இந்தியாவில் பிரபலம் ஆகாத கரன்சி மார்கெட்!! ஏன் இந்த நிலை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் பங்கு சந்தையில் பணம் மற்றும் தொகுது முதலீட்டில் அதிகளவில் ஈடுபடும் மக்கள், பண வர்த்தக சந்தை என அழைக்கப்படும் Currency Trading Market-இல் ஈடுபடுவதில்லை. இதற்கான காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கான முக்கிய காரணமாக நிதி நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

 

இந்தியாவின் பங்குச் சந்தையைப் போன்ற வளர்ச்சியைப் பெற இந்த சந்தை இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், கரன்சி சந்தைகளில் வர்த்தகம் செய்வதன் மூலமாக, உங்களுக்கு பங்குச் சந்தைகளிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

எப்படி வேலை செய்கிறது?

எப்படி வேலை செய்கிறது?

பங்குச் சந்தைகளுக்கு கணக்கைத் துவக்குவது போலவே, பண வர்த்தக கணக்கு ஒன்றை புரோக்கர் மூலமாக நீங்கள் முதலில் துவங்க வேண்டும். பெரும்பாலான புரோக்கர்கள் தேசிய பங்குச் சந்தை அல்லது மும்பை பங்குச்சந்தையில் உறுப்பினர்களாக இருப்பார்கள் மற்றும் பண வர்த்தக கணக்குகளை துவக்கித் தரவும் செய்வார்கள்.

நாணய வர்த்தகம்

நாணய வர்த்தகம்

உங்களுக்கான பண வர்த்தக கணக்கு தொடங்கப்பட்டவுடன். நீங்கள் வர்த்தகம் செய்யத் துவங்கலாம். இந்த வர்த்தகத்தில் அமெரிக்க டாலர், பிரிட்டனின் பவுண்ட், யூரோ அல்லது ஜப்பானிய யென் ஆகியவற்றை நீங்கள் வாங்கவும், விற்கவும் செய்யலாம்.

12 மாத ஒப்பந்தம்
 

12 மாத ஒப்பந்தம்

பங்குச் சந்தையில் உள்ள பங்குப் பிரிவுகளில் பங்குகளுக்கான ஒப்பந்தங்கள் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன. பண வர்த்தகத்திற்கான ஒப்பந்தங்கள் 12 மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் ஒரு பெரும் தொகையுள்ள டாலர் ஒப்பந்தத்தை வாங்கினால், அதனை 12 மாதங்களுக்குப் பிறகு தீர்க்கலாம். எனவே, ஏப்ரல் 2014-ல் டாலர் ஒப்பந்தத்தை வாங்கியிருந்தால், அதனை மார்ச் 2015-ல் தீர்க்க முடியும்.

1 = 1000 யூனிட்

1 = 1000 யூனிட்

ஒவ்வொரு ஒப்பந்தத்திற்குமான குறைந்த பட்ச லாட் அளவு 1. ஒரு 'லாட்' அளவில் மொத்தம் 1000 யூனிட்கள் இருக்கும்.

3000 ரூபாய் இருந்தாவ் போதும்

3000 ரூபாய் இருந்தாவ் போதும்

நீங்கள் ஒரு லாட் உள்ள 1000 யூனிட்களை வாங்க ரூ.3000/- தேவை. எனவே, உங்களிடம் ரூ.3000/- இருந்தால், உங்களால் 1000 யூனிட்களை வாங்க முடியும்.

லாபம்

லாபம்

ஏப்ரல் 23-ல் ரூ.60/- என்ற மதிப்பில் 1000 யூனிட்களை நீங்கள் வாங்கினால், ஏப்ரல் 28-ல் ரூ.60.10/- என்ற மதிப்பில் வர்த்தகத்தை முடித்து, ரூ.100/-ஐ இலாபமாகப் பெற முடியும். அதேபோல, நீங்கள் 10000 யூனிட்களை வாங்கி, ரூ.60.10/- என்ற அளவில் விற்கும் போது, உங்களால் ரூ.100/-ஐ இலாபமாகப் பெற முடியும்.

நஷ்டம்

நஷ்டம்

அதேபோல, 1000 யூனிட்களை ரூ.60/- என்ற மதிப்பில் வாங்கி, ரூ.59.90/- என்ற மதிப்பில் விற்கும் போது, ரூ.100/-ஐ நட்டமாக அடைவீர்கள்.

சந்தை நாட்கள்

சந்தை நாட்கள்

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பண வர்த்தக சந்தைகள் நடைபெறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to trade in the currency markets in India?

While trading in equities in the cash and the derivatives segment is popular in India, trading in the currency derivatives market is not so.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X