புதிய சுகாதார காப்பீட்டு விதிகளின் கீழ் வரும் 6 முக்கியமான மாற்றங்கள் தெரியுமா உங்களுக்கு..?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சட்டம் மற்றும் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டே எந்த ஒரு துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் உள்ளது. அந்தத் துறையை ஒழுங்கு படுத்தும் பொறுப்பு, அந்த துறையை நிர்வகிக்கும் ஆணையத்தைச் சார்ந்தது.

 

சமீபத்தில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) புதிய சுகாதார காப்பீடு விதிகளை அறிமுகப்படுத்தியது. 2016 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய விதிகளுக்கும், 2013 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பழைய விதிகளுக்கும் இடையே மிக முக்கியமான ஆறு மாற்றங்கள் உள்ளன.

ஆறு மாற்றங்கள்

ஆறு மாற்றங்கள்

* கோம்பி திட்டங்கள், எந்த ஒரு வாழ்க்கை (இதற்கு முன்னால் டெர்ம் பிளான் மட்டும் ) மற்றும் சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
* பயன் திட்டங்களில் அடுக்கடுக்கான போனஸ்க்கு அனுமதி.
* ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள்.
* காப்பீட்டு நிறுவனங்கள் பைலட் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
* தரநிலை அறிவிப்புக்கள் எந்த ஒரு வடிவத்திலும் இருக்கலாம். மேலும் காப்பீடு நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான காப்பீடு திட்டத்தை அவர்களே சுதந்திரமாக வடிவமைக்கலாம்.
* ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டுறுதி சார்ந்த திட்டங்களை வழங்குவதற்கு அனுமதி இல்லை.

கோம்பி திட்டங்கள்

கோம்பி திட்டங்கள்

கோம்பி திட்டங்கள் எந்த ஒரு லைஃப் (இதற்கு முன்னால் டெர்ம் பிளான் மட்டும்), மற்றும் சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும்

டிசம்பர் 2009-ல், IRDAI கோம்பி திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத (அல்லது ஒரு முழுமையான சுகாதார காப்பீடு) திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் இது போன்ற காப்பீடு திட்டங்களை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

 

புதிய கோம்பி திட்டம்
 

புதிய கோம்பி திட்டம்

மிகச் சமீபத்தில் இந்தியா பஸ்ட் நிறுவனம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய கோம்பி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களின் கலவையாகும். இது ஒரு டெர்ம் மற்றும் சுகாதார திட்டத்தின் தூய கலவையாகும். தற்பொழுது முதல், ஒரு கோம்பி திட்டம் எந்த ஒரு வாழ்க்கை (எந்டோவ்மெண்ட் , மணி பேக் அல்லது யூலிப்) மற்றும் சுகாதார திட்டத்தின் கலவையாக இருக்கலாம்.

 

இரண்டு வெவ்வேறு பாலிசி திட்டங்களின் நன்மைகள்

இரண்டு வெவ்வேறு பாலிசி திட்டங்களின் நன்மைகள்

"இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இரண்டு வெவ்வேறு பாலிசி திட்டங்களின் நன்மைகளை ஒற்றை பாலிசியின் மூலம் எளிதாகப் பெற முடியும், மற்றும் காப்பீடு முகவர்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழு தொகுப்பை வழங்கிய திருப்தியை இதன் மூலம் பெறுகிறார்", என விசாகா ஆர் எம், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியா பஸ்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கூறுகிறார்.

அடுக்கடுக்கான போனஸ்

அடுக்கடுக்கான போனஸ்

பயன் திட்டங்களில் அடுக்கடுக்கான போனஸ்க்கு அனுமதி
தற்போதைய நடைமுறையில், வரையறுக்கப்பட்ட நன்மைகள் தரும் திட்டங்களில், மிக முக்கியமாக முக்கியமான நோய் திட்டங்களில், அடுக்கடுக்கான போனஸ் வழங்குவதற்கான விதிகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

ஆனால் தற்பொழுது வெளியிடப்பட்ட புதிய விதிகளின் படி, அடுக்கடுக்கான போனஸ் கண்டிப்பாக வழங்கப்படும் என்று ஏடு மற்றும் கொள்கை ஆவணத்தில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

 

அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை

அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை

அடுக்கடுக்கான போனஸ் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காப்பீடு தொகையை அதிகரிக்கிறது, மற்றும் எதிர்காலத்தில் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சையை எதிர் கொள்ள உதவுகிறது. அடுக்கடுக்கான போனஸ் வழங்கும் முக்கியமான நோய் திட்டங்களின் பிரீமியம் அதற்கேற்றாற்போல் அதிகரிக்கப்படுமா? என்கிற கேள்வி நம் முன்னாள் எழுகின்றது.

