சென்னை: கோத்ரெஜ் குழுமத்தின் சேர்மனாகிய திரு ஆதி கோத்ரெஜ் அவர் மலிவு விலை வீட்டு வசதித் துறைக்கு அதிகப்படியான உந்துதல் தேவைப்படுவதனால் இத்துறைக்கு ஊக்கத் தொகை வழங்கும்படி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளர்.
யங் இண்டியன்ஸ்-இன் தெற்கு பிராந்திய உச்சிமாநாடான ‘வீ பில்ட் இந்தியா'வின் நிறைவுக்கூட்டத்தில் பேசிய ஆதி கோத்ரெஜ், "இந்தியா நிலப்பற்றாக்குறை கொண்ட நாடு, அதனால் அபரிமிதமான முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் மலிவு விலை வீட்டு வசதி திட்டம் ‘கூடுதல் சிறப்பு' என கூறினார்.
கடந்த இரண்டு வருடங்களாக வளர்ச்சி விகிதம் மந்தமாக இருப்பதினால் வேலைவாய்ப்பு பெரும் சவாலாக இருந்து வருவதாகக் கூறிய அவர், இது மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பணவீக்கம், அரசு வருமான பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவைற்றை இதர பொருளாதார சவால்களாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் பிடிஐ தகவலறிக்கை கூறுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் செயல்திறன் மற்றும் பயிற்சி ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே அளவு நேர்மையான தலைமையும், சிறந்த நிர்வாகமும் முக்கியமானவை என்றும் திரு கோத்ரெஜ் கூறினார்.
மேலும் வர்த்தக பூசல்களை தீர்த்து வைப்பதற்கு ஒரு தேசிய நடவடிக்கை செயல்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் உலகிலேயே இந்தியாவில் தான் வர்த்தக பூசல்களை சரி செய்வது மிகவும் குறைந்த விகிதத்தில் உள்ளது என தெரிவித்தார்.
நீதித்துறை ஊழலற்றதாகவும், நம்பகமானதாகவும் மாற்றப்பட்டு, நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்து அவர்கள் கை ஓங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications