பன்னாட்டு சந்தையில் முதலீடு செய்ய ஆசையா?? இதை படிங்க...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய சந்தையில் முதலீடு செய்து போர் அடித்துவிட்டதா?? கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் வெளிநாட்டு சந்தைகளிலும் நீங்கள் முதலீடு செய்யலாம், அதற்கு லாபமும் அதிகம்.

 

ஒருவர் வெளிநாட்டில் முதலீடு செய்ய விரும்பினால், நாம் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியது சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யில் (SEBI)பதிவு முதலீட்டு திட்டங்கள் தான். செபி-யில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமாக வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். இடர்பாட்டு அடிப்படையை பொறுத்து முதலீடு செய்ய பல்வேறு முதலீட்டு தேர்வுகள் உள்ளன.

SEBI-யில் பந்திந்துள்ள இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள், 7மில்லியன் அமெரிக்க டாலர் வரம்பிற்குள் முதலீடு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். இதன் படி கீழ்கண்ட திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம்.

பன்னாட்டு சந்தையில் முதலீடு செய்ய ஆசையா?? இதை படிங்க...

1) இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ADR-க்கள் (அமெரிக்கன் டெபாசிட்டரி ரிசீப்ட்) / GDR-க்கள் (குளோபல் டெபாசிட்டரி ரிசீப்ட்)

2) அங்கீகாரம் பெற்றுள்ள வெளிநாட்டு பங்குச்சந்தைகளில், பட்டியலிடப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகள் (ஈக்விட்டி). ஆரம்ப நிலையில் முதலீடு செய்யவும், அங்கீகாரம் பெற்றுள்ள வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட, பொது வெளியீட்டை பின்பற்றவும் தேர்வுகள் உள்ளது.

3) வெளிநாட்டு கடன் பங்குகள் - முதலீட்டு தரத்திற்கு குறைவில்லாத மதிப்பீட்டை கொண்ட குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

4) முதலீட்டு தரத்திற்கு குறைவில்லாத பணச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

பன்னாட்டு சந்தையில் முதலீடு செய்ய ஆசையா?? இதை படிங்க...

5) அதேபோல் பிற நாட்டு அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம், அரசு பத்திர முதலீடு என்பதால் நமது முதலீட்டிற்கு அதிகப்படியான பாதுகாப்பு கிடைக்கும்.

6) அங்கீகாரம் பெற்றுள்ள வெளிநாட்டு பங்குச்சந்தைகளில், ஹெட்ஜிங் (இழப்புக்காப்பு வணிகம்) மற்றும் போர்ட்ஃபோலியோ பேலன்சிங்காக மட்டும் வணிகத்தில் ஈடுபடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

7) வெளிநாட்டு வங்கிகள் அளிக்கும் குறைந்த கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

 
பன்னாட்டு சந்தையில் முதலீடு செய்ய ஆசையா?? இதை படிங்க...

8) வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்களிடம் பதிந்துள்ள வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது யூனிட் ட்ரஸ்ட்கள் வெளியிட்டுள்ள யூனிட்கள் / பங்குகளில் முதலீடு செய்யலாம்.

வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்கள் முக்கியமாக இரண்டு இடர்பாடுகளை கொண்டிருக்கும்; ஒன்று செலாவணி மற்றொன்று சந்தை இடர்பாடு. நாடு மற்றும் அரசியல் காரணிகளால் கூட இந்த மியூச்சுவல் ஃபண்ட் மீது பாதிப்பு உண்டாக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the Investment Avenues for Indians in International Mutual Funds?

If one is planning to invest abroad, one can do it by investing through mutual funds which are registered under SEBI. There are various investment options where you can invest depending on the risk criteria.
Story first published: Monday, January 12, 2015, 11:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X