இதற்கு ஆஷிஷ் மெஹொரொ, எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மேக்ஸ் புபா சுகாதார காப்பீடு நிறுவனம், "இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் தங்களின் காப்பீடு தொகையை வரும் ஆண்டுகளில் அதிகரிக்க உதவும். மற்றும் காப்பீடு தொகையுடன் ஒப்பிடும் பொழுது அதற்கான கூடுதல் பிரீமியம் மிகவும் குறைவாக அல்லது முக்கியமற்றதாக இருக்கும்", என தெரிவிக்கின்றார்.

 

காப்பீடு தொகை குறிப்பிட்ட சதவீதம் அதிகரிக்கும்

காப்பீடு தொகை குறிப்பிட்ட சதவீதம் அதிகரிக்கும்

எனினும், எதாவொரு குறிப்பிட்ட ஆண்டில் காப்பீட்டாளர் க்ளெய்ம் செய்திருந்தால் , ஒட்டுமொத்த போனஸ் அதற்கேற்ற படி குறையும்.

ஒவ்வொரு க்ளெய்ம் இல்லாத ஆண்டுகளிலும், காப்பீடு தொகை ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிகரிக்கும். உதாரணமாக இது சுமார் 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை இருக்கலாம். இந்தக் கூடுதல் அதிகரிக்கப்பட்ட அடுக்கடுக்கான போனஸ் இன்ஸ்சுரன்ஸ் பாலிசியுடன் சேர்க்கப்பட்டு விடும்.

 

ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள்

ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள்

சுகாதார இன்ஸ்சுரன்ஸ் திட்டங்களின் பிரிமியம் என்பது ஒருவரின் வயது மற்றும் அவருடைய காப்பீடு தொகையைச் சார்ந்தது.

ஆனால் தற்பொழுது சுகாதார இன்ஸ்சுரன்ஸ் திட்டங்களின் பிரிமியம் அவருடைய சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைச் சார்ந்தும் கணக்கிடப்படுவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

IRDAI வெளியிட்ட வழிமுறைகள்

IRDAI வெளியிட்ட வழிமுறைகள்

சுகாதார இன்ஸ்சுரன்ஸ் திட்டங்களில் பாலிசிதாரர்களின் முதல் ஆரம்ப நுழைவு மற்றும் அதனைத் தொடர்ந்து அவர் பாலிசியை புதுப்பித்தலுக்கான வெகுமதி போன்ற வழிமுறைகள் ஏற்கனவே 2013 ம் ஆண்டு IRDAI வெளியிட்ட வழிமுறைகளில் உள்ளது.

தற்போது வாடிக்கையாளரின் ஆரோக்கியம் சார்ந்த பழக்கத்தை ஊக்குவிக்கும் சலுகைகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஆரோக்கியமான வாழ்க்கை

ஆரோக்கியமான வாழ்க்கை

வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை, நோய்த் தடுப்பு மற்றும் ஆரோக்கிய பழக்கம் அடிப்படையில் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகள் பற்றிய விதிமுறைகள் சமீபத்திய இன்ஸ்சுரன்ஸ் வழிகாட்டல்கள் ஏடு மற்றும் கொள்கை ஆவணங்களின் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த வகை நன்மைகள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க மற்றும் அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். மறுபுறம், காப்பீடு நிறுவனங்கள் அதை அங்கீகரித்து பாலிசியை புதுப்பிக்கும் பொழுது பிரிமியத்தில் தள்ளுபடி வழங்குகிறது," என மெஹொரா கூறுகிறார்.

