ளோம்.மேலும் இந்த மதிப்பானது FY15 ஆண்டிற்கான P/ABV விகிதத்தை போன்று 1.4 மடங்காகும்", என கார்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிகாம்  எலக்ட்ரானிக்

ஜிகாம் எலக்ட்ரானிக்

பர்ஸ்ட் கால் நிறுவனம், ஸிகாம் எலக்ட்ரானிக் நிறுவன பங்குகளின் மீது நேர்மறையான எண்ணத்துடன் அந்த நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளது. "இந்த நிறுவனத்தின் உபரி சூழ்நிலை அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் என கருதுகின்றோம், மேலும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அடுத்து வரும் காலாண்டுளிலும் தொடரும் என எதிர்பார்க்கின்றோம். ஆகவே நாங்கள் நீண்ட கால முதலீடு நோக்கத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ 72 என்கிற இலக்கு விலைக்கு வாங்குமாறு பரிந்துரைக்கின்றோம்." என பர்ஸ்ட்கால் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

ஜிஐசி ஹவுசிங்

ஜிஐசி ஹவுசிங்

நிர்மல் பேங்கின் பார்வையில் ஜிஐசி ஹவுசிங் நேர்மறையாக வளர்ந்து வருகிறது. "எங்களுடைய பார்வையில் இந்த பங்கின் மதிப்பில் ஏற்பட்டுள்ள திருத்தம் அதை வாங்குவதற்கான சந்தர்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் சுமார் 4.5 சதவீத ஈவுத்தொகை வழங்கியுள்ளது. வட்டி விகிதங்கள் குறைந்து வரும் இந்தத் தருணத்தில் ஜிஐசி ஹவுசிங்கின் வீட்டுக் கடனுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன" என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விஎஸ்டி டில்லர்ஸ்

விஎஸ்டி டில்லர்ஸ்

சுஷில் நிதி நிறுவனம், விஎஸ்டி டில்லர்ஸின் பங்குகளை வாங்குமாறு பரிந்துரை செய்துள்ளது. "தற்பொழுது உள்ள சந்தை விலையில் விஎஸ்டி டில்லர்ஸின் பங்குகள் Rs.360 என்கிற கவர்ச்சிகரமான விலையில் வர்த்தகமாகின்றன. இந்த விலை கடந்த நிதியாண்டுகளான FY14E & FY15E ன் இபிஎஸ் அளவான ரூ 62.4 மற்றும் ரூ 72.5 ன் மதிப்பை விட 5.8 மற்றும் 5.0 மடங்காகும். நாங்கள் விஎஸ்டி டில்லர்ஸின் பங்குகளுக்கான இலக்கு விலையாக ரூ 435ஐ நிர்ணயித்துள்ளோம்", என சுஷில் நிதி நிறுவன ஆய்வு அறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 super stocks that brokerage houses are betting on

Indian markets have been volatile over the last few trading sessions on concerns over quantitative easing in the US. Here are a few stocks recommended by broking houses and investment firms that could offer you value in the long term.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X