நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் - இதெல்லாம் என்ன?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சர்வதேச சந்தையில் முதலீடுகளை செய்யத் துவங்கும் நிலையில் இருப்பவர்களும் மற்றும் அவற்றில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள் NASDAQ மற்றும் டவ் ஜோன்ஸ் ஆகிய வார்த்தைகளால் குழம்பியிருப்பார்கள்.

வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த முக்கியமான குறியீடுகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அமெரிக்க நிதிச்சந்தையில் உள்ள சில முதன்மையான பங்குகளின் மதிப்புகளை கவனித்து, ஒட்டுமொத்த சந்தையின் நிலையை குறிப்பிட்டு சொல்லும் வேலையை தான் இந்த இரண்டு குறியீடுகளும் செய்து வருகின்றன. எனினும், ஒரே நிறுவனத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட குறியீடுகளிலும் பட்டியலிட முடியும்.

இதோ NASDAQ மற்றும் டவ் ஜோன்ஸ்-க்கு இடையிலான சில அடிப்படை வேறுபாடுகளை இங்கு பார்போம்.

 

டவ் ஜோன்ஸ் தொழில் சராசரி (Dow Jones Industrial Average - DJIA)

இது உலகிலேயே மிகவும் பழமையான மற்றும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பங்குச் சந்தை குறியீடுகளில் ஒன்றாகும். 1896-ம் ஆண்டில் முதன்மையான 12 நிறுவனங்களின் பெயருடன் இந்த குறியீட்டைத் தொடங்கிய சார்லஸ் டவ் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. டவ் ஜோன்ஸ் நிறுவனம் அமெரிக்க சந்தையில் தத்தம் துறைகளில் முக்கியமானவர்களாக கருதும் 30 நிறுவனங்களை கவனித்து வருகிறது.

நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் - இதெல்லாம் என்ன?

நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து வரும் நிறுவனங்களைக் கொண்டு டவ் ஜோன்ஸ் தொழில் சராசரி குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. டவ் ஜோன்ஸ் இருக்கும் நிலையை வைத்து நிதிச்சந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும். அதாவது டவ் ஜோன்ஸ் பிற சந்தை குறியீடுகளுக்கான டிரெண்ட்-ஐ அமைத்து தருகிறது. டவ் ஜோன்ஸ் குறியீடு அதிகமாக இருந்தால், சந்தை ஏற்றமாக உள்ளது என்று பொதுவாக கருதப்படும்.

சந்தையில் முதன்மையாக உள்ள 30 நிறுவனங்களின் விலைகளை கூட்டி, டவ் டிவைஸர் என்று அழைக்கப்படும் எண்ணினால் வகுத்து வரும் எண் தான் டவ் குறியீடாக கணக்கிடப்படுகிறது. இதில் டவ் டிவைஸர் (Dow Divisor) என்பது பங்குகளின் விலையை தளமாகக் (Share Price weighting method) கொண்டதாகும்.

நாஸ்டாக் -NASDAQ

NASDAQ என்பது நேஷனல் அசோசியேஷன் ஆஃப் செய்யூரிட்டீஸ் டீலர்ஸ் ஆட்டோமேட்டட் கொட்டேஷன் சிஸ்டம்ஸ் (National Association of Securities Dealers Automated Quotations System) என்பதன் சுருக்கமாகும். இதுதான் உலகின் முதல் கம்ப்யூட்டர்மயமான பங்கு வர்த்தக நிறுவனமாகும். டவ் ஜோன்ஸை விட பரவலான அளவில் தகவல்களை கொண்டிருப்பதால், பல்வேறு முதலீட்டாளர்களும் மற்றும் தொழில்முறை வல்லுநர்களும் இந்த குறியீடைப் பின்பற்றி வருகிறார்கள்.

நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் - இதெல்லாம் என்ன?

 

'NASDAQ Composite', என்று அடைக்கப்படும் நாஸ்டாக்-ஆனது நாஸ்டாக்-ல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை கவனித்து வரும். சந்தைகளில் மூலதனங்களை அடிப்படையாக வைக்கும் முறையில் (Weighted Market Capitalization Method) நாஸ்டாக் கணக்கிடப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்களே இந்த குறியீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் ஆப்பிள் மற்றும் கூகிள் போன்றவை அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the Difference Between NASDAQ and Dow Jones?

Investor beginners or people who are planning to invest in international stock markets often get confused or are not sure of the terms NASDAQ and Dow Jones. Individuals who are looking forward investing abroad must understand these important indices.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more