 

மூன்றாம் தரப்பு நிறுவனங்கள்

மூன்றாம் தரப்பு நிறுவனங்கள்

எனினும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் சேவை அல்லது விற்பனையில் எந்த ஒரு தள்ளுபடியும் வழங்கப்படுவதில்லை. உதாரணமாகக் காப்பீடு நிறுவனங்களுக்கு ஒரு ஹெல்த் கிளப்பில் டை அப் இருக்கும் காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்த் கிளப்பின் உறுப்பினர் கட்டணத்தில் சலுகைகளை வழங்க முடியாது. அதற்குப் பதிலாக, பிரீமியம் அல்லது நோய் கண்டறியும் பரிசோதனை அல்லது மருந்துகள் அல்லது நெட்வொர்க்கில் உள்ள வழங்குநர்கள் வழங்கும் ஆலோசனை சேவைகளில் தள்ளுபடிகள் வழங்கப்படும்.

பைலட் தயாரிப்புகள்

பைலட் தயாரிப்புகள்

காப்பீட்டு நிறுவனங்கள பைலட் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த அனுமதி.

இந்த புதிய முயற்சி காப்புறுதித் துறையில் ஒரு புதிய அலை உருவாகக் காரணமாக இருக்கலாம். IRDAI, காப்பீட்டு நிறுவனங்கள் பைலட் பொருட்களை விற்பதற்கான அனுமதியை அளித்ததன் மூலம், அந்த நிறுவனங்கள் சந்தை நிலவரத்தைச் சோதிப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. IRDAI ஒரு ஆண்டு க்ளோஸ்ட் எண்ட் பாலிசி வழங்கக் காப்பீடு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

 

கவனிக்கப்படாத ஆபத்துக்களைச் சமாளிக்க

கவனிக்கப்படாத ஆபத்துக்களைச் சமாளிக்க

பொதுவாக இவ்வகை திட்டங்கள் பொது அல்லது சுகாதார காப்பீட்டு நிறுவனங்களால் முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டங்கள் திரும்ப அழைக்கப்பட்டுவிடும் அல்லது ஒரு வழக்கமான இடைவெளியில் மீண்டும் வெளியிடப்படும். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில் இந்தத் திட்டம் இப்போது வரை காப்பீடு நிறுவனங்களினால் கவனிக்கப்படாத ஆபத்துக்களைச் சமாளிக்க உதவும்.

 

நலன்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது

நலன்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது

எனினும் இது போன்ற சோதனைகள்,பாலிசிதாரர்களின் நலன்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது. "காப்பீட்டாளர் ஜந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியில் தொடரலாம் அல்லது பாலிசியை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் காப்பீடு நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் நலன்களைக் காக்கும் பொறுப்பு சுமத்தப்படுகின்றது. பாலிசிதாரர்களின் பாலிசிகளை அதே நிறுவனத்தின் வேறு ஒரு சுகாதார திட்டத்திற்கு மாற்றிக் கொள்ள இயலும்.

 

புதிய காப்பீடு திட்டங்களைச் சோதித்தல்

புதிய காப்பீடு திட்டங்களைச் சோதித்தல்

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நலன் தொடர்ச்சியாக காக்கப்படுவதோடு காப்பீட்டு நிறுவனங்கள் மேலும் பல புதிய காப்பீடு திட்டங்களைச் சோதிக்க ஊக்குவிக்கப்படுகின்றார்கள் என மஹொரொ தெரிவித்துள்ளார்.

காப்பீடு திட்டம் வளைந்து கொடுக்க வேண்டும், மற்றும் காப்பீடு நிறுவனங்கள் அவற்றை சுதந்திரமாக வடிவமைக்க வேண்டும்

 

நிலையான அறிவிப்புகள்

நிலையான அறிவிப்புகள்

அனைத்து வகையான காப்பீட்டு நிறுவனங்கள், வாழ்க்கை, பொது மற்றும் சுகாதாரம் உட்பட, இப்போது தங்கள் சொந்த முன்மொழிவு வடிவத்தின் ஒரு பகுதியாக நிலையான அறிவிப்புகளை வெளியிட முடியும்.

எனினும் மூன்றாம் தரப்பினரின் எந்த ஒரு ஒப்புதலுடன் கூடிய வெளிப்படையான அல்லது மறைமுகமான கட்டுப்பாடுகள் வருங்கால வாடிக்கையாளர்கள் மீது விதிக்கப்படுவதை இது கண்டிப்பாக தடை செய்கிறது.

 

ஈட்டுறுதி சார்ந்த திட்டங்ளுக்கு அனுமதி

ஈட்டுறுதி சார்ந்த திட்டங்ளுக்கு அனுமதி

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டுறுதி சார்ந்த திட்டங்களை வழங்க அனுமதி இல்லை.

இப்போது முதல், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டுறுதி திட்டங்களை வழங்க அனுமதி இல்லை. எனினும் தற்பொழுது இருக்கும் பாலிசிதாரர்களின் பாலிசிகள், அதன் காலாவதியாகும் காலம் வரை தொடரும். ஆனால் நிறுவனங்களைன் பாலிசி களெய்ம் அனுபவங்கள் புதிய பாலிசியை விற்பனை செய்ய முடியாத தன்மையால் பாதிக்கப்படுமா? "உண்மையுரிமை ஊகங்கள் தயாரிப்பு தொடர்ச்சி மற்றும் வணிக அளவு உட்பட, பல்வேறு காரணிகளை ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விவேகமுள்ள காப்பீட்டு நிறுவனமாகிய , நாம் போதுமான அளவில் ரொக்கத் தொகையை இருப்பில் வைத்துள்ளோம். இருப்புத் தொகை, க்ளெய்ம்களை பூர்த்தி செய்யும் அளவில், மற்றும் எந்த ஒரு பாதகமான பாதிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திவிடாத அளவில் இருக்கின்றது ", என விசாகா தெரிவிக்கிறார்.

 

ஈடுறுதி திட்டங்கள்

ஈடுறுதி திட்டங்கள்

ஈடுறுதி திட்டங்கள் உண்மையில் மெடிக்கெளெய்ம் போன்ற சுகாதார திட்டம் ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளை உடனடியாக ஈடுகட்டும் திட்டம் ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இது போன்ற திட்டங்களை வழங்கத் தொடங்கினர், ஆனால் இப்போது IRDAI அதற்கு ஆப்பு வைத்து விட்டது. ஆயுள் அல்லாத மற்றும் முழுமையான சுகாதார காப்பீடு, நிறுவனங்கள் தற்பொழுதும் இவற்றை வழங்க முடியும். முக்கியமாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் இது போன்ற வரையறுக்கப்பட்ட நலன்கள் தரும் திட்டங்களான விமர்சன நோய் திட்டங்களை வழங்கலாம். இந்தத் திட்டங்களில் உண்மையாக மருத்துவமனையில் செலவழிக்கப்பட்ட தொகைக்குத் தொடர்பில்லாத பணம் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாகப் வழங்கப்படும்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மேலும் ஒற்றை பிரீமியம் கீழ் யூனிட் லின்க்ட் திட்டங்களின் வரும் சுகாதார திட்டங்களை வழங்க முடியாது.

 

இறுதியாக முழு குடும்பமும் பயன்பெறும்

இறுதியாக முழு குடும்பமும் பயன்பெறும்

ஒருவர் தனக்கு போதுமான சுகாதார காப்பீடு கவர் உள்ள திட்டங்களை பெறுவது மட்டுமல்லாமல் அவருடைய முழு குடும்பமும் பயன்பெறும் வகையிலான சுகாதார திட்டங்களைப் பெற இயலும். இளம் குடும்பங்கள் பேமிலி ப்ளோட்டர் திட்டங்களைப் பெற இயலும்.

அந்தத் திட்டத்தில் அவருடைய 25 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வரை பயன் பெற இயலும். 40 வயதில் ஒருவர் ஒரு முக்கியமான உல்நலக் குறைவு திட்டங்களை வாங்குதைப் பற்றிப் பரிசீலிக்கலாம். இன்னும் முக்கியமாக, ஒவ்வொரு 3-5 ஆண்டுகள் இடைவெளியில் பாதுகாப்பின் அளவை மீளாய்வு செய்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 important changes brought about by new health insurance rules

6 important changes brought about by new health insurance rules
Story first published: Saturday, September 17, 2016, 11:